Home Blog Page 5660

ரயில் நிலையத்தில் தாயின் தவறான செயல் : பெண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்..!!

0

சேலம் மாவட்டத்தின் கிழக்கு மண்டலத்தில் உள்ளது ஆத்தூர் ரயில் வண்டி நிலையம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இங்கு சரக்கு வண்டிகளை தவிற மற்றவை வருவதில்லை.

இந்த நிலையில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு ஒரு பெண் தன்னுடைய 3 வயது பெண் குழந்தையுடன் வந்துள்ளார். நதியா என்ற அந்த பெண் குழந்தை தாயின் கண் முன்னே அங்கும் இங்குமாக ஓடி விளையாடி கொண்டு இருந்தது. தன்னுடைய குழந்தை இங்கு தானே விளையாடி கொண்டு இருக்கிறது என்று கவனக்குறைவாக இருந்துள்ளார்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஒரு குழந்தையின் மீது மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தது.

அந்த குழந்தையின் தாய் கவனமாக இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று அங்கு இருந்தவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

உயரும் பலி எண்ணிக்கை… உயிர் பயத்தில் மக்கள்… தப்பிக்குமா இந்தியா..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 34 லட்சத்து 26 ஆயிரத்து 711 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 10 லட்சத்து 92 aayirathu 715 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

உயரும் பலி எண்ணிக்கை... உயிர் பயத்தில் மக்கள்... தப்பிக்குமா இந்தியா..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 37,465 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,221 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 9,951 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 11,505/485
குஜராத் – 4,721/236
டெல்லி – 3,738/61
ராஜஸ்தான் – 2,720/65
மத்திய பிரதேசம் – 2,660/137
உத்தரபிரதேசம் – 2,328/42
தமிழ்நாடு – 2,757/28
தெலுங்கானா – 1039/26
கேரளா – 497/04
ஆந்திர பிரதேசம் – 1,525/33
கர்நாடகா – 598/22
ஜம்மு & காஷ்மீர் – 639/08
மேற்கு வங்கம் – 795/33
பஞ்சாப் – 480/19
ஹரியானா – 360/04
பீகார் – 471/03
அசாம் – 43/01
சண்டிகர் -88/0
உத்தர்கண்ட் – 58/0
லடாக் – 22/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 56/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 149/01
பாண்டிச்சேரி – 08/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 111/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,312 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

உயரும் பலி எண்ணிக்கை... உயிர் பயத்தில் மக்கள்... தப்பிக்குமா இந்தியா..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஏரிக்கு சென்ற பெண்கள் : அலட்சியம் காட்டியதால் நேர்ந்த பரிதாபம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள மணிமங்கலம் பகுதியில் உள்ளது கரசங்கால் ஏரி. அதே பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் கரசங்கால் ஏரிக்கு துணி துவைக்க சென்றுள்ளனர்.

இந்த நான்கு பெண்களில் இருவர் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், மற்ற இருவர் இளம் பெண்கள் என்று தெரிய வருகிறது. இவர்கள் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்ததால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏரிக்கு துணி துவைக்க கிளம்பியுள்ளனர்.

இந்த பெண்கள் கரசங்கால் ஏரியில் துணி துவைத்த பிறகு அங்கேயே ஒன்றாக சேர்ந்து குறித்துள்ளனர். குளித்து கொண்டு இருக்கும் போது இளம் பெண் ஒருவர் சேற்றில் சிக்கி மூழ்க தொடங்கினார், அவரை காப்பாற்ற அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராக சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மற்றவர்களை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்று மூழ்கி இறந்துவிட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இந்த பெண்கள் நான்கு பேரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருந்திருந்தால் இப்படி ஒரு விபரீதம் நிகழந்திருக்காது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் பலியான நான்கு பெண்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்த புதுமண பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : போலீசார் தீவிர விசாரணை..!!

வேலூர் அடுத்த உள்ள குடித்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சங்கர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதில் மணமகன் சங்கருக்கும் மணமகள் மகாலட்சுமிக்கு 22 வயது வித்தியாசம் இருந்துள்ளது. புது மாப்பிள்ளை சங்கருக்கு 42 வயதும் புதுமண பெண் மகாலட்சுமிக்கு 20 வயதும் நிரம்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் எளிமையாக நடந்து முடிந்தது. இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் மகாலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த வந்த போலீசார் மணமகன் சங்கரையும் அவரது குடும்பத்தினரையும் தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் புதுமண பெண் மகாலட்சுமி என்ன செய்கிறார் என்று கவனிக்காமல் இருந்ததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மற்ற உறவினர்களையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள்

0

கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களிடையே சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டாலும்,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது. 

தற்போதைய நிலையில் சென்னையில் அதிக அளவாக 1,082 பேர்களும், அதனையடுத்து கோவையில் 141 பேர்களும் மற்றும் செங்கல்பட்டில் 86 நபர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக கோயம்பேடு மார்கெட் பகுதி தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.  இதனால் கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது.  இதன் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து நகரில் மருந்து, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும்.  மேலும் இந்த ஊரடங்கை மதிக்காமல மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்திலும் 29 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டிருக்கிறது.  இதன் காரணமாக திருவாரூரிலும் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  இதனால் அந்த மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறே சென்னை கோயம்பேட்டிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 20 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, கடலூர், திருவாரூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் கடலூர், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைபோலவே தென்காசி மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளதால் அங்கேயும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் 57 நபர்களும்,தென்காசியில் 38 நபர்களும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதனால், அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளான மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு!

0

தேர்தல் நடத்த அனுமதி – தப்பியது உத்தவ் தாக்கரே அரசு!

கடந்த ஆண்டு மஹாராஷ்ட்ராவில் மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இனைந்து ஆட்சியமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தவ் தாக்கரே சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத காரணத்தால் ஆட்சியமைத்து 6 மாதங்களுக்கு முன்னர் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே வரும் 28ம் தேதிக்குள் தேர்தலில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் தற்போது நாடுமுழுவதும் கொரொனா அச்சுறுத்தல் காரணமாகத் தேர்தல் நடத்த முடியாத நிலை நீடிப்பதால், சட்ட மேலவை நியமன உறுப்பினர் ஆவதற்கு உத்தவ் தாக்கரே முயற்சி செய்தார். அதன்படி, அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.

இந்நிலையில் ஆளுநர் இந்த கடிதம் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த ஆணையம் ஒப்புதல் அளித்ததால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது.

வெளியே வந்தார் வட கொரிய அதிபர் கிம்ஜாங் – மர்மம் விலகியது

0

வெளியே வந்தார் வட கொரிய அதிபர் கிம்ஜாங் – மர்மம் விலகியது

கடந்த இரண்டு வாரங்களாக உலகம் முழுவதிலும் விவாத பொருளாம மாறியிருந்த வட கொரிய அதிபர் கிம்ஜாங் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.

வடகொரிய அதிபரன கிம்ஜாங், ஆண்டு தோறும் ஏப்ரல் 15ம் அவரது தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாத்ததில் இந்த ஆண்டு கலந்து கொள்ளவில்லை. இதனால் அது பல்வேறு வதந்திகளுக்கு வித்திட்டது.

சமீபத்தில் இவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர கணகாணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் மூளை சாவு அடைந்ததாக தகவல் பரவியது. ஒரு சில ஊடகங்கள் அவரின் இறுதி ஊர்வலம் குறித்த தகவலெல்லாம் கூட வெளியானது.

இந்நிலையில் வட கொரிய மீடியாக்கள் மே 1ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம்ஜாங் பங்கேற்று விழாவை சிறப்பித்த படங்களை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த படங்கள் வைரலாகி வரும் நிலையில் அவர் குறித்து பரப்பப்பட்ட வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளது.

கொன்று குவிக்கும் கொரோனா… அச்சத்தில் மக்கள்… உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 34 லட்சத்து 674 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 10 லட்சத்து 81 ஆயிரத்து 590 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொன்று குவிக்கும் கொரோனா... அச்சத்தில் மக்கள்... உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 35,265 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,152 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 9,065 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 10,498/459
குஜராத் – 4,395/214
டெல்லி – 3,515/59
ராஜஸ்தான் – 2,584/58
மத்திய பிரதேசம் – 2,660/137
உத்தரபிரதேசம் – 2,281/41
தமிழ்நாடு – 2,526/28
தெலுங்கானா – 1038/26
கேரளா – 497/04
ஆந்திர பிரதேசம் – 1,463/33
கர்நாடகா – 576/22
ஜம்மு & காஷ்மீர் – 639/08
மேற்கு வங்கம் – 795/33
பஞ்சாப் – 480/19
ஹரியானா – 313/03
பீகார் – 466/02
அசாம் – 42/01
சண்டிகர் -56/0
உத்தர்கண்ட் – 57/0
லடாக் – 22/0
அந்தமான் & நிக்கோபார் -27/0
சத்தீஸ்கர் – 56/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 40/01
ஒடிசா – 143/01
பாண்டிச்சேரி – 08/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 109/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 02/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,312 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

கொன்று குவிக்கும் கொரோனா... அச்சத்தில் மக்கள்... உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

பிரசவத்திற்கு பிறகு இறந்த கர்ப்பிணி… சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு… அரசின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு..!!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல லட்சம் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கஷ்டபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். அங்கு மகப்பேறு முடிந்த சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தாய் மற்றும் சேயின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடலை உறவினர்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி தகனம் செய்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அந்த கர்ப்பிணிக்கு கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வந்தது. அந்த சோதனையில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது.

மருத்துவமனையில் அந்த கர்ப்பிணிக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகாரணங்களும் இன்றி சிகிச்சையளித்த 10 மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா பாதிப்பு குறித்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இறந்த கர்ப்பிணியின் இறுதிச்சடங்கில் 40-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். நோய் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியாமல் வழக்கமான முறையிலேயே சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றுள்ளது.

பொதுவாக மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாக இறந்த பெண் மற்றும் குழந்தையின் உடலை வழங்கியதால் இந்த சிக்கல் உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

தற்போது 25 க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40க்கும் அதிகமான உறவினர்களையும் சரியான நேரத்தில் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் நோயாளிகளை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களே சமயோஜிதமாக செயல்படவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

0

இந்தியா முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 23ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கு தளர்த்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து மத்திய அரசு மாநில அரசுடனும், வல்லுநர் குழுவுடனும் ஆலோசித்து வந்தது.

இந்நிலையில் முக்கிய அறிவிப்பாக இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. எந்தெந்த பகுதிகளி எந்த மாதிரி தளர்வுகள் என்பதை விரைவில் மாநில அரசுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.