Home Blog Page 5688

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!

0

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!

நடிகர் விமலின் மனைவி ஒரு மருத்துவர். தற்போதைய சூழலில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தும், கொரோனாவை அழிக்க பல நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் அறிக்கி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் சினிமா திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் அவரது குடும்பத்துடன் மணப்பாறையில் வசித்து வருகிறார். அவரது மனைவி சொந்த ஊரிலேயே மருத்துவம் பார்த்து வருகிறார்.

எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகர் விமலின் மனைவி, இந்த இக்கட்டான ஊரடங்கு சூழலிலும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருப்பினும், சிகிச்சைப்பெற வரும் நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் அளித்து அவர்களை நோயிலிருந்து குணமாக்கும் நல்ல டாக்டராக திகழ்கிறார்.

இதுகுறித்து அவரது கணவர் நடிகர் விமலிடம் கேட்டபோது; என்னுடைய மனைவி ஒரு மருத்துவர் என்பதில் எனக்கு பெருமை. எப்போதுமே அவர் சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். ஆகையால் உலக நானுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க கடந்த வாரம் வரை மருத்துவமனைக்கு சென்று கர்ப்பிணியாக இருந்தும் பணியாற்றி வந்தார்.

நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம். கிராமத்து மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

0

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

கொரோனாவை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் வீட்டில் தனிமைப்படுத்திய நபர்களின் செல்போன் எண்களை டிராக் செய்யவுள்ளதாக டெல்லியின் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் நோய் தொற்றினை தடுக்க கொரோனா அறிகுறி கொண்ட பலர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமையில் வைக்கப்பட நபர்கள் வெளியே வருவதை தடுக்க அவர்களின் செல்போன் எண் மூலம் டிராக் செய்ய டெல்லி காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; காவல்துறை கண்காணிப்பில் இருப்பவர்களின் கைபேசி எண்களைக் கொண்டு அவர்கள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்படும் மற்றும் மற்றவரை தொடர்பு கொண்டு பேசுவதும் கண்காணிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த கண்காணிப்பு செயல்பாட்டில் முதலில் 11 ஆயிரம் கைபேசி எண்கள் முதற்கட்டமாக கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக 14 ஆயிரம் கைபேசி எண்களுடன் மொத்தமாக 25 ஆயிரம் செல்போன் எண்களை டெல்லி போலீசார் டிராக் செய்து வருகின்றனர்.

கொரோனா அறிகுறியுடன் வீட்டில் இருந்து வெளியில் வராமல் தடுக்க இந்த செல்போன் டிராக் பார்முலா பயன்படும் என்று டெல்லி முதல் கூறினார். இந்த பார்முலா சிங்கப்பூரில் நடைமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்!

0

பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்!

இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மருத்துவ மற்றும் இதர அவசர தேவைகளுக்காக பிரதமர் மோடி மக்களிடம் நிவாரண நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து இந்திய தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர்,நடிகைகள் நாட்டிலுள்ள சிறுவர்கள் வரை நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அளவில் 1,500 கோடி ரூபாயை பிரபல மோட்டார் நிறுவனமான டாடா கம்பெனி அதிகபட்ச தொகையாக வழங்கியது. இதற்கு அடுத்தபடியாக அதிகபட்ச நிவாரண நிதியாக விப்ரோ நிறுவனம் 1,125 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து விப்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் இந்த தொகையானது கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபடும் நபர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் இயக்குனர் அசீம் பிரேம்ஜி அவர்கள் இந்த தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!!

0

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் உட்பட  இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளுக்கான ரூ.1,000 கொரோனா நிவாரண நிதி இன்று வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 02 (இன்று) முதல் வருகின்ற 15 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த வகையில் ரேசன் கடை ஊழியர்களின் மூலம் அனைத்து அந்தந்த பகுதி வீடுகளுக்கும் சென்று நேற்று டோக்கன் வழங்கியதோடு இன்றும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த டோக்கனில் பொருட்கள் வாங்க வேண்டிய ரேசன் கடை, குடும்ப தலைவரின் பெயர், அட்டை எண், தேதி, நேரம், நாள் மற்றும் டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அவரவர் டோக்கனில் கூறப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் உங்களுக்கான நிவாரண பணம் மற்றும் இலவச பொருட்களை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரண பொருட்களை வழங்கும் ரேசன் கடை ஊழியர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசம் மற்றும் கையுறை ஆகிய பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேரம் தவறி வரும் நபர்களுக்கு மற்ற நாளில் கிடைக்கும் என்னு கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். மேலும் நியாய விலைக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

குழந்தை பெற்றாலும் கிளாமர் குறையாத நடிகை : வெளியான சேட்டை விடியோ!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

இந்த நிலையில் ஐ, மதராசபட்டினம் உள்ளிட்ட படங்களின் நாயகி, எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் செய்த டிக்டாக் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எமி பூக்களை பார்க்க சொல்வது போலவும் அதற்கு அக்குழந்தை திரும்பி பார்ப்பது போலவும் உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடிகைகள் பலர் தங்கள் வீட்டில் முடிக்கிறார் கிடக்கும் நிலையில் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் குழந்தை பெற்ற பிறகும் உங்கள் அழகு குறையவேயில்லை என்று அசடு வழிந்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் கொரோனா பற்றி 50நாட்களுக்கு முன்பே எச்சரித்த தலைவர் : மத்திய அரசு மெத்தனம்!

0

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பாராளுமன்றத்தில் கொரோனா வைரஸின் ஆபத்தை உணர்த்தும் விதமாக எடுத்து கூறியுள்ளார். அவர் மாநிலங்கள் அவையில் பேசி அந்த தகவலை அன்றே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த டுவிட் தற்போது தமிழக மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பல விருதுகளை பெற்ற சாதனையாளர் அன்புமணி ராமதாஸ், அவரது எச்சரிக்கையை அன்றே செவி கொடுத்து கேட்டிருக்கலாம் என மத்திய அரசை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

கொரோனாவின் கோரதாண்டவம் விரைவில் 50 ஆயிரத்தை எட்டும்! அதிர்ச்சி தகவல்

0

கொரோனாவின் கோரதாண்டவம் விரைவில் 50 ஆயிரத்தை எட்டும்! அதிர்ச்சி தகவல்

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உலகளவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸால்
9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து 1.93 லட்சம் பேர் மருத்துவர்களின் தீவிர மருத்துவ சிகிச்சையால் நல்ல முறையில் குணமடைந்துள்ளனர். பலாயிரம் பேர் கொரோனா தொற்றின் பாதிப்பில் தவித்து வருகின்றனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பமான கொரோனா தாக்குதல் தற்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி தனது கோரதாண்டவத்தை ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஈரான் ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உச்சகட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 12 ஆயிரம் பலியை தாண்டியது, பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது இதேபோன்று அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகளவில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொரோனோ இரண்டு வாரங்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று டிரம்ப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்திய பின்னரும் மக்கள் வெளியே சுற்றுவது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா : உலகம் முழுவதும் 46 ஆயிரத்திற்கு மேல் பலி!

0

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 9 லட்சத்து 28 ஆயிரத்து 98 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 1 லட்சத்து 92 ஆயிரத்து 632 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, அதில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 727 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 667 பேர் பலியாகியுள்ளனர்.

ஃபிரான்ஸில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 563 பேர் பலியாகியுள்ளனர்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

0

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் ஊரங்கு உத்தரவை மத்திய அரசுப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நாளை காலை 11மணிக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

கொரோனா பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துக்கொண்டப் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதனால் நாளை மாநில முதல்வர்களிடம் அவர்கள் மாநிலத்தில் எத்தனைப் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது மாநிலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது என்பது பற்றிக் கேட்டறிவார் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரைன்சிங் மூலம் நடத்தப்படுகிறது.

நாளை காலை 11மணிக்கு பிரதமர் அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களோடு கொரோனா பாதிப்பைப் பற்றி ஆலோசனை நடத்துவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கொரோனா பாதிப்பு

0

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கொரோனா பாதிப்பு

இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முதல்வர் அவர்கள் டெல்லி மாநாட்டில் 1131 பேர் பங்கேற்றுள்ளனர் என்றும் அதில் 515பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.

இன்று புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இருவவருக்கு நோய்த்தொற்று இருப்பதுக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ராசிபுரத்தில் பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4பேருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் 17பேருக்கும் கும்பகோணத்தில் 12பேருக்கும் ஈரோட்டில் மூவருக்கும் ராசிபுரத்தில் 8 பேருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.