உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
தீனதயாள் உபாத்யாயா : இந்தி தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுனர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர், அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத்தன்மையில் சிறந்து விளங்கியவர். பாரதீய ஜனதா சங்க கட்சியின் முன்னோடியாக திகழ்ந்தவர்.
இவரது பெயரில் உள்ள நிறுவனங்கள் :
* தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனை புது தில்லி
* தீனதயாள் உபாத்யாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கல்விக்கூடம், கான்பூரில் உள்ளது.
* தீனதயாள் உபாத்யாயா கல்லூரி
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்
* தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலிய பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை இந்திய நாட்டிற்காக அர்பணிப்பு செய்கிறார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள 63 அடி உயர சிலையை திறந்து வைத்து பல்வேறு உதவிகளை வழங்குவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் ராசியான தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ இல்லாமல் போனதால் அதிமுகவில் பயம் இல்லாமல் போய்விட்டது! அமைச்சர் காட்டம்..!!
நாகை மாவட்டத்தில் சீர்காழி நகர வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் அதிமுகவின் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஒ.எஸ்.மணியன், ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சியினரிடையே துளியும் பயம் இல்லாமல் போய்விட்டது என்று காட்டமாக பேசியுள்ளார்.
கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அப்பகுதி சார்ந்த பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ பாரதி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் முதன்முதலாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது மிக சிறப்பான விஷயமாகும். இந்திய அளவில் இதுதான் முதல் முறையான சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு என்று கூறினார்.
இதனையடுத்து, காவிரி டெல்டா வேளாண் மண்டல சிறப்பு அறிவிப்பு அரசாணை விவசாய மேம்பாட்டிற்கு சிக்கல் இல்லாத வகையிலும், அதை மத்திய அரசு ஏற்கும் வகையிலும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற முதல்வரின் கூறியதை குறிப்பிட்டு பேசினார்.
மேலும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து சிறப்பான திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா பகுதிகளில் அதிமுக தோல்வியை குறிப்பிட்டு பேசினார். குடியுரிமை திருத்த சட்டம், மீத்தேன்
மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற காரணங்களால் நாம் வெல்ல வேண்டிய பல இடங்களை கோட்டை விட்டுவிட்டோம். பொது மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு அனுமதிக்காது என்ற முதல்வரின் கூறியதை நினைவுபடுத்தினார்.
ஜெயலலிதா இருந்தபோது கட்சியினர் பெரிதும் பயந்து செயல்பட்டனர். தற்போது அவர் இறந்த பிறகு கட்சியினருக்கு பயம் இல்லாமல் போய்விட்டது என்று காட்டமாக பேசி முடித்தார். அமைச்சரின் பேச்சை கூட்டதில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
மாணவிகளுக்கு மாதவிடாயா என சோதனை: உள்ளாடைகளை களைய சொன்னதால் போராட்டம்!
குஜராத்தில்
உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையம்
ஒன்றில் மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று மாதவிடாயா என சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் எனும்
பகுதியில் ’ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்’ எனும் அமைப்பு செயல்பட்டு
வருகிறது. இந்த மையத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று
வருகின்றனர். இந்த மையம் ஒரு கோவில் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் இன்னமும்
19 ஆம் நூற்றாண்டுக்கான பழமையானப் பழக்கங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு வருகின்றனர்.
அவற்றில் முக்கியமானதும் மோசமானதும் மாதவிடாய் நாட்களில்
அங்கு பயிலும் மாணவிகள் சக மாணவியரை தொட்டு பேசக்கூடாது மற்றும் எல்லோருடனும் அமர்ந்து
ஒன்றாக உணவு உண்ணக் கூடாது. ஆனால் இவற்றை சில மாணவிகள் கடைபிடிக்காமல் வழக்கம் போல
எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்து கோபமான ஆசிரியைகள் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவிகள் யாருக்கு எல்லாம் மாதவிடாய் எனக் கேட்க இருவர் எழுந்து கை தூக்கியுள்ளனர். ஆனால் அத்தோடு நில்லாமல் அனைவரையும் தனித்தனியாக கழிவறைக்கு அழைத்துச் சென்று மாதவிடாய் இருக்கிறதா என சோதித்துள்ளனர். அதற்காக அவர்கள் உள்ளாடைகளைக் கழற்ற சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த நிறுவனத்துக்கு எதிரில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை தாமாக முன் வந்து விசாரணை செய்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாணவியும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
திட்டமிட்டபடி
ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!
ஐபிஎல் தொடரின்
தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உயர்மட்ட குழுவின் கூட்டம் தொடர்பாக தேதிகள்
மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொன்னபடியே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.
இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஐசிசி யின் யர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கூட்டத்தின் தேதியை மாற்ற வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்து விட்டது.
இதனால் ஐபிஎல் தொடங்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி நடக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ போட்டிகளின்
அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதில் மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சாம்பியனான மும்பை அணியும் ரன்னரான சென்னை அணியும் மோத உள்ளது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட லீக் போட்டிகள் மே 17 ஆம் தேதியோடு முடிகிறது.
ரஜினியை மல்லுக்கு
இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்!
வண்ணாரப்பேட்டையில்
இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக போராட வீதிக்கு வருமாறு கவிதை ஒன்றை
எழுதியுள்ளார் திமுக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன்.
சமீபத்தில்
தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்த
சட்டம் நாட்டுக்குத் தேவை என்றும் அதனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும்
அப்படி ஏதேனும் நடந்தால் முதல் ஆளாக நான் களத்துக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வண்ணாரப் பேட்டையில் இந்த சட்டத்துக்கு எதிராக அமைதியாக
போராடிக் கொண்டு இருந்த இஸ்லாமியர்களைக் காவல்துறை தாக்கியது. இதில் முதியவர் ஒருவர்
பலியானார். மேலும் பலரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து
சென்னை மற்றும் பல நகரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து
ரஜினியைப் போராட்டத்துக்கு அழைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் மீம்களும் பதிவுகளும்
பகிரப்பட்டு வருகின்றன. டிவிட்டரில் வீதிக்குவாங்கரஜினி என்றும், போராடவாரஜினிதாத்தா என்றும் ஹேஷ்டேக் டிரெண்டாகியது.
இந்த ஹேஷ்டேக்குகளை இணைய உடன்பிறப்புகள் பகிர்ந்து வந்தனர். அத்தோடு நில்லாமல் திமுக வைச் சேர்ந்த கவிஞரான மனுஷ்யபுத்திரன்
ரஜினியை போராட்டத்துக்கு அழைக்கும் விதமாகக் நெடுங்கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!
தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தின் ஒரத்த நாடு பகுதி அருகே காதலித்துவிட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நாடக காதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புகழ் என்னும் பெயர் கொண்ட இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் மிகவும் பிடித்துப் போன காரணத்தால் வீட்டில் எதுவும் சொல்லாமல் இருவர் வீட்டு பெற்றோருக்கு தெரியாமல் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இதனையடுத்து, வேலையின் காரணமாக காதலன் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிது. பின்னர் தனது காதலனுக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் செய்ய இருப்பதாக அருணாவிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சமீப காலத்தில் காதலித்து பெண்களை ஏமாற்றும் நாடக காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாடக காதல் சம்பவங்களை மையமாக வைத்து திரெளபதி என்ற திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!!
திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வீடியோ மற்றும் படங்களாக மிக வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு அதிமுக மற்றும் பாமக கட்சிகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டி டுவிட் செய்திருந்தார்.
If a photo of the person I published is not from anti CAA protests but from a Road traffic accident as pointed out by few friends and well wishers., I sincerely apologize and will be double more careful in posting pictures from unauthorized sources.#My_Apologies. pic.twitter.com/ol3q6JnOd3
டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இதற்கு காரணம் ஆகிய அதிமுக அரசு மற்றும் ராமதாஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாஜக அமல்படுத்தி CAA சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக மற்றும் பாமக ஆதரவு வாக்கின் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைக்கு காரணம் என்று பதிவு செய்திருந்தார். அதில் ஒரு இளைஞர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருப்பது போற்றும் இன்னொரு படத்தையும் தவறாக பயன்படுத்தி இருந்தார். இந்த இரண்டு படங்களுமே போராட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத படங்களாக பின்பு ஆதாரத்துடன் விளக்கப்பட்டது.
பின்னர், தான் டுவிட்டரில் பதிவிட்டது உறுதி செய்யப்படாத படங்கள்தான் போராட்டத்தில் நடந்த சம்பவங்கள் அல்ல என்றும், விபத்தில் காயம் பட்டவர் என்றும் அறிந்த பிறகு அப்பதிவை நீக்கிவிட்டு மறுபதிவில் கவனம் இல்லாமல் பதிவிட்டதாக ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். ஒரு எம்பியாக இருந்து கொண்டு உறுதி செய்யாத தகவலை பதிவு செய்யலாமா என்று பலர் கேள்வி எழுப்பினர். சிலர் பாராட்டியும் வருகின்றனர்.
இவரின் செயலுக்காக அதிமுக மற்றும் பாமக கூட்டணியினர் இடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!
திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் சந்தை ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். படிக்க செல்லும் இடத்தில் மாணவிகள் துடைப்பத்துடன் பாத்ரூம் கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது.
இப்பள்ளியின் மாணவிகள் சீருடை அணிந்து கழிவறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் புகைப்படங்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ள நிலையில், தமிழக மாணவர்களை கழிவறை கழுவுதல் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என்று சிலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலும் தடுக்க எந்த நடிவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இந்த சம்பவம் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் சொந்த மாவட்டத்தில் நடந்ததாகும். சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்விற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றபோது, ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து காலில் இருந்த செருப்பை கழட்டிய சர்ச்சையான விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த நிகழ்வுக்காக அமைச்சர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் பள்ளி மாணவர்களை ஆசரியர் ஒருவர் சுத்தம் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் கண்டித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதே கல்விதான் என்பதை தெரிந்தும் இதுபோன்ற தேவையற்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவது மிகத்தவறான விஷயம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: நடிகர் ரஜினியை போராட்ட களத்திற்கு வருமாறு இணையத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய ரஜினிகாந்த், போர் வரும் நேரத்தில் நிச்சயம் போராடுவோம் என்று பேசியிருந்தார். இதன்பிறகு துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய பேச்சுகளும் சர்ச்சையான விவாதங்களை உண்டாக்கியது.
இந்நிலையில், சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். கைது செய்யபட்ட போராட்டகாரர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். தனது உரிமைக்காக போராடும் வேளையில், மேடை மட்டும் வசனம் பேசிவிட்டு களத்திற்கு வராத ரஜினியை வீதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இன்று டுவிட்டரில் வீதிக்கு வாங்க ரஜினி என்றும், போராட வா ரஜினி தாத்தா என்றும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ திருத்த சட்டத்தை ஆதரித்த காரணத்தால் தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. போராட்டம் நேற்றும் கலைந்துவிட்ட நிலையில் இன்று மீண்டும் சில இடங்களில் பாஜகவையும், ரஜினியையும் விமர்சித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
ஒரு கைதி
மருத்துவர் ஆன கதை!கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்!
கர்நாடக மாநிலத்தைச்
சேர்ந்த சுபாஷ் என்பவர் சிறையில் வெளிவந்து தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், குல்பர்கா எனும் மாவட்டத்திலுள்ள போஸ்கா எனும் பகுதியைச் சேர்ந்தவர், சுபாஷ் பாட்டீல் என்பவர்.
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பின் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த
போது ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றார். தனது நண்பரின் மனைவியுடன்
ஏற்பட்ட கள்ளக்காதலால் நண்பரை அவரது மனைவியோடு சேர்ந்து கொலை செய்ததுதான் அவர் மீதான
குற்றம்.
சுபாஷ் 14 ஆண்டுகளாக, சிறையில் இருந்த
போது தனது குற்றத்தை நினைத்து வருந்தி அதிலிருந்து மீள முடிவு செய்துள்ளார். மருத்துவப்
படிப்பை மேற்கொண்டதால் சிறையில் உள்ள மருத்துவர்களுக்கு அவர் மருத்துவ உதவிகளை செய்துள்ளார்.
அப்போது அவருக்கு வெளியில் சென்று மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற யோசனை
உதித்துள்ளது. இதனையடுத்து நன்னடத்தைக் காரணமாக 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஒவ்வொரு துறவிக்கும் கடந்தகாலம் ஒன்று உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு’
எனக் கூறினார். மேலும் ’ ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகத் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பேன்’
எனக் கூறி இருந்தார்.
ராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு பல்கலைக்கழகம் அனுமதி அளிக்க 2019 ஆம் படிப்பை முடித்தார். அதன் பிறகு ஒரு வருடம்
பயிற்சி மருத்துவராக வேலை செய்து வந்தார். தற்போது அந்த பயிற்சியையும் முடித்து மருத்துவர்
சான்றிதழையும் பெற்றுள்ளார்.
’சிறையிலிருந்து வெளியேறிய பின் மீண்டும் நல்ல வாழ்க்கையை தொடர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன’ என கூறியுள்ளார் முன்னாள் கைதியும் இன்னாள் மருத்துவருமான சுபாஷ்.