Home Blog Page 5659

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொது தேர்வு எப்போது? – தமிழக கல்வி துறை அறிவிப்பு

மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்த திட்டமிட்டிருந்தது தமிழக கல்வி துறை. அதற்க்கான அட்டவனை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைத்தது தமிழக அரசு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழ்நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது அரசு. 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் குறித்த மாறுபட்ட செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. 10ம் வகுப்புக்கும் தேர்வு வைக்காமல் திருப்புதல் தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை அறிவிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு அடிப்படி கல்வி தகுதியாக கருத்தப்படுவதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார்

கடந்த வாரம் கல்லூரிகளை நெறிமுறை படுத்தும் UGC எனப்படும் பல்லைக்கழக மானியக்குழு, கரோனா சூழல் சரியானால் ஜூலை மாதம் டெர்மினல் செமஸ்டர் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் நிலைமை சீரடையாவிட்டால் பின்னர் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அறிகுறி இல்லாமலேயே உறுதியாகும் கொரோனா தொற்று – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகம். இந்நிலையில் கொரோனா தடுப்பைச் சிறப்பாகக் கையாளும் பொருட்டு கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்திருந்தது தமிழக அரசு.

சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று காலை கோயம்பேடு பகுதிக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தவர் “கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப் படுபவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. ஆனால் அவர்களுக்குப் பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது.

கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது. கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை; ஆனால் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

0

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலுள்ள, வுகானில் பரவ துவங்கிய கொரோனா உலகத்தையே உலுக்கி வருகிறது.

கடந்த மாதம் வரை பாதிப்பு பட்டியலில் முதலிடம் வகித்த ஸ்பெயினை கடந்த சில வாரங்களுக்கு முன் முந்தியது அமெரிக்கா. அமெரிக்காவில் இது வரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது என்பதற்கு, ஏராளமான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்த வைரஸ் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

இந்த வைரஸ் பரவலில் சீனாவின் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த வைரஸ் குறித்து முக்கிய தகவல்களை பெய்ஜிங் பொறுப்பற்ற முறையில் மறைப்பதாகவும், அதனால் பெய்ஜிங்கே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் எங்கு உருவானது என்பது குறித்த தகவல்களை அறிய அமெரிக்க உளவாளிகள் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் வுஹான் சந்தையில் விற்பனை செய்யப்படும் வௌவால் உள்ளிட்ட விலங்குகளால் இந்த வைரஸ் பரவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தற்போது ஆராய்ச்சி மையத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரான பாம்பியோ செய்தியாளர்களிடம் பேசுகையில் “சீனாவின் வுகான் நகரில் இருக்கும் ஆய்வகங்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என அமெரிக்க உளவுத்துறை கூறும் கருத்தில் நான் முரண்படவில்லை.

அதே சமயம், பல சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனத் தெரிவிப்பதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வுகானில் இருக்கும் ஆய்வகங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இல்லாதவை, தரம் குறைந்தவை, போதுமான அளவு சுத்தம் இருக்காது. இந்தக் காரணங்களால் வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “சீனா கொரோனா வைரசின் தன்மை தெரிந்து திட்டமிட்டே உலகிற்கு மறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்குரிய மருந்துகள், மருந்துப் பொருட்களை இருப்பு வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்புக்கும் இதன் தாக்கம் குறித்த உண்மைத் தகவல்களைச் சீனா தெரிவிக்கவில்லை. ஜனவரி மாதம் தான் இந்தத் தகவலை சீனா வெளியுலகிற்குத் தெரிவித்தது. கொரோனா வைரஸ் ஆபத்து குறித்துப் பேசிய மருத்துவர்களைக் கட்டுப்படுத்திய சீனா, அதை உலகிற்குத் தெரிவிக்கத் தாமதப்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த கருத்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்?

0

ஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்?

உலக அளவில் கிரிக்கெட்டை நிர்மாணிக்கும் ஐசிசி , ஒவ்வொரு ஆண்டும் தர வரிசையை வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் வெளியிட்டுள்ள தர வரிசையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் டி20 தர வரிசையில் ஆஸ்திரேலியாவும், ஒரு நாள் தர வரிசையில் இங்கிலாந்தும் முதலிடம் வகுக்கிறது.

அக்டோபர் 2016 முதல் தொடர்ந்து 43 மாதங்கள், ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் வகித்து வந்த இந்திய கிரிக்கெட் அணி, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் கைவிடப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டும் உள்ள நிலையில் எப்படி இந்திய அணி சரிவைச் சந்தித்தது என்ற கேள்வி எழலாம்.

சமீபத்திய தரவரிசை 2019 மே முதல் 100 போட்டிகளிலும், முந்தைய இரண்டு ஆண்டுகளில் 50 சதவீதத்திலும் விளையாடிய அனைத்து போட்டிகளையும் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய தரவரிசை இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான சாதனைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் வரையப்பட்ட பட்டியலாகும். அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் அதிகம் இருந்த காரணத்தினாலேயே அது முதலிடத்தை பிடித்துள்ளது.

தற்போதைய பட்டியலில் இந்தியா மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரிசையில் இந்தியாவே முதலிடத்தை வகுத்து வருவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு – இன்று முதல் அமல்

0

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தமிழக அரசு – இன்று முதல் அமல்

அரசு வருவாயைப் பெருக்கம் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்துவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன் படி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரியை 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3.26 ரூபாயும், டீசல், 2.51 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 72.28 ரூபாயாக இருந்த பெட்ரோலின் விலை 75.54 ரூபாயாகவும், ரூபாய் 65.71 காசுகளாக இருந்த டீசல் 68.22 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலையேற்றம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் கட்டமாக மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 14 தேதி வரை முதன் முதலாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரவிருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என நிற வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. மாநில அரசுகள் அதனைப் பின்பற்றி ஊரடங்கில் தளர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிக கொரோனா பாதித்த இடமாகச் சென்னை உருவெடுத்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கில் ஐடி நிறுவனங்கள், கட்டுமான பணிகள், தொழில் நிறுவனங்கள், மற்றும் கடைகள் இயங்க நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

“அரசு உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இல்லை என ஆணையர் பிரகாஷ்,தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல்வர் உத்தரவின்படி, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கபட்டு வருகிறது.

முதல்வர் தலைமையில் 02.05.2020 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படியும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 04 முதல் மே 17 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

கட்டுமானப்பணி நிபந்தனை:

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து (Except Containment Zones) இதர பகுதிகளில் கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

ஐடி, தொழிற் நிறுவனங்களுக்கான நிபந்தனை:

· சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units சென்னை மாநகராட்சி ஆணையரின் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும்.

நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT & ITeS) 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

அத்திவாசிய கடைகள், உணவகங்கள் திறப்பதற்கான நிபந்தனை:

· அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e-Commerce), ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.

தனிக்கடைகள் குறித்த நிபந்தனை:

அனைத்து தனிக் கடைகள் (Standalone and neighborhood shops) (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

தனி நபர்கள் பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக் செயல்பாடு:

· பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் (Home Care Providers), வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சியின் http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம்.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் (Agro Processing), தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ATM, ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

பணியாளர்கள், தொழிலாளர்களுக்கான நிபந்தனை:

அனைத்து இடங்களிலும் ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். கிருமிநாசினி மருந்துகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணித்து அந்தந்த நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடக்கூடாது. மேலும், அரசின் உத்தரவுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

கனிம, சுரங்கப்பணிகள்

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.

பணிகளை தொடங்க அனுமதி பெறுவது எப்படி:

தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும் பணிகளைத் தொடங்க http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நிறுவனத்தின் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரவேண்டும். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செயல்பட தடையில்லை:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புர தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம்.

எவைகள் செயல்பட அனுமதி இல்லை:

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள். அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து.டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து, தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

எப்போது முதல் செயல்பட அனுமதி:

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 06.05.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொன்று குவிக்கும் கொரோனா… தவிக்கும் உலக நாடுகள்… பதற வைக்கும் பட்டியல் வெளியீடு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 35 லட்சத்து 4 ஆயிரத்து 129 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 11 லட்சத்து 25 ஆயிரத்து 48 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொன்று குவிக்கும் கொரோனா... தவிக்கும் உலக நாடுகள்... பதற வைக்கும் பட்டியல் வெளியீடு..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 40,263 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,306 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 10,887 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 12,296/521
குஜராத் – 5,055/262
டெல்லி – 4,122/64
ராஜஸ்தான் – 2,772/65
மத்திய பிரதேசம் – 2,846/156
உத்தரபிரதேசம் – 2,626/43
தமிழ்நாடு – 2,757/29
தெலுங்கானா – 1,063/28
கேரளா – 500/04
ஆந்திர பிரதேசம் – 1,583/33
கர்நாடகா – 606/25
ஜம்மு & காஷ்மீர் – 666/08
மேற்கு வங்கம் – 922/33
பஞ்சாப் – 772/20
ஹரியானா – 394/04
பீகார் – 482/04
அசாம் – 43/01
சண்டிகர் -94/0
உத்தர்கண்ட் – 59/0
லடாக் – 40/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 56/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 160/01
பாண்டிச்சேரி – 08/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 115/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 04/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,341 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

கொன்று குவிக்கும் கொரோனா... தவிக்கும் உலக நாடுகள்... பதற வைக்கும் பட்டியல் வெளியீடு..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி ஒரு ஞான சூன்யம் : கேப் விடாமல் கலாய்க்கும் ஹச்.ராஜா..!!

0

கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில்‌ விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இந்த தகவலை பார்த்த ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ராகுல் காந்தி கூறியதாவது ‘பாஜகவினர் சப்தம் இல்லாமல் பல கோடி கடன்களை தள்ளுபடி செய்து நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ததாக’ கூறியிருந்தார். இதை பார்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிசையாக ட்விட்களை போட்டு விளக்கம் கொடுத்தார்.

இப்படி ஒரு குழப்பம் ஏற்பட காரணம் சில நாட்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்கள் பெறப்பட்டள்ளது. அதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பலரிடம் இருந்து வர வேண்டிய கடன்கள் தள்ளி வைக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்த தகவலை தவறாக புரிந்து கொண்ட சிலர் பல ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ததாக பரப்பி விட்டனர். இந்த குழப்பத்தை தீர்க்கும் சாக்கில் ஹச்.ராஜா ராகுல் காந்தி ஒரு ஞான சூன்யம் என்று கலாய்த்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மதுக்கடையில் மர்ம வேலை பார்க்க வந்த புள்ளிங்கோ : பூட்டை தொட்டதும் பூதம் கிளம்பியதால் பரபரப்பு..!!

0

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது விருக்கல்பட்டி கிராமம். உடுமலைப்பேட்டை நகரை விட்டு வெளியில் அமைந்துள்ளது இந்த விருக்கல்பட்டி கிராமம்.

இந்த கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த மதுக்கடை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டிய இருந்துள்ளது.

இதற்கிடையில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்கும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வந்தது. மேலும் சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் போதைக்காக கண்டதையும் குடித்து இறக்கும் சம்பவங்களும் பலரை வருத்தப்பட செய்தது.

இந்த நிலையில் விருக்கல்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு கொள்ளையடித்தால் அவற்றை கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கலாம் என முடிவு செய்தனர்.

அந்த மர்ம கும்பல் ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இரவு வேளையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். மதுக்கடையை கொள்ளையடிக்க சுவற்றை தொலையட்டும் பூட்டை உடைத்து முயற்சி செய்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மதுக்கடையில் காலி மது பாட்டில்கள் கூட இல்லாமல் தேடிச்சென்ற புள்ளிங்கோ டென்ஷன் ஆகியுள்ளனர். ஊரடங்கு காலத்தில் ஊருக்கு வெளியே இருக்கும் மதுக்கடைகளில் உள்ள பாட்டில்களை பாதுகாப்பான இடத்திற்கு அரசு அதிகாரிகளால் மாற்றப்பட்டுள்ளது.

இது தெரியாமல் வெறித்தனமாக பூட்டை உடைத்த மர்ம கும்பலை தற்போது போலிஸ் வலை வீசி தேடி வருகிறது.

திமுக பிரமுகர் செய்த அசிங்கமான செயல் : கட்சி தலைமையை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!!

0

விருதுநகர் பகுதியில் ஏ.எஸ்.பி சிவப்பிரசாத் தலைமையிலான போலிசார் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போ அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக சென்ற இருவரை பிடித்த விசாரித்துள்ளனர்.

அந்த இருவரையும் விசாரித்ததில் மது அருந்தி இருப்பது தெரியவந்தது, இதனால் இவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு எங்கு மது கிடைத்துள்ளது என்று விசாரித்த போது திடுக்கிட்டு தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்த இருளப்பன் தலைமையிலான போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஜீவா லாட்ஜில் சோதனை செய்த போது அங்கு சட்ட விரோதமாக பார் நடத்தி மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பார் மேனேஜர் செல்வகணேஷ்(31), மது விற்பனையாளர்கள் கந்தசாமி(51) மற்றும் ராம சுப்பிரமணியன்(53) உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அந்த சோதனையில் 4,706 மது பாட்டில்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டது.

இந்த சம்பவத்தில் லாட்ஜின் உரிமையாளர் மற்றும் திமுக பிரமுகரான ராஜகுருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பாரின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் நெருங்கிய உறவினர் என்று தெரியவருகிறது.