Home Blog Page 5714

வெறிச்சோடிய சிட்னி மைதானம்

0

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றுவருகிறது..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ஏறக்குறைய 5000 ஆயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ள இந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தியாவிலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் இதேபோல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

உலகையே பயத்தில் கும்பிடு போட வைத்த கொரோனா பீதி!

0

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது.

இந்த நோய் தொற்று இந்தியாவிலும் பரவி 78 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முகமூடி பயன்படுத்துவதோடு வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முகமூடி பயன்படுத்துவதோடு வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் கிருமி கைக்குலுக்குதல் தொடுதல் போன்ற செயல்களாலேயே அதிகம் பரவுகிறது.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க கை குலுக்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக தமிழர்களின் கலாச்சாரமான கும்பிட்டு வரவேற்கும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கு இடையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பணியாளர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்துகிறார். இதனை பார்த்த பணியாளர்கள் புன் சிரிப்புடன் பதில் வணக்கம் செலுத்தினர்.

இந்த நிலையில் அமேரிக்க அதிபர் மற்றும் டிரம்ப் அயர்லாந்து பிரதமர் இருவரும் சந்திக்கும் போது வணக்கம் கூறி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப் தான் இந்தியா சென்று வந்ததில் இருந்தே வணக்கம் கூறுவதையே பின்பற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

உலகையே பயத்தில் கும்பிடு போட வைத்த கொரோனா பீதி!

ஒருபக்கம் கொரோனா வைரஸ் பயத்தால் தான் அனைவரும் தமிழர் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்பட்டாலும் தமிழர் கலாச்சாரம் பரவுவது நமக்கு பெருமை தான் மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இத்தாலியில் ஆயிரம் உயிர்களை குடித்துள்ள கரோனா

0

இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு 189 பேர் மரணம் அடைந்த நிலையில், வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு வாரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் ஆயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ள கரோனா உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது..

ஐபிஎல்-க்கு ஆப்பு வைத்த கொரோனா – மத்திய அரசு பிறப்பித்த அவசர உத்தரவு!

0

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பலியானவர் எண்ணிக்கை 4500 தாண்டிவிட்டது.

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த நோய்க்கிருமி தற்போது வரை 114 நாடுகளில் பரவி அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அபாயகரமாக பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் வரும் 29 ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் இந்தப் போட்டிகள் நடைபெறுமா என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொரோனா தோற்று மேலும் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஒரு மாதத்திற்கு வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்குள் வர விசா வழங்க தடை விதித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் மைதானத்திற்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வெளிநாட்டவர்களும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வரவில்லை என்றால் நிர்வாகம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருவேளை போட்டிகள் நடைபெற்றாலும் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளனர்.

சூழ்நிலையை புரிந்து கொண்ட மத்திய அரசு இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய கேரிக்கை வைத்துள்ளது. நாளை நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகிகள் கூட்டத்தில் போட்டிகள் இந்த ஆண்டு தடை செய்யப்படுமா அல்லது பின்னர் ஒத்திவைக்கப்படுமா என்பது முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மனைவிக்கும் கொரோனா

0

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிபரும் அவரது மனைவி சோஃபியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போல் இத்தாலி கால்பந்து வீரரான டேனியல் ருகானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்

கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்

0

கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்

சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் 73 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அரசு முழு கண்காணிப்புடன் இருக்கிறது. இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக விசாக்களை தற்காலிகமாக ரத்து செய்வதில் இருந்து பல்வேறு சுகாதார பணிகளை அதிகரிப்பது வரை பல நடவடிக்கைகள் இதில் அடங்கியுள்ளன. எனவே இது குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும்.

மேலும் அடுத்த சில தினங்களுக்கு மத்திய அரசின் எந்த அமைச்சரும் வெளிநாடு பயணம் செய்ய மாட்டார்கள். நமது நாட்டு மக்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வைரஸ் பரவுவதை தடுக்கவும் பொதுமக்கள் பெரிய அளவில் கூடுவதை தவிர்ப்போம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் பலி! ரத்த பரிசோதனையில் உறுதி: இந்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

0

கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் பலி! ரத்த பரிசோதனையில் உறுதி: இந்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தகாக கூறப்பட்டது. ஆனால் முறையான பரிசோதனை எதுவும் நடத்தபடாமல் இருந்ததால் அதனை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்பதை தெரிவிக்க மறுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் மரணம் அடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனா வைரஸ் தாக்குதலால் தான் பலியானார் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இவருடைய மரணம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நடந்த முதல் பலி என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்த 76 வயதாகும் முதியவர் சமீபத்தில் சவுதி அரேபியாவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்தியா வந்த அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் திடீரென்று அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் அவருடைய ரத்த பரிசோதனை ஆய்வறிக்கை வெளியாகாததால், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தான் உயிர் இழந்தாரா? என்பது உறுதியாகாமல் இருந்தது.

இந்நிலையில், இறந்த அந்த முதியவரின் ரத்த பரிசோதனை அறிக்கை கர்நாடக மாநிலத்தின் சுகாதார துறைக்கு நேற்று கிடைத்தது. அதில், இறந்த அந்த முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதன் மூலமாகவே மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிபடுத்தும் இந்த தகவலை அந்த மாநில சுகாதார துறை மந்திரி பி.ஸ்ரீராமுலு தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு இந்தியாவில் ஏற்பட்ட முதல் பலி உறுதியானதையடுத்து இந்திய அரசு அதிரடி கட்டுபாடுகளை விதித்துள்ளது.

சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங், வியட்நாம், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லி விமான நிலைய பகுதியில் உள்ள வரி விலக்கு பெற்ற ‘ஷாப்பிங்’ பகுதிக்குள் செல்ல இந்திய அரசு தடை விதித்துள்ளது.

அடுத்ததாக மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளுக்கு சென்று திரும்பிய இந்தியர்களும் அந்த பகுதிகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

0

கடந்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்திற்கு பிரபல நடிகைகளான குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மீனாவும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.

இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டியுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு வந்த மீனாவைப் பார்த்து ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் ஆச்சரியம் அடைந்தனர்.

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

தான் எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடையை குறைந்துள்ளதாக இயக்குனர் சிவா நடிகை மீனாவை பாராட்டியுள்ளார்.

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி

0

சென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி

சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாக பேருந்து போக்குவரத்தே உள்ளது.


பல இலட்சக்கணக்கான மக்கள் தினம் தினம் சென்னை மாநகரப் போக்குவரத்தை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

ஆனால் சென்னை மாநகராட்சியில் பெருகி உள்ள மக்கள் தொகையால் மாநகரப் பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே உள்ளது.

மேலும் வெளி ஊர்களில் இருந்து வரும் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான பேருந்தை அடையாளம் காண மிகுந்த சிரமப்படுகின்றனர். வெளியூர் மக்களுக்கு பேருந்தின் வழித்தடத்தை அறிந்து கொள்ளவும் ‘சலோ’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது உள்ள சென்னை மாநகராட்சி பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அதனை சலோ செயலியுடன் இணைக்கும் பட்சத்தில் பேருந்து எங்கே வந்து கொண்டு இருக்கிறது என்பதையும் பயணிகள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த செயலியை பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாகராட்சி பேருந்துகள் எந்தெந்த வழித்தடத்தில் எந்தெந்த இடைவெளியில் இயக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவலையும் சலோ செயலி கொண்டுள்ளது. சென்னையில் சுமார் 700 வழித்தடங்களில் 3000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

சமூக வலைதளத்தை கலக்கிய விஸ்வாசம் ! அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

0

கடந்த 2019ம் ஆண்டு அஜீத் நடித்து பொங்கல் ரிலீஸாக வெளியானது விஸ்வாசம் திரைப்படம். இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை புரிந்தது.

விஸ்வாசம் திரைப்படம் நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் சிவாவிற்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இத்திரைப்படம் அஜீத் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கது என்று சினிமா விமர்சகர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘உலகிலேயே டுவிட்டரில் 2019ம் ஆண்டு அதிகம் இடம் பெற்ற வார்த்தை விஸ்வாசம் தான் என டுவிட்டர் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது’.

இதனை திரைத்துறையினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.