Home Blog Page 5718

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது!

0

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது!

திருப்பதி அருகே வனப்பகுதிகளில் இருந்து ரகசியமாக கடத்த முயன்ற செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி அருகே இருக்கும் ஸ்ரீவாரிமெட்டு சேஷாசம் வனத்தில் இருந்து செம்மரக் கட்டைகள் ரகசியமாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குறிப்பிட்ட வனப்பகுதியில் உடனடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது வனப்பகுதியில் செம்மரங்களை கடத்திய கும்பல் போலீசாரை பார்த்தவுடன் தப்பித்து ஓடியது. கடத்தல் கும்பலை சினிமா பாணியில் போலீசார் விரட்டிப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் முதலில் பிடிபட்டார். அவரிடம் இருந்து நான்கு செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் இரண்டாவதாக பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.

முதலில் பிடிபட்டவரிடம் 4 செம்மர கட்டைகளும் இரண்டாவதாக பிடிபட்டவர்களிடம் 17 செம்மரக் கட்டைகளும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்காக பயன்படுத்திய காரும் பிடிப்பது. செம்மர கட்டைகள் மற்றும் காரின் ஒட்டுமொத்த மதிப்பு 15 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செம்மர கடத்தலுக்காக திருப்பதி வரச்சொன்ன நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!!

0

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!!

பிரபல நடிகை ஜெயபாரதியின் வீட்டில் 31 சவரன் நகையை திருடிய பலே திருடர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜெயபாரதி. இவர் முத்து மைக்கேல் மதன காமராஜன் மற்றும் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நடத்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஜெயபாரதி வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடிகையின் வீட்டில் வேலை பார்த்தவர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீட்டு வேலை ஆட்களின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜெயபாரதியில் வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் இப்ராஹிம் மற்றும் , செக்யூரிட்டியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ஹர்க்கபகதூர் என்பவரும் நடிகையின் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு தங்க நகைகளை சிறிது சிறிதாக கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனையடுத்து கார் டிரைவரையும், காவலாளியையும் போலீசார் கைது செய்தனர்.

கார் ஓட்டுனரை நம்பி வீட்டுக்குள் விட்டதால் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரங்களில் பலநாட்கள் இந்த திருட்டு குறித்து பிளான் செய்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டது.

வாசனுக்கு கட்டவுட்டு விஜயகாந்துக்கு கெட்டவுட்டு – கூட்டணியில் சலசலப்பு

0

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாமக தேமுதிக பாஜக தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது அதில் அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் பாமகவுக்கு ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது. தேமுதிக தரப்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அடுத்த முறை தங்களுக்கும் வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மாநிலங்களவையில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இவற்றுள் தமிழகத்தில் இருந்து தேர்வாகி இருந்த ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிந்திருந்தது.

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி திமுகவுக்கு மூன்றும் அதிமுகவுக்கு மூன்றும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் திமுக தனது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் அதிமுக சார்பாக கே.பி.முனுசாமி தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகவில் இருந்து ஜி.கே.வாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வாய்ப்பு வழங்கும்படி பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த முடிவு அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்

0

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்

கடந்த கால தமிழக அரசியலில் ஓரளவு அரசியல் நாகரிகம் பின்பற்றப்பட்டு வந்தது தற்போது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டது போல தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பாக கடந்த மக்களவை தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி டாக்டர் செந்தில்குமார் அவர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அரசியல் நாகரீகமற்றதாகவே தொடர்ந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது நானும் அன்புமணி ராமதாஸ் அவருடைய சமூகம் தான் என சாதியை வைத்து வாக்கு கேட்ட அவர் வெற்றி பெற்றதும் சாதியை ஒழிக்க போராடுவேன் என தினம் தினம் கூறும் கருத்துக்கள் கேலிக்குள்ளாகி வருகின்றன.

அந்த வகையில் தினம் எதாவது ஒரு சாதி ஒழிப்பு சம்பந்தமான கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தருமபுரி எம்பி செந்தில்குமார் பதிவிட்டு வருகிறார். அதில் வழக்கம் போல எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் ட்விட்டர் பக்கங்களில் சென்று தருமபுரி எம்பி தன்னுடைய சுய விளம்பரத்திற்காக எதையாவது கமெண்ட் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.அதில் குறிப்பாக தற்போது புதிய தமிழகம் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அவர் ட்விட்டரில் பதிவிட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சில சமூகத்திற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்களால் தூண்டப்பட்டு நடத்தப்படும் நாடக காதலை தோலுரிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திராவிடக் கட்சிகளின் கலப்பு திருமண ஆதரவு கொள்கையை விமர்சிக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் “Dr கிருஷ்ணசாமி: சாதிகளிடைய ஒற்றுமை முக்கியும், நாம் சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டியுள்ளது, அதனால் தேவேந்திர குல இளைஞர்கள் வேறு சாதி பெண்களே காதலித்தாலும் ஒதுங்கிவிடுங்கள். திராவிடம்: அது எல்லாம் முடியாது சாதிய ஒழிக்கனும். நீ வேற சாதி பெண்ணை தேடி தேடி காதலி. கருமம் ” என திராவிட கட்சிகளை விமர்சித்திருந்தார்.

மேலும் மற்றுமொரு பதிவில் “SC என்பது எங்களுக்கு கறை தான்! பின்ன என்ன பெருமையா? பெருமையா நினைக்கிறவன் அவனவன் பெயருக்கு முன்னாடியோ பின்னாடியோ SC என்று போட்டு அடையாளப்படுத்தி கொள்ளட்டுமே.. எங்களுக்கு சுயமரியாதை இருக்கு. அது உங்களுக்கு RSS சித்தாந்தமா தெரியுது” எனவும் கூறியிருந்தார்.

அடுத்ததாக “கலப்பு திருமணங்கள் நடந்தால் சாதி ஒழிந்துவிடுமாம்- திராவிட புத்தகவாசிகள். நல்ல ஒழியும் பாருங்க.. இரண்டு சாதி கலவரத்தில் முடியும். நடைமுறையை ஒரு காலத்திலும் பேச மாட்டார்கள். சரி திராவிடம் பேசுபவர் குடும்பத்திலாவது செய்கிறார்களா பார்த்தால்

சாதி ஒழிய முதலில் சமூக இணக்கம் வரனும்” என சாதி ஒழிப்பு குறித்த திராவிட கட்சிகளின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் பிரபல தனியார் ஊடகத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சியின் வீடியோவை பகிர்ந்து திமுக எம்பி செந்தில்குமார் கிண்டலடிக்கும் விதத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் SC என்பதுகறை என்றால் @DrShyamKK வரும் 2021 தேர்தலில் உங்கள் கட்சி ரிசர்வ் தொகுதியில் இனி நிற்க மாட்டோம் என்று உறுதிபட கூறமுடியுமா…. இது நாள் வறை பெற்ற உரிமைகள் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா.,பெற்ற படிப்பு/வேலை சலுகைகள் திரும்பப் தருவதற்கு நீங்கள் தயாரா. என திமுக எம்பி ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் அவர், “நாங்கள் சொல்வது உரிமை.நீங்களும் உங்கள் தந்தையும் கூறுவது கறை. உங்கள் சமுதாயத்திற்கு @DrShyamKK @DrKrishnasamy பாதுகாவலர்கள் அல்ல. இன்னமும் உரிமை கேட்டு போராடும் மக்கள் சமூகத்தில் உள்ளார்கள். கறை என்று கூறும் நீங்கள் இனி ரிசர்வ் தொகுதியில் நிற்காமட்டோம் என உறுதி அளிக்க முடியுமா? என்றும் மற்றொரு கேள்வியும் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி ” திருப்பி தர தயார் என்று எப்பவோ சொல்லிவிட்டோம்… சரி நீங்க வன்னியரே இல்லாத தொகுதியில் போட்டியிட தயாரா? அ.ராசாவுக்கு சொந்த தொகுதி குடுக்கவில்லை? கனிமொழி,நாடார் சாதி பாசத்தில் தான தூத்துக்குடியில் நின்றார்? திமுக இனி சாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தும் என உறுதி அளிக்க முடியுமா? என்று அவரிடம் கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் “சாதி ஒழிய கலப்பு திருமணம் செய்யச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் திமுக MPக்கள் சொந்த குடும்பத்தில் எத்தனை கலப்பு திருமணங்கள் என்று சொல்ல தயங்குவது ஏன்?! அந்த சமூக பொருப்பு உங்களுக்கு ஏன் இல்லாம போச்சு? மத்தவன் அடிச்சுகிட்டு சாவனும்.. நீங்க சொந்த சாதியிலேயே வசதியா இருப்பீங்க! என பதிலுக்கு விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் அவர் திமுக எம்பி செந்தில்குமாரிடம் “உங்க மனைவி எந்த சாதி? உங்க குடும்பத்தில் எத்தனை பேர் கலப்பு திருமணம்? ஏன் உங்க குடும்பத்தில் எல்லோரும் கலப்பு திருமணம் செய்து சாதியை ஒழிக்க முயிற்சி செய்திருக்கலாமே? ” எனவும் கேள்வியெழுப்பிருந்தார் .

மேலும் “நேற்று திமுகவிற்கு வந்த @DrSenthil_MDRD உங்களுக்கு சொந்த தொகுதியான தர்மபுரியில் வாய்ப்பு, மூன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா ஏன் சொந்த பெரம்பலூர் தொகுதி பொது தொகுதியானவுடன் மறுக்கப்பட்டு, நீலகிரிக்கு மாற்றப்பட்டார்? மூன்று முறை வென்ற தொகுதி கூட பொது தொகுதியில் போட்டியிட தடையா?” என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறு இருவருக்குமிடையே ட்விட்டரில் காரசாரமான விவாதங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் இதிலிருந்து நழுவும் விதமாக திடீரென திமுக எம்பி செந்தில்குமார் “நடுநிலையாளர் ஒருவருடன் பொதுவிவாதத்துக்கு தயார்” என்றார்..

இதற்கு பதிலளித்த ஷ்யாம், “நான் விவாதிக்க தயார்.. ஸ்டாலின் அல்லது உதயநிதியிடம் கேட்டு சொல்லுங்க MP sir.. Slightly smiling face அவர்கள் One on Oneக்கு தயார் என்றால் நாங்களே செலவு ஏற்பாடு எல்லாம் பார்த்து கொள்கிறோம். உங்க Sun TV, Kalaingar TV, Puthiya Thalaimurai Tv எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே தான். are they ready” என்று பதிலளித்திருந்தார்.

மேலும், “திமுக MP சார் @DrSenthil_MDRD உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க ?இங்க ஒட்ட நறுக்கப்படும் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் தராமல் அடுத்த விமர்சனத்துக்கு போகலாமா? விவாதத்தை துவங்கியது நீங்கள், நான் கேள்விக்கு பதிலும் குடுத்துவிட்டேன்.. உங்கள காணவில்லையே…” என்று ஷ்யாம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .

சசிகலா பாணியில் சொகுசு அறையில் டிஎன்பிஎஸ்சி ஜெயக்குமார்.

0

சசிகலா பாணியில் சொகுசு அறையில் டிஎன்பிஎஸ்சி ஜெயக்குமார்.

தமிழகம் முழுவதும் பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து அரசுப் போட்டித் தேர்வுக்காக
தயாராகி வருகின்றனர். இவர்கள்
அனைவரின் கோபத்திற்கு காரணமானவர் தான் இந்த இடைத்தரகர் ஜெயக்குமார்.

ஊழல்,இலஞ்சம்,சொத்துக் குவிப்பு என்ற வார்த்தைகள் சமீப காலமாக தமிழக மக்களுக்கு பழகிப்போன வார்த்தைகளாகி வருகின்றன. பணம் இருந்தால் சிறையில் கூட சொகுசாக இருக்கலாம் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதைத் தொடர்ந்து தற்போது சில வாரங்களுக்கு முன்பு தமிழக இளைஞர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திய விடயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையத்தில் நடைபெற்ற ஊழல்.அதில் முக்கிய குற்றவாளியாக உள்ளவர் இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவர்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்பு இவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சொகுசான வாழ்க்கையே வாழ்ந்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசில் சாதாரன இளநிலை உதவியாளர் முதல் இன்றைக்கு துணை ஆட்சியராக உள்ள பலரும் இவரின் உதவியால் முறைகேடாக அரசுப்பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.அவர்களின் ஆதரவால் தான் இத்தகைய சொகுசான ஒரு வாழ்க்கையை சிறையிலும் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.

நாட்டுக் கோழிக்கறி குழம்பு, டீ , காஃபி என நினைத்து நினைத்த நேரத்தில் சிறைத்துறை சமையல் அறையில் இருந்து செல்கிறதாம். இதையெல்லாம் பார்த்து நேர்மையான சிறைத்துறை அதிகாரிகள் புலம்பித் தள்ளுகிறார்கள்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய முறை கழிவறைக்கு பதிலாக வெஸ்டர்ன் முறை கழிவறை கூட மாற்றித் தரப்பட்டுள்ளதாம்.

இது குறித்து சிறைத்துறை எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறெல்லாம் யாருக்கும் எந்த சலுகையும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??

0

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??

ஆந்திர மாநிலத்தில் வருகின்ற உகாதி பண்டிகையை முன்னிட்டு 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க அம்மாநிலை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இலவச மனைகளில். வீடு கட்டிக் கொள்ளவும் 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்கவும் உரிமையுள்ள பட்டாவை ஆந்திர அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளின் எதிர்கால நலன் கருதி
ரூபாய் 24,738 கோடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுர்ந்தரராஜன் அவர்களின் உரையோடு தொடங்கிய பேரவை கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ்  பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தின் விவாசயிகளுக்கு நான்கு தவணையாக கடன்தொகை வழங்கப்படும்  என்று அறிவித்தார். இதன் மூலம் ரூபாய் 25,000 நிலுவை வைத்திருக்கும் 5.83 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும், இதற்காக அம்மாநில அரசு ரூபாய் 1198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இலவச வீட்டுமனை பட்ட வழங்கல்,  விவசாய கடன் ரத்து போன்ற இன்ப அதிர்ச்சியை தரும் அறிவிப்புகளை அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் புதிய அறிவிப்பு ஏதாவது வருமா? என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததால் அவருக்கு தமிழக விவசாயிகள் சார்பில் காவிரி காப்பாளன் என்கிற பட்டம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

T20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைய இந்த பிரபலம் தான் காரணம் : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

0

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் தர வரிசையின் படி முதல் 10 அணிகள் கலந்து கொண்டன.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இந்த கிரிக்கெட் வீரர் தான் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய போது கேப்டன் விராட் கோலி வாழ்த்து கூறியிருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் விராட் கோலி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் வாழ்த்துக் கூறிய தால்தான் இந்திய அணி தோல்வியடைந்தது என்று நக்கலடித்து வருகின்றனர்.

மகளிர்20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இந்த போட்டியில் தர வரிசையின் படி முதல் 10 இடங்களை பிடித்த அணிகள் கலந்து கொண்டன.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இந்த கிரிக்கெட் வீரர் தான் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய போது கேப்டன் விராட் கோலி வாழ்த்து கூறியிருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் விராட் கோலி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் வாழ்த்துக் கூறியதால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது என்று நக்கலடித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு! தலைமை ஆசிரியரின் புதுவித முயற்சி..!!

0

பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு! தலைமை ஆசிரியரின் புதுவித முயற்சி..!!

புதுக்கோட்டை அருகேயுள்ள பெருமாநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த பள்ளி ஐந்து வருடங்களுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதிலிருந்து 100% சதவீத தேர்ச்சியை எட்டி வருகிறது. மேலும் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம், கபடி, கராத்தே, யோகா போன்றவற்றிலும் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்திலும், மன ஆரோக்கியத்திலும் வல்லவர்களாக திகழ்கின்றனர்.

நீண்ட வருடங்களாக 84 மாணவர்கள் மட்டுமே இருந்த இந்த பள்ளியில் தற்போது 194 மாணவர்களை இணைத்து பெரிய மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தான் காரணம் என்று அப்பள்ளியில் பணி புரியும் சக ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர். இதைப்பற்றி தலைமை ஆசிரியர் மாரிமுத்து கூறியதாவது;

இந்த பள்ளிக்கு 5 வருடத்திற்கு முன்பு வந்தேன் அப்போதுதான் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மாணவர் எண்ணிக்கை மிக குறைந்தளவு இருப்பதை மாற்றி அதிகரிக்கும் வேலைகளில் இறங்கினோம். மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி சேர்க்காமல் நாங்கள் களத்தில் இறங்கி ஆசிரியர்களோடு மாணவர்களின் வீட்டுக்கே சென்று விடுவோம்.

பல்வேறு நல்ல திட்டங்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து சேர்க்கை நடத்துவோம். இதனால் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல உடன் இருந்த பொறுப்பான ஆசிரியர்களே முக்கிய காரணம் என்று தலைமை ஆசிரியர் கூறினார். மேலும் நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகன், என்னைப் போல் பலர் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

மாணவர்களை மென்மேலும் மெருகேற்றவும், அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் எனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை செலவழித்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரை பவுன் தங்க மோதிரம் பரிசளித்து கவுரவுத்தேன். இதன் பிறகு பல்வேறு மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கடந்த வருடம் முதல் மதிப்பெண் எடுத்த இரண்டு மாணவர்களுக்கு பாராட்டி அரைபவுன் தங்க மோதிரம் அளித்தோம். எனக்கு உறுதுணையாக ஆசிரியர்கள் இருப்பதாக கூறி மகிழ்ந்தார்.

மாணவர்களிடையே வித்தியாசமான முயற்சியை கையாளும் தலைமை ஆசிரியருக்கு பொது மக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவி கற்பழிப்பு! போக்சோவில் குற்றவாளி கைது!!

0

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவி கற்பழிப்பு! போக்சோவில் குற்றவாளி கைது!!

தமிழகத்தில் பெண்களை ஏமாற்றும் வித்தையில் குளிர்பான பார்முலாவும் ஒன்று. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் ஒருவர் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுத்து கற்பழித்து சம்பவத்தைப் போல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் பள்ளி மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவியிடம் பெற்றோர்கள் இதுகுறித்து விசாரித்தபோது; 11 ஆம் வகுப்பு விடுமுறை நாட்களில் மாணவியின் வீட்டு அருகே இருந்த ராஜ்குமார் என்பவர், மாணவியிடம் சகஜமாக பழகுவது போல் திட்டமிட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். மேலும் மாணவியை பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளார்.

இதனையடுத்து, கீரனூர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவியை கற்பழித்த ராஜ்குமார் உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
வெளி உலகம் தெரியாது எல்லோரையும் நம்பிவிடும் மாணவிகள், சமூகத்தில் இருக்கும் விரோதிகள் யார் என்பதை அறியாமல் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது.

இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!!

0

இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி அதிகம் பேர் பார்த்துள்ளதால் சாதனையாக பதிவானது. இந்தியா ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதியதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

ஆஸ்திரேலியான் மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை இறுதிபோட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக கோப்பையை தட்டிச் சென்றது.

பொதுவாக மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற அணிகள் மோதும்போது மட்டுமே அதிமான ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும். இந்த மைதானத்தில் 86,174 இருக்கைகள் உள்ளன. ஆஸ்திரேலிய பெண்கள் அணி எப்போது விளையாடினாலும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை.

சில நேரங்களில் மட்டுமே மைதானம் முழுக்க நிரம்பியிருந்த வேளையில், நேற்று நடந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மைதானம் முழுக்கு ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்திய அணி தோல்வி அடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும் மைதானத்தின் ஒட்டுமொத்த இருக்கையும் நிரம்பியதால் இந்த போட்டி சாதனையாக கருதப்பட்டது.