Home Blog Page 5646

மது பிரியர்களுக்கு நற்செய்தி!

மது பிரியர்களுக்கு நற் செய்தி

மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பினை ஒத்திவைத்தது. மேலும், மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், மனுத் தாக்கல் செய்தவருக்கு ரூ1,00,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

அதே நேரம், டாஸ்மாக் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டாஸ்மாக் திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதிட்டது. மேலும், டாஸ்மாக்கிற்கு பதில் வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்றும் தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப் பட்டது.

இந்நிலையில், மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

0

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

அவசரத்திற்காக கடன்வாங்கி கட்டமுடியாமல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர், 8 வருடங்களுக்கு முன்பு மஞ்சுளா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக அருகில் இருந்து இறைச்சி கடை ஒன்றில் சரத்குமார் வேலை பார்த்து வந்துள்ளார். வறுமை சூழலின் காரணமாக அப்பகுதி கவுன்சிலர் பாபு என்பவரிடம் கந்துவட்டிக்கு சரத்குமார் கடன் வாங்கியுள்ளார். கடனை வசூலிக்க சரத்குமாரின் வீட்டிற்கு கந்துவட்டி பாபு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனால் சரத்குமார் மனைவி மஞ்சுளாவிற்கும் கந்துவட்டி பாபுவிற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் தொடர்பு குறித்து பாபுவின் மனைவி கிரிஜா சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார். உன் மனைவியும் எனது கணவரும் காதலிக்கிறார்கள் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிரிஜா தெரிவித்தார். இதைக்கேட்டதும் சரத்குமார் அதிர்ச்சியடைந்தார். இதன் பின்னர் மனைவியிடம் சரத்குமார் கேள்வி கேட்டு கண்டித்துள்ளார். இதையடுத்து மஞ்சுளா தனது குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவியின் செயலால் மன உளைச்சலில் இருந்த சரத்குமார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு முன்பு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

என் பெயர் சரத்குமார், நான் இறைச்சி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். குடும்ப கஷ்டத்திற்காக கந்துவட்டி பாபுவிடம் கடன் வாங்கினேன். மற்றவருக்கு கடன் கொடுக்கும் முன்பு அவர்களின் மனைவியின் போன் நம்பர் வாங்குவதை பாபு வாடிக்கையாக வைத்துள்ளார்.

மேலும் தன்னை மாமா என்றுதான் அழைக்க வேண்டும் என்று பாபு சொல்லியிருப்பதாகவும் வீடியோவில் சரத்குமார் கூறிள்ளார். இதனால் என் பேச்சை மீறி பாபுவை மாமா என்று அழைத்தும் அடிக்கடி வீட்டில் சந்தித்து என் குடும்பத்தையே நாசம் செய்துவிட்டான் என்று சரத்குமார் தனது வாக்குமூலத்தை வீடியோவில் பேசியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வெளியான வீடியோ தகவல்கள் உண்மையா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டியால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால் ஃபார்வர்ட் செய்து H.ராஜாவை தெறிக்கவிட்ட தமிழன் பிரசன்னா

0

கால் ஃபார்வர்ட் செய்து H.ராஜாவை தெறிக்கவிட்ட தமிழன் பிரசன்னா

பாஜகவை சேர்ந்த H.ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் புகழ் பெற்றவர். இவரைப் போன்ற ஆட்களை பாஜக ஒதுக்கி வைத்தாலே அந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்துவிடும் என்பது பாஜகவினரே கூறும் கருத்து.

கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவின் தமிழன் பிரசன்னாவின் தொலைப்பேசி எண்ணை தனது சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்த “ராஜா யாரோ தமிழன் பிரசன்னாவாம். மாண்புமிகு பிரதமர் அவர்களை அடிக்கடி இழிவாக பேசும் பழக்கம் உள்ள நபர் என்று கேள்வி. 9566111414 அவரது நம்பர் என்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ராஜவிற்க்கு பதிலடி வகையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “எனக்குப் புதிதாக வேலை செய்ய பாஜக-வின் தேசியச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் திரு.எச்.ராஜா அவர்களை புதிய PROவாக நியமித்து இருக்கின்றேன். அதனால் மக்கள் என்னிடத்தில் பேச அவர் எனது தொலைப்பேசி எண்ணை அவரின் முநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சியில் நான் மக்கள் பணியாற்றுவதால் எனக்கு வரும் அழைப்புகளை என்னுடைய புதிய PRO எச்.ராஜா அவர்கள் எடுத்துப் பேசுவார். அதற்காக எனது அழைப்புகளை நான் அவரின் எண்ணுக்கு ‘Call Forward’செய்துள்ளேன். நன்றாக அழைத்துப் பேசுங்கள். நிறைய அழைப்பு கொடுக்குமாறு நான் பாஜக, ஆர்எஸ்எஸ் சங்கிகளை கேட்டுக் கொள்கின்றேன்” என தமிழன் பிரசன்னா பதிவிட்டிருக்கிறார்.

தான் செய்த காரியம் தனக்கே வினையாக முடிந்ததை எண்ணி நொந்துபோயுள்ளாராம் ராஜா.

‘ஆரோக்ய சேது’ செயலியை ஹேக் செய்த இந்திய இளைஞர் – கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

ஆரோக்ய சேது’ செயலியை ஹேக் செய்த இந்திய இளைஞர் – கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக ‘ஆரோக்ய சேது’ என்ற செயலியை அறிமுகம் செய்த மத்திய அரசு, அனைவரும் தங்கள் அலைபேசியில் அதனை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலி மூலம் மக்கள் தங்கள் இருக்கும் இடத்தருகில் கொரோனா தொற்று பாதித்த பகுதி இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கும், கொரோனா தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தலை மீறாமல் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கும் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இனி ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்ய ‘ஆரோக்ய சேது’ அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க இந்த செயலி பாதுகாப்பானதல்ல என்று இரண்டு ஹெக்கர்கள் இதனுள் ஊடுருவி காண்பித்தார்கள். அதற்கு மத்திய அரசு மறுப்பி தெரிவித்து, செயலி பாதுக்கப்பானது தான் என்று பதிலளித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 மணி நேரத்தில் இந்த செயலியை ஹேக் செய்துள்ளார். இந்த செயலியில் கேட்கப்பட்டுள்ள பெயர், வயது, பாலினம், பயண வரலாறு மற்றும் வைரஸ் அறிகுறி சோதனைகள் ஆகியவற்றை நிரப்பாமல் அதற்க்குள் நுழைந்துள்ளார். இந்த செயலி மிகவும் சுமாரான செயலி என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ‘ஆரோக்ய சேது’ செயலியின் நம்பகத்தன்மை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

தாய்க்கு தெரியாமல் காதலனுடன் சிறுமி செய்த அசிங்கம் : கண்டித்த தாய்க்கு துடிக்க துடிக்க நேர்ந்த கொடூரம்..!!

0

பெரம்பலூரில் பச்சையம்மாள் என்ற பெண் வீட்டில் கேஸ் வெடித்து தீ விபத்தில் இறந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் எதுவும் ஏற்படாததால் போலீசார் இதனை விபத்து என்றே பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு பச்சையம்மாளின் வளர்ப்பு மகளான 16 வயதே நிரம்பிய காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பச்சையம்மாள் மற்றும் சிறுமியை பற்றி தீவிரமாக விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் சிறுமி தொழுதூரில் உள்ள லாட்ஜில் மணிகண்டன் என்ற வாலிபருடன் தங்கி இருப்பதாக தெரிய வந்தது. அந்த சிறுமியையும் மணிகண்டனையும் பிடித்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் சிறுமியின் காதலன் மணிகண்டன் என்றும் அவருடன் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிந்தது. சிறுமியின் காதல் விவகாரம் பச்சையம்மளுக்கு தெரியவந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வந்துள்ளார்.

தாய்க்கு தெரியாமல் காதலனுடன் சிறுமி செய்த அசிங்கம் : கண்டித்த தாய்க்கு துடிக்க துடிக்க நேர்ந்த கொடூரம்..!!

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மணிகண்டனுடன் திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சட்ட விரோதமானது என்பதால் இருவரும் அவரவர் வீட்டில் இருக்க முடிவு செய்தனர்.

இதற்கிடையில் இந்த ரகசிய திருமணம் பச்சையம்மாளுக்கு தெரியவந்ததால் சிறுமியை கண்டித்து புத்தி கூறியுள்ளார். இதனால் காதலியை பார்க்க முடியாத மணிகண்டன் சிறுமியை தேடி வீட்டிற்கு வந்துள்ளான்.

இதை பார்த்த பச்சையம்மாள் மணிகண்டனை வெளியே போகும்படியிம் தன் மகளை பார்க்க வரக்கூடாது என்று கூறி விரட்டியுள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பச்சையம்மாளை உதைத்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளான்.

இந்த தாக்குதலால் நிலை தடுமாறி கீழே விழுந்த பச்சையம்மாள் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். இனிமேல் பச்சையம்மாள் இருந்தால் தன் காதலுக்கு இடையூறாக இருப்பார் என்று கேஸ் சிலிண்டருக்கு தீ வைத்து எரித்துள்ளான்.

இந்த கொலையை விபத்தாக நம்ப வைக்க சிறுமியை வைத்து கேஸ் வெடித்ததாக கூறி காதலனுடன் சேர்ந்து நாடகமாடியுள்ளார்‌. எல்லாம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு மணிகண்டன் அந்த சிறுமியுடன் ஊரை விட்டு தப்பியோடியுள்ளான்.

இந்த நிலையில் பிடிபட்ட சிறுமியையும் மணிகண்டனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காமம் தலைக்கேறிய இந்த நாடக காதல் புள்ளிங்கோ தாயையே துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

0

4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

தொழில் நிறுவன கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் இன்று மாலை தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக கடந்த 12 ஆம் தேதி மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி 4 ஆம் கட்ட ஊரடங்கு சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறினார். நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று கூறினார். மேலும் மாநில அரசுகளின் பரிந்துரைகளின்படியே நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு 3 ஆம் கட்ட ஊரடங்கின் போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் மத்திய அரசு தளர்வினை அறிவித்தது. முடி திருத்தகம் மற்றும் பதப்படுத்தப்பட்ட ஏசி கடைகளுக்கும் தடைவிதித்து மற்ற கடைகள் கட்டுப்பாடுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் வீட்டில் முடங்கிக்கிடந்த பொதுமக்கள் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் 4 ஆம் கட்ட ஊரடங்கு காலத்தில் என்னென்ன தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாடுடன் இயங்குவது குறித்து, தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமையகத்தில் இருந்து காணொளி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக தொழில் நிறுவனங்கள் 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில விதிமுறைகளுடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது பள்ளிகள் திறப்பு? – தமிழக அரசு முக்கிய முடிவு

எப்போது பள்ளிகள் திறப்பு? – தமிழக அரசு முக்கிய முடிவு

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

வரும் ஜுன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டான 2020 – 21ல் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் “கொரோனா பிரச்னையால், கற்றல், கற்பித்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காணும் முறைகளை கண்டறிய வேண்டும். புதிய கல்வி ஆண்டை, துவங்குவது தாமதமாகும் என்பதால், எப்போது பள்ளிகளை திறப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். இடைபட்ட காலத்தை, மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும். ஆசிரியர், மாணவர் இடைவெளியை குறைத்து, தொழில்நுட்ப வழியில் பாடங்களை நடத்தும் முறைகளை கண்டறிய வேண்டும்.

இதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட துறை, கல்வி தொலைக்காட்சி, பெற்றோர் ஆசிரியர் கழகம், யுனிசெப், தமிழக இ – சேவை, சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்த குழுவில் இடம் பெறுவர். இந்த குழுவினர், ஆய்வுகளை விரைந்து முடித்து, முடிவுகளை அரசுக்கு அறிக்கையாக,15 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காலை 10 மணி முதல் வீடு தேடி வரும் மதுபானம் – அரசு அறிவிப்பு

0

காலை 10 மணி முதல் வீடு தேடி வரும் மதுபானம் – அரசு அறிவிப்பு

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது.

இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த மாநில அரசுகள், மதுபானக்கடைகளையுல் சில கட்டு பாட்டுகளுடன் திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் 45 நாளுக்கு மேல் மது பார்க்காத மது பிரியர்கள், அலை அலையாக மதுக்கடையை மொய்ததன் விளைவு, சில மாநிலங்களில் மதுக்களின் விலைகள் ஏறப்பட்டன, சில மாநிலங்கள் மதுக்கடைகளை அரசே மூடியது, சில மாநிலங்களில் மதுக்கடைகளை மூடே நீதிமன்றமே உத்தரவிட்டது.

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த காலகட்டத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் விற்க மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளன.

மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மதுபானம் தொடர்பாக பெரும் கூட்டத்தை தவிர்க்கும் அனைத்து கடைகளையும் மூடி விட்டது. இந்நிலையில் தற்போது ஆன்லைனில் ஆர்டர்கள் பெறப்பட்டு வீட்டிற்கே சென்று மதுபானம் வழங்க (Door Delivery) அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்று (மே 15 ஆம் தேதி) காலை 10 மணி முதல் வீட்டிற்கே சென்று மதுபானம் விநியோகம் தொடங்கும் என்று மாநில அரசு தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தரவுப்படி, மதுக்கடைகள் 10 பேருக்கு மேல் ஊழியர்களை வேலைக்கு வைக்கக்கூடாது, வீட்டு விநியோகம் மேற்கொள்பவர் ஒரு சமயத்தில் 24 பாட்டில்களுக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் – உஷார் மது பிரியர்களே

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் – உஷார் மது பிரியர்களே

மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், கடந்த 3ம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பல எதிர்ப்புகளை மீறிக் கடந்த 7ம் தேதி சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகளைத் திறந்தது தமிழக அரசு. மதுக்கடைகளைத் திறக்க பல்வேறு விதிமுறைகளை உயர் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், அவை எதையுமே பெரும்பாலான கடைகளில் பின்பற்றாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதி மன்றம், டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஊரடங்கு முடியும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே மதுக்களை விற்க அனுமதியளித்தது. அந்த வழக்கின் மீது மேல் முறையீடு செய்திருக்கும் தமிழக அரசு தற்போது வரை தமிழக அரசு இணையதளமோ, செயலியோ மது விற்பனைக்கென்று அதிகார்வமாக அறிவிக்கவில்லை.

இதனையடுத்து இதன் மீது நடவடிக்கை எடுத்து சைபர்லிங்க் காவல்துறை இரவோடு இரவாக அந்த இணையதளத்தை முடக்கியுள்ளது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை

ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் ஏற்கனவே நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மே 17க்கு பின் உள்ளூர் பேருந்துகளை இயக்க தமிழக அரசு தயாராக்கி வருகிறது. தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு செல்ல பேருந்து இயக்கப்படுமா என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்திற்குள் பயணிக்க விரும்புபவர்கள் தங்கள் சொந்த போக்குவரத்தின் மூல பயணிக்கலாம் என்றும் அப்படி பயணிப்பவர்கள் தனிமை படுத்துதல் வழிமுறையை பின்பற்றி தனிமைப்படுத்திய பின்பே வெளியில் வர அனும்பதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சொந்த மாநிலம் மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் நபர்கள் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள தமிழகத்தை ஒட்டி இருக்கும் மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலம் செல்ல 044-24794709 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், அவர்கள் செல்ல வேண்டிய மாநிலத்துக்கு ஏற்ப திட்டமிட்டுள்ள பேருந்து குறித்த விவரம் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.