Home Blog Page 5689

சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

0

சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

CBSE : சிபிஎஸ்இ 1 முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் அதாவது அனைவரும் “ஆல் பாஸ்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற பாதுகாப்பு எண்ணத்திலேயே அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கும் கட்டாயத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக தமிழகம், புதுச்சேரி, குஜராத், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அறிவித்தன. மாநில அரசுகளின் திடீர் தேர்ச்சி அறிவிப்பினால் பள்ளி மாணவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படித்து வரும் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆல் பாஸ் அறிவிப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொண்ட பருவத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திலாவது ஒயின்ஷாப்பை ஓப்பன் பண்ணுங்க : ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வந்தனர். இவ்வாறு சாராயம் கிடைக்காத காரணத்தால் மது பிரியர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர்.

மேலும் சில இடங்களில் கள்ள மார்க்கெட்டில் சாராய பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாகவும் அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதும் அதை குடித்த சிலர் மோசமாக பதிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ‘மாலையில் சில மணி நேரமாவது ஒயின்ஷாப்களை திறக்குமாறு’ அரசிற்கு யோசனை கூறியுள்ளார். இதனால் மது பிரியர்கள் கள்ள சாராயம் குடிப்பதும் தற்கொலை செய்வதும் தடுக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடியின் யோசனைக்கு நன்றி சொன்ன அமேரிக்க அதிபரின் மகள் : காரணம் இது தான்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கா இன்னும் சில வாரங்களில் மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்று அதிபர் டிரம்ப் கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில் அதிபர் டிரம்பின் மகளும் அவரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் பாரத பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஏற்படும் மன சோர்வை போக்க நித்ராஸனா என்ற யோகாசனத்தை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தானும் சோர்வடைந்து உள்ளதாகவும், தனக்கும் இந்த ஆசனம் உபயோகமாக இருக்கும் என்று அதற்கு நன்றி கூறி பதில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.??

0

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.??

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவிலும் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அரசு கூறியுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தோடு மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் பெருமளவு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டை காக்க பிரதமர் மோடி நிவாரண நிதி அளிக்குமாறு மக்களிடம் வேண்டு விடுத்தார். இந்தியாவின் அவசர காலத்தை புரிந்து பல்வேறு தனியார் தொழில்துறை நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர், நடிகைகள் பிரதமரின் நிவாரண நிதிக்கு பணத்தை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரோமல், கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு தான் சேர்ந்து வைத்திருந்த பணத்தை வழங்கி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளார். மிசோரத்தின் மாநில முதல்வர் “ஜோரம் தங்கா’ அவரது டிவிட்டர் பக்கத்தில் சிறுவனின் நிவாரண நிதியுதவியை பாராட்டி பதிவு செய்துள்ளார். அதில், மக்கள் பலரும் நிவாரண நிதி அளித்த நிலையில் 7 வயது சிறுவன் ரோமல் வீட்டில் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.333 நிவாரண நிதிக்கு உதவியுள்ளார் என்றும், நாட்டிற்காக உதவிய சிறுவனை மனதார பாராட்ட வேண்டும. உண்மையான ஹீரோ ரோமல்தான் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரோமலிடம் கேட்டபோது; எல்லோரும் உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று பிரதமர் கூறியதை டிவியில் பார்த்தேன். எனது உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியாது, ஆனால் அது என் இரண்டு வருட சேமிப்பு. கொரோனா பாதிப்பில் பலர் அத்தியாவசியப் பொருட்களுக்கே சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த சமயத்தில் உண்டியல் பணத்தை யாருக்கும் உதவாமல் இருப்பதில் என்ன பயன் என்றும், ஆகையால் எனது அப்பாவின் உதவியுடன் காவல் நிலையத்தில் எனது பணத்தை கொடுத்துவிட்டேன். என்று கூறினார். சிறுவனின் செயல்பாடு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவி! கஜா புயலின் போது 1 கோடி! சமூக அக்கறையில் சக்தி மசாலா நிறுவனம்.!!

0

கொரோனா பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவி! கஜா புயலின் போது 1 கோடி! சமூக அக்கறையில் சக்தி மசாலா நிறுவனம்.!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பினை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனங்கள், நடிகர்கள், மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு மருத்துவ பொருட்களை, உபகரணங்கள், படுக்கை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பி.சி.துரைசாமி கொரோனா பாதிப்பு சம்பந்தமான தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை அனுப்பியுள்ளார்.

இதே சக்தி மசாலா நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் காசோலையை சக்திமசாலா நிறுவனத்தின் இயக்குனரான பி.சி.துரைசாமியும் அவரது மனைவியாரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!!

0

சமையல் எரிவாயு விலை திடீர் குறைவு..!!

சென்னையில் மானியம் இல்லாத வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர்களின் 64 ரூபாய் விலை குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் உருவாகும் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து ஆயில் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டுப் பயன்பாடு மற்றும் பல்வேறு உணவக இடங்களில் பயன்படும் கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத உருளைகளின் விலை ரூ.61.5 முதல் ரூபாய் 65 வரை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதத்தை தொடர்ந்து இரண்டு மாதங்களாக சிலிண்டர்களின் விலை குறைந்து வருகிறது. டெல்லியில் ரூ.805 க்கு விற்கப்பட்ட எரிவாயு உருளையின் விலை இன்று (ஏப்ரல் 1) முதல் ரூ.744 க்கு விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.826 க்கு விற்கப்பட்ட உருளையின் விலை தற்போது ரூ.761 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது பலருக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.

இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்ற சிதம்பரத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

0

சிதம்பரத்திலிருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பற்றிய அடையாளம் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் எடத்தெரு வைத்த தெருவைச் சேர்ந்த சாஜுதீன் மற்றும் இருவர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரகளது வீட்டில் இருவர் தனிமை படுத்தப்பட்டிருந்தனர், இதில் தாஜுதீன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரம் எடத் தெருவைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரின் மகன் சாஜ்தீன் வயது 35 மற்றும் அவரது உறவினர்கள் இருவர்  டெல்லியில் நடைபெற்ற  மாநாட்டிற்கு சென்று வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த  சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், மற்றும் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,  சாஜுதீனை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்று அவரது ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது.

இவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று ஆய்வு செய்வதற்காக, ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் நடைபெற்றது. மேலும் சாஜுதீன் வீட்டில் உறவினர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர், இதனால் எடத்தெரு  பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து எடத்தெரு, வாணக்கார தெரு, தொப்பையன் தெரு, தாகம் தீர்த்த பிள்ளையார் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல பரங்கிப்பேட்டை மற்றும் பி.முட்லூர் பகுதிகளிலும் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதால் இந்த பகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

0

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைகளுக்கான ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்களான எண்ணெய், பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகிய பொருட்கள் நாளை (02.04.20) நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என்று அரச சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொது வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து ஏப்ரல் மாதத்திற்கு வழங்க வேண்டிய அரிசி, எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாளை முதல் பணம் மற்றும் இலவச பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக குடும்ப அட்டையை 1 கோடியே 88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக 1,882 கோடியே 90 லட்சத்து
73 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது சரியான முறையில் கணக்கிடப்பட்டு தமிழ்நாடு நுகவர்வு பொருள் வாணிப கழகத்தின் மூலம் மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கின் வழியாக செலுத்தப்பட்டுள்ளது.

இலவச பொருட்களை வாங்க மக்கள் குவிந்து விட வாய்ப்பு இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு அரசு கடுமையான விதிமுறை விதித்துள்ளது. ஆகையால் தினசரி 70 முதல் 100 ரேசன் அட்டைகளுக்கு மட்டுமே 1,000 பணமும் ஏப்ரல் மாத இலவச பொருட்களும் வழங்கப்பட உள்ளது. பொருட்களை வழங்க அனைத்து ரேசன்கடைகளிலும் பட்டியல் முறையில் வழங்க உள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் அதிகம் பேர் வந்தால் டோக்கன் முறையில் நேரம் ஒதுக்கப்பட்டு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த கடலூர் பெண் உயிரிழப்பு!

0

BREAKING: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த கடலூர் பெண் உயிரிழப்பு!

கடலூரில் கொரோனா வார்ட்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண்மணி திடீரென உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கடலூர் அரசுமருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட கொரோனா பற்றிய பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் கடலில் மீன்பிடித்து கரைதிரும்பிய 8 மீனவர்கள் கைது செய்து தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். பாம்பன் துறைமுக கடற்கரையில் மாவட்ட சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மீனவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்கிற சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால் ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி பகுதியில் இருக்கும் கொரோனா தனிமை வார்டுக்கு 8 பேரையும் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் படகில் உள்ள குளிர்சாதனப் பெட்டியிலேயே கெடாமல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் அதிரடி பேச்சு

0

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் பேச்சு

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு போடப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஏதாவது காரணங்களை கூறி பலர் இருசக்கர வாகனங்களில் உத்தரவை மதிக்காமல் பொதுவெளியில் சுற்றி வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் கொரோனா ஆலோசனைகூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கொரோனா வைரஸால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலைபார்க்கும் நபர்களை கட்டாயமாக பேரில் விரட்டக்கூடாது மீறினால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழலை சுயநலமாக நினைத்து காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று கூறினார்.

மேலும், அரசின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் சமுதாயத்திற்கு எதிரான நபர்கள் என்றும், உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் வெளியில் சுற்றினால் 14 நாட்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார் நேரிடும் என்றும் அதிரடியாக பேசியுள்ளார்.