Home Blog Page 5719

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம்! இதற்காகவா தற்கொலை..?

0

திருமண நாளில் மகனை கொன்று குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம்! இதற்காகவா தற்கொலை..?

நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய வேளையில், தொழிலில் ஏற்பட்ட கடனால் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷால் அவரது மனைவி ஹிமானி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. வட மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடியபோது ஓட்டல் கடை நடத்தி வந்த விஷாலின் வீட்டு கதவு மட்டும் நீண்டநேரமாக பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார்கள் உடனடியாக கதவைத் திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

விஷால் அவரது மனைவி மற்றும் 3 வயது மகன் ஆகிய மூவரும் இறந்து கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார்கள் உடனடியாக காவல்துறைக்கு புகாரளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது; விஷால் தனது தொழிலுக்காக கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் மகனை கொன்று பின்னர் மனைவியுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்த அன்று விஷால் மற்றும் ஹிமானியின் திருமண நாள் என்று கூறப்படுகிறது. திடீரென நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு கைகளும் இல்லாமல் பிரதமரின் கவனத்தை ஈர்த்த இளம்பெண்! பெண்களை பெருமைபடுத்திய நரேந்திர மோடி..!!

0

இரண்டு கைகளும் இல்லாமல் பிரதமரின் கவனத்தை ஈர்த்த இளம்பெண்! பெண்களை பெருமைபடுத்திய நரேந்திர மோடி..!!

இந்திய பிரதமரின் சமூகவலைதளங்களின் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பில் மேலும் இரண்டு தமிழக பெண்கள் இடம்பிடித்துள்ளனர். நேற்று உலகெங்கும் மகளிர்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது சமூகவலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைக்க நினைப்பதாக மோடி கூறியிருந்தார். பெண்களை கெளரவிக்கும் வகையில் சொன்னபடியே, உணவு இல்லாமல் பரிதவிக்கும் ஏழை மக்களின் பசியை போக்க “உணவு வங்கி” நடத்தும் ஸ்நேகா மோகன்தாஸ் இடம் பிடித்தார். இதனையடுத்து மேலும் இரண்டு பெண்கள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி தனது இரண்டு கைகளையும் இழந்த மாளவிகா ஐயர் என்பவரும் அட்மினாக இடம் பெற்றுள்ளார். இவர் பி.எச்டி பட்டம் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே காஷ்மீரின் கைவினை கலைஞரான ஆரீபா என்பவரும், தண்ணீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் கல்பனா ரமேஷ், கான்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் கலாவதிதேவி, மகாராஷ்டிராவின் பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரிய கைவினை கலைஞரான விஜய பவார் மற்றும் பீகாரின் காளாண் வளர்ப்பு தொழிலின் ஆர்வலர் வீணா தேவி ஆகியோர் இந்திய பிரதமரின் சமூகவலைதளத்தின் அட்மின்களாக பொறுப்பு ஏற்கின்றனர்.

பட்டியலில் இடம்பிடித்த அனைத்து பெண்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் சமூக ஆர்வலர் மற்றும் திறமைசாலிகளை தனது நிர்வாகிகளாக அமர்த்துவது மோடிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறப்படுகிறது. மகளிரை பெருமைபடுத்தும் விதமாக செய்பட்ட மோடி அனைவரின் கவனத்தையும் குறிப்பாக பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பெண் குழந்தைகள் இதனால்தான் நாடக காதலில் சிக்குகிறார்கள் : மகளிர் தின விழாவில் சௌமியா அன்புமணி திட்டவட்டம்!

0

நேற்று மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் பல்வேறு நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துச் செய்தியை கூறியிருந்தனர்.

இதில் அனைத்து தலைவர்களும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியே தங்கள் வாழ்த்து செய்தியை பதிவு செய்து இருந்தனர். பல்வேறு அமைப்புகள் நடத்திய மகளிர் தின விழாவில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்களே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பெண்கள் விழிப்புணர்வு பற்றி பேசினார். அதில் அவர் கூறியதாவது;

‘பெண் பிள்ளைகள் எதனால் தங்களுக்கு பிரச்சனை வருகிறது என்று உணராமலேயே இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு சமூக வலைதளங்களே பிரச்சனைகள் உருவாக காரணமாக விளங்குகிறது.

அவர்கள் யார் என்று தெரியாத பலருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் தங்கள் புகைப்படங்களை முகம் தெரியாத பலர் பார்க்கும்படி பகிர்ந்து விடுகிறார்கள்.

தவறான எண்ணம் கொண்ட சிலர் இவர்கள் எங்கே செல்கிறார்கள் யாருடன் செல்கிறார்கள் போன்ற தகவல்களை எளிதில் தெரிந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் பயன்படுத்திதான் சில சமூக விரோதிகள் பெண் பிள்ளைகளை மிரட்டி நாடகக் காதலில் சிக்க வைக்கிறார்கள்.

இதுபற்றி பெற்றோர்களும் உறவினர்களும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

அம்மா இலவச இருசக்கர வாகனம் வேண்டுமா? இப்போதே விண்ணப்பிக்கலாம்.

0

அம்மா இலவச இருசக்கர வாகனம் வேண்டுமா? இப்போதே விண்ணப்பிக்கலாம்.

மறைந்த தமிழக முதல்வரால் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.இது பெண்கள் மத்தியில் ஒரு பெரிய மிற்றத்தை ஏற்படுத்தியது.
இதுவும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

அவரைத் தொடர்ந்து ஆட்சியில் உள்ள அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

இத்திட்டமானது முழுக்க முழுக்க பெண்களுக்கானது மட்டுமே.பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் நபர் 8 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் இதில் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.

விண்ணப்பிக்கும் நபருக்கான ஆண்டு வருமானம் ₹2,50,000 ஐ விட அதிகமாக இருந்தால் அவர் விண்ணப்பிக்க தகுதியற்றவராக கருதப்படுவார்.

இத்திட்டத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த இரண்டு நபர்கள் விண்ணப்பிக்க இயலாது.அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இதில் சில பிரிவினருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.அதாவது மலை பிரதேசங்களில் வாழ்பவர்கள்,விதவைகள்,ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்கள்,35 வயதிற்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

இதில் அதிகபட்சம் 25,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.அதாவது வாகனத்தின் விலை 50,000 க்குள் இருந்தால் 25% மானியமும் 50000 ஐ விட அதிகமாக இருந்தால் ₹25000 மும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாதர் குறைந்தபட்சம் LLR ஆவது வைத்திருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நகர்புற அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்.இதனை பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமோ அளிக்கலாம்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

0

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 8 மாதம் கர்ப்பிணியாக உள்ள பெண் கமாண்டோ சுனைனா படேல் என்பவர் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

அம்மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு பலத்த கண்காணிப்பு நடந்து வருகிறது. தீவிரவாத கும்பலை ஒழிக்க சத்தீஸ்கர் போலீசாரும் ரிசர்வ் படையினரும் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ரிசர்வ் படையில் எட்டு மாத கர்ப்பிணியாக சுனைனா பணியாற்றி வருகிறார். இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த போது; நான் பணியில் சேரும் போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தேன், பணி என்று வந்துவிட்டால் எந்த சூழலிலும் பின்வாங்க மாட்டேன். என்று மன உறுதியுடன் கூறியுள்ளார்.

சுனைனாவை விடுமுறை எடுக்கச் சொல்லி தாண்டேவாடா எஸ்.பி அபிஷேக் பல்லவ் கூறிய போது, ஏற்கனவே ஒருமுறை பணியில் ஈடுபட்டு கர்ப்பம் கலைந்து போனது. விடுமுறை கொடுத்தால் கூட சுனைனா வேண்டாம் என்று மறுப்பதாக தெரிவித்துள்ளார். எட்டுமாத கர்ப்பிணி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காட்சிகள் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

0

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சி மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட அரசு தொழிற் பயிற்சி கூடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல்,தலைமைச் செயலாலர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை கண்காணிக்கும் வகையில் மொபைல் செயலி ஒன்றையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த செயலி மூலம் மாணவர்கள் திறனை கண்காணிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடய வேலைவாய்ப்பையும் கண்காணிக்க இந்த செயலி அறிமுகம் செய்யப் செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவால் இன்றைக்கு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிதரித்து வரும் நிலையில் மேலும் மாணவர்களை தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு ஊக்குவிக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் டெல்லி மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.

“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்!

0

“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்!

சமீபத்தில் வெளியான எட்டுத்திக்கும் பற திரைப்படம் குறித்து புலம்பும் வகையில் படத்தின் இயக்குனர் வ.கீரா தனது முகநூல் பக்கத்தில் வேதனையை தெரிவித்ததோடு தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை எச்.டி -யாக வெளியிட்டுள்ளதாகவும், முகநூலை விட்டே செல்வதாகவும் அவரே கூறிள்ளார்.

இப்படம் சாதிய ஆணவத்திற்கு எதிராக எடுத்த படம் என்று கூறப்படுகிறது. முதலில் படத்தின் பெயர் “பற’ என்றே சூட்டப்பட்டு சாதியின் பெயர் தெரிவதுபோல் இருப்பதாக கூறி தணிக்கை குழுவால் இப்பெயர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எட்டுத்திக்கும் பற என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படம் சென்னை நடைபாதையில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் தினசரி சம்பவங்களை கூறும் படமாகவும் சாதிக்கு எதிரான படமாகவும் வெளியானது.

இதையடுத்து, படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் தியேட்டரே காலியாக காட்சியளிக்கிறது. படத்தின் பெயர்தான் படுதோல்விக்கு வழிவகுத்ததாக பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில தியேட்டர்களில் வெறும் 4 காட்சிகள் ஓட்டிவிட்டு படத்தை தூக்கிவிட்டனர். 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்களிடையே எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் வ.கீரா தனது முகநூலில் வேதனையுடன் புலம்புவது போல் பதிவை இட்டுள்ளார்.
பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழ் ராக்கர்சிலும்
படம் அழகாக வந்துள்ளதாம்…

போங்கடாங்க…திரையங்கே காலியா வச்சுக்கிட்டு..காமெடி பன்றீங்க…ஓ..பணமா..,நீ இலவசமா பாரு.,.ஆனா எங்கள் உழைப்பின் பணத்தை கொஞ்சம் யோசி…படம் பாக்க மாட்டேன்னா..அப்படியே இரு…உன் உழைப்பு தனிநபர் பங்கு..கூட்டு உழைப்புக்கு..பதில் சொல்..அதற்கான முதலீட்டு உழைப்புக்கு பதில் சொல்….

https://m.facebook.com/story.php?story_fbid=2983672785031074&id=100001651461359

படம் ஓடாததால் இவ்வாறு தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! ‘காவிரி காப்பாளன்’ பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!!

0

பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! ‘காவிரி காப்பாளன்’ பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் சார்ப்பில் பாராட்டு விழா நடத்தி “காவிரி காப்பாளன்’ என்ற பட்டப் பெயரும் சூட்டப்பட்டது.

விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமசோதாவாக அதிமுக அரசு நிறைவேற்றியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி பகுதியில் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த பாராட்டு விழாவிற்கு சென்ற எடப்பாடி மக்களுடன் விவசாயம் குறித்து நடந்தபடியே உரையாடி சென்றபோது, அங்கு வயலில் நாற்றுநடும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்தவுடன் முதல்வர் எடப்பாடியும் வயலில் இறங்கி பெண்களுடன் நாற்றுநட ஆரம்பித்தார். இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.
கோடைகால சாகுபடிக்கான விவசாய நடவுப்பணியின் போது எடப்பாடியும் களத்தில் இறங்கியது விவசாயிகளிடமும் பொது மக்களிடமும் ஆச்சரியத்தையும், புதுவித மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

விவசாயிகள் ஒன்றிணைந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் எதிர்கால விவசாயத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்த முதல்வருக்கு ” காவிரி காப்பாளன்” என்று பட்டம் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்விற்கு மாட்டுவண்டியில் சென்று எடப்பாடி எல்லோரையும் அசத்தினார். தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்காலம் ஓரளவு அதிமுகவின் அரசால் மகிழ்ச்சி தரக்கூடிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!!

0

22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!!

கல்லூரி படிக்கும்போதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அனைவரையும் வியப்பில் அசத்தியுள்ளது.

திருப்பூர் குண்டடம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணிவேல் என்பவரின் மகள் முத்துப்ரியா, பொள்ளாட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை அரசியலில் ஈடுபட்டு வந்த காரணத்தால் நவனாரி ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு, மற்றவர்களை விட 320 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார். இதனால் நவனாரி கிராமத்தின் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இவரது தந்தை மணிவேல் கூறுகையில்; விவசாய குடும்பத்தில் பிறந்து சிறுவயது முதலே முத்துப்ரியா சமூகசேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு வளர்ந்தவர் என்கிறார். மேலும், கல்லூரி படிக்கும்போதே சமூக சேவையில் முத்துப்ரியா ஈடுபட்டு வந்துள்ளார். தனது சொந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கிராமத்தில் அடிப்படை தேவையில் உள்ள குறைகளை முன்னின்று முடித்து வைப்பதும், தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த இளம் வயதில் ஒரு கிராமத்தின் முக்கிய பொறுப்பை தனது மகள் வகிப்பது தந்தை மணிவேலுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.


உலகத்தின் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வந்தாலும் அதிகார பலம் கொண்ட அரசியல் மற்றும் தேர்தல்களிலும் குறிப்பாக இளம்பெண்கள் சாதிக்க முடியும் என்பதை முத்துப்ரியா நிரூபித்துள்ளார். 22 வயதில் ஊராட்சி தலைவராக ஒரு இளம்பெண் வெற்றி பெற்றிருப்பது இக்கால இளம் தலைமுறையினரிடம் பெரிய நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

0

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி 3000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் ஒரு புறம் தாண்டவமாட இன்னொரு பக்கம் கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது.

கேரளாவின் கோழிக்கூடு அருகேயுள்ள வேங்கேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் சில நாட்களாக திடீரென கோழிகள் இறந்து வந்த காரணத்தால் புகார் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த பண்ணையில் ஆய்வு செய்தனர். இறந்துபோன கோழிகளின் ரத்தமாதிரிகளை சேகரித்து கண்ணூரில் இருக்கும் ரத்தமாதிரி சோதனை கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து சோதனையில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் விமானத்தின் மூலம் போபாலில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி பறவைக்காய்ச்சல் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இதனால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள கால்நடைத்துறை அமைச்சர் ரஜூ அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகள், கால்நடை பண்ணைகள், மீன் பண்ணைகள் போன்றவற்றின் சுகாதாரத்தையும் அங்கும் ஏதேனும் காய்ச்சல் பரவியுள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த பண்ணைகளை சுற்றி வாழும் பொது மக்களின் குடும்பத்தினருக்கும் ரத்த மாதிரி ஆய்வினை உடனடியாக செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இந்த பறவைக் காய்ச்சலால் கோழிக்கறியின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களின் ரத்த மாதிரி ஆய்வினை நடத்த தேனியில் தனியாக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.