Home Blog Page 5799

இதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை ! விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் !!

0

இதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை ! விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் !!

அசுரன் மேடையில் குருவி படத்தின் 150 ஆவது நாள் விழா பற்றி தான் பேசியதற்கு நடிகர் பவன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்களுள் அசுரனும் ஒன்று. கிட்டதட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படும் இந்த படம் வெளியான போது தனுஷ் லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அதனால் படத்தின் விளம்பரங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் அசுரன் படத்தின் 100 ஆவது நாள் விழா நடைபெற்றது. இதில் தனுஷ், வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு மற்றும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பவன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் படத்தின் அருமை பெருமைகளைப் பேச நடிகர் பவன் மற்றும் ஆர்வ மிகுதியில் விஜய்யின் குருவி படத்தைக் கலாய்த்து விட்டார்.

இதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை ! விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் !!

பவன் பேச்சில் ‘ நான் இதற்கு முன்னதாக விஜய் நடித்த குருவி திரைப்படத்தின் 150 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்டேன். ஆனால் அந்த படத்தின் வெற்றியின் உண்மைத்தன்மை எனக்குத் தெரியாது. ஆனால் அசுரன் உண்மையான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த விழா நடப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.’ எனத் தெரிவித்தார். பவனின் பேச்சால் விழா மேடையில் அசௌகர்யமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து பேசிய தனுஷ் பவனின் பேச்சை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என நாசூக்காக சொன்னார். ஆனாலும் இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. விஜய் ரசிகர்கள் பவனின் இந்த பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பவன் ‘ நான் விஜய்யை சிறுமைப் படுத்துவதற்காக எதையும் சொல்லவில்லை. இதுபோன்ற விஷயங்களுக்காகதான் நான் விழா மேடைகளில் பேசுவதில்லை. ஆனால் அசுரன் விழாவில் என்னையும் அறியாமல் பேசிவிட்டேன். எனது பேச்சுக்காக வருந்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த பேட் கம்மின்ஸின் பவுன்ஸர் ! கன்கஷன் என சந்தேகம் !

0

ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த பேட் கம்மின்ஸின் பவுன்ஸர் ! கன்கஷன் என சந்தேகம் !

நேற்றைய போட்டியில் பேக்கிங் செய்யப்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் தற்போது மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இந்திய அணி நேற்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இந்திய விக்கெட் கீப்பர் தடுப்பாட்டம் ஆடி  தடுமாறிய இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.  மொத்தம் 28 ரன்கள் சேர்த்து அவர் பேட் கம்மின்ஸ் ஆக்ரோஷமான பவுன்சரை எதிர்கொண்டபோது பந்து ஹெல்மெட்டில் தாக்கி அவர் அவுட்டானர்.

மிக வேகமாக வீசப்பட்ட இந்த பவுன்சர் தாக்கியதில் அவருக்கு தலையில் கண்கஷன் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங் செய்தபோது அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை.  அவருக்கு பதிலாக மற்றொரு வீரரான கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இதையடுத்து தற்போது ரிஷப் பண்ட் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

ஒருவேளை அவரது தலையில் ஏற்பட்ட காயம் பலமாக இருந்து அவர் ஓய்வெடுக்க வேண்டிய நிலை வந்தால் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

ராமதாஸின் பெயரில் மாற்றப்பட்ட வன்னியர் சங்க அறக்கட்டளை ? விளக்கம் அளித்த பாமக தலைவர் ஜி கே மணி !

0

ராமதாஸின் பெயரில் மாற்றப்பட்ட வன்னியர் சங்க அறக்கட்டளை ? விளக்கம் அளித்த பாமக தலைவர் ஜி கே மணி !

விழுப்புரத்தருகில் இருக்கும் வன்னியர் கல்வி அறக்கட்டளை பாமக நிறுவனர் ராமதாஸ் பெயரில் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து பாமக தலைவர் ஜி கே மணி விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரத்தில் இயங்கி வரும் வன்னியர் கல்வி அறக்கட்டளை கோப்புகளில் மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் மாற்றப்பட்டது. இது சம்மந்தமான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சலசலப்பை உருவாக்கின. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக பாமக தலைவர் ஜி கே மணி விளக்கம் அளித்துள்ளார்.

பா ம க தலைவர் ஜி கே மணி அறிக்கை :-

அறக்கட்டளை பெயர் மாற்றம் குறித்து ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை அனைத்தும் உண்மைகளை மறைத்து, உள்நோக்கத்துடன் வெளியிடப்படுபவை; ஆகவே அவை கண்டிக்கத்தக்கவையாகும்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களின் கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும். மருத்துவர் அய்யா அவர்களுக்கு தற்போது முத்துவிழா ஆண்டு நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான மருத்துவர் அய்யாவின் பெயரை அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், அறக்கட்டளையின் அறங்காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு அவர்களை கவுரவப்படுத்தும் வகையில், அறக்கட்டளையின் கீழ் சட்டக்கல்லூரி செயல்பட்டு வரும் பகுதிக்கு மாவீரன் ஜெ.குரு வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல் தான் இப்போது அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மிகவும் சாதாரணமான நடைமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸின் பெயரில் மாற்றப்பட்ட வன்னியர் சங்க அறக்கட்டளை ? விளக்கம் அளித்த பாமக தலைவர் ஜி கே மணி !

அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ள போதிலும், அதன் நிர்வாகத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவர் வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.. அந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவர் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே மருத்துவர் அய்யா செயல்பட்டு வருகிறார். அன்றாட நிர்வாகத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக அறக்கட்டளைக்கு நான் தான் தலைவராக செயல்பட்டு வருகிறேன். எனது தலைமையில் தான் அறங்காவலர் குழு கூடி அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயரை சூட்ட தீர்மானித்தது. அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யாவின் பெயரை சூட்டியதில் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்.

பெயர் மாற்றத்திற்குப் பிறகும் அறக்கட்டளையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சேவை நோக்கத்துடன் தரமான கல்வி, இப்போது வழங்கப்படுவதைப் போலவே எப்போதும் வழங்கப்படும். இந்த உண்மைகளையும், அறக்கட்டளை குறித்த விதிமுறைகளையும் அறியாமல் கட்டுக்கதைகளை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் எழுதும் போக்கை சில முதன்மை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கைவிட வேண்டும். மாறாக, உள்நோக்கத்துடன் திட்டமிட்டுஅவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

 

 

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்; ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் !

0

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்;  ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் !

துக்ளக் பொன்விழா ஆண்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சில சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  விழாவில் மோடியின் வாழ்த்துரை வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளார்.

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்; ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் !

விழாவில் பேசிய ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லலாம். சோவை வளர்த்துவிட்டது இருவர்தான். ஒருவர் பக்தவச்சலம் மற்றொருவர் கலைஞர். கலைஞர் துக்ளக்குக்கு இலவச விளம்பரம் செய்வதாகவே என்னிடம் சோ  கூறியிருக்கிறார்.  சோ போன்ற பத்திரிகையாளர்கள் இப்போது மிக மிக அவசியமாக தேவைப்படுகின்றன.  சமுதாயமும் அரசியலும் இப்போது கெட்டு விட்டது.  பாலில் தண்ணீர் கலந்து போல செய்திகளை திரிக்காமல் உண்மையான செய்திகளை பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.’ எனக் கூறினார்.

துக்ளக் மற்றும் முரசொலி ஆகிய பத்திரிகைகளை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சமூகவலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளது இதனை திமுக காரர்கள் வலுவாக எதிர்த்துள்ளனர் ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது ட்விட்டரில்’ முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ எனக் கூறி ரஜினியை கலாய்த்துள்ளார்.

சமீபகாலமாக ரஜினி மேடைகளில் நல்லது பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் எது பேசினாலும் அது இதுபோல விமர்சனங்களை எழுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்லில் பம்மல்; பவுலிங்கில் பதுங்கல் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மோசமான சாதனை !

0

பேட்டிங்லில் பம்மல்; பவுலிங்கில் பதுங்கல் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மோசமான சாதனை !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவைப் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி , ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முன்னணி வீரர்கள் சொதப்ப இன்றைய நிதானமான ஆட்டத்தை விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மட்டும் நிலைத்து நின்று அணியை நிலைநிறுத்தினர். அதன் பின்னர் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட இந்திய அணி 49.5 அவர்களுக்கு 255 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் பேட் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா 2  விக்கெட்டுகளும் சாம்பா மற்றும் ஆஷ்டன் ஆகர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பேட்டிங்லில் பம்மல்; பவுலிங்கில் பதுங்கல் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மோசமான சாதனை !
finch century

சரி பேட்டிங்கில் தான் சொதப்பினார்கள் என்று பார்த்தால் பவுலிங்கில் அதற்கு மேல் சொதப்பினார்கள். ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள். சிறப்பாக விளையாடிய வார்னர் மற்றும் பின்ச் இருவரும் விக்கெட்டை இழக்காமல் சதம் அடித்து அசத்தினார். கடைசிவரை ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாற  39.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு தேவையான ரன்களை சேர்த்தது. இதன் மூலம் முதன் முறையாக இந்தியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

கடைசியாக இந்திய அணி 2005 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.அதன்பின்னர் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது.

அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால்

0

அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால்

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் அந்த படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். 22 வருடங்களுக்கு முந்தைய ஹிட் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால்,செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியன் 2 படம் பற்றி கேட்கப் பட்டபோது, ’படத்தில் நான் 85 வயது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேஅ. இதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள். எதாவது சொன்னால் என்னைக் கொன்று விடுவார்கள்’ என வெகுளியாகக் கூறியுள்ளார்.

இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிந்தால் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு சட்டைப் போட்டுவரக் கூடாது – ரஜினி கலந்து கொள்ளும் விழாவில் கட்டுப்பாடு !

0

கருப்பு சட்டைப் போட்டுவரக் கூடாது – ரஜினி கலந்து கொள்ளும் விழாவில் கட்டுப்பாடு !

நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு தொடக்க விழாவில் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கை  50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை முன்னிட்டு தற்போதைய நிர்வாகம் அதை இன்று மாலை கொண்டாட முடிவு செய்துள்ளது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. பொன்விழா மலரின் முதல் பிரதியை பெற்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்

இந்த விழாவிற்கான அழைப்பிதழில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு ஒன்று சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.  இன்று மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவை முன்னிட்டு விழா பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில் முதல் குறிப்பாக விழாவில் நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்துரை ஒளிபரப்பப்படும் என்றும், மாலை ஐந்து முப்பது மணிக்கு மறைந்த சோ அவர்களின் முந்தைய ஆண்டு விழா பேச்சிலிருந்து சில பகுதிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது குறிப்பாக விழாவிற்கு வருபவர்கள் கறுப்பு உடையுடன் வரக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல விழாவிற்கான அழைப்பிதழ் அறிவில்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிந்து வந்த சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவித்த சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் !

0

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவிப்பு சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் !

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிகில் படத்துக்குப் பின்னர் விஜய் நடித்து வரும்  படத்துக்கு மாஸ்டர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டனி வழியே மற்றும் சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதன் முதல் லுக் போஸ்டர் புத்தாண்டின் போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அதே சமயம் அது ஹாலிவுட் படம் ஒன்றின் போஸ்டரின் காப்பி எனவும் கேலி செய்யப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் மாஸ்டர்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் எப்போது எனக் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதை வெளிப்படுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனம். பொங்கல் பண்டிகையான நாளை மாலை 5 மணிக்கு ’மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே மாஸ்டர் செகண்ட் லுக் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரென்ட் ஆக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவித்த சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் !

ஏற்கனவே வெளியான முதல் போஸ்டரில் விஜய் மட்டும் இருந்ததால் இரண்டாவது போஸ்டரில் விஜயுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப் படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதால் இது இந்த அறிவிப்பு அவர் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் – மீண்டும் குடும்ப செண்ட்டிமெண்ட் கதையில் தளபதி !

0

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் – மீண்டும் குடும்ப செண்ட்டிமெண்ட் கதையில் தளபதி !

விஜய் நடிக்கும் அவரது அடுத்த படமான தளபதி 65 –ஐ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்காத நிலையில் இப்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அதிக அளவில் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்பு ஆக்ஷன் வரூட்டில் நுழைந்த பின்பு அவர் குடும்பக் கதைகளில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். தற்போது மீண்டும் ஒரு குடும்ப கதையில் நடிக்க விருப்பப்படும் அவர் இதற்காக இயக்குனர் பாண்டிராஜைத் தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடைக்குட்டி சிங்கம்,  நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களின் மூலம் குடும்ப ஆடியன்ஸ் தியேட்டருக்கு இழுக்கும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் – மீண்டும் குடும்ப செண்ட்டிமெண்ட் கதையில் தளபதி !
பாண்டிராஜ்

ஏற்கனவே இவர் சன் பிக்சர்ஸ் தயாரித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கி வெற்றி படமாக்கிக் காட்டினார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ், விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க பாண்டிராஜை பரிந்துரைத்துள்ளது. இதை அடுத்து பாண்டிராஜிடம் கதை கேட்ட நடிகர் விஜய் அந்த கதை பிடித்துள்ளதாக கூறியதாகவும் அடுத்த படமாக இதையே நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பசங்க படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பாண்டிராஜ் அதன் பின்னர் வம்சம், மெரினா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம்  மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா! 255 ரன்களுக்கு ஆல் அவுட் !!

0

ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா!  255 ரன்களுக்கு ஆல் அவுட் !!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  அதன் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.  இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 10 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் வந்த ராகுல் தொடக்க ஆட்டக்காரர் தவானுடன் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்களை சேர்த்தனர். அரைசதத்தை நெருங்கிய லோகேஷ் ராகுல் 47 ரன்களில் எதிர்பாராதவிதமாக அவுட்டானார்.

அதற்கடுத்து வந்த கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இடையில் அரைசதம் அடித்து நல்ல நிலையிலிருந்த ஷிகர் தவானும் 74 ரன்களில் அவுட் ஆக இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா! 255 ரன்களுக்கு ஆல் அவுட் !!

அதன்பின் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறிது நேரம் நிலைத்து நின்று முறையே 28 மற்றும் 25 ரன்கள் சேர்த்தனர்.  இதனால் இந்திய அணி ஓரளவு கௌரவமாக ஸ்கோரை எட்ட முடிந்தது. அவர்கள் இருவரும் அவுட் ஆனதும் வந்த பந்து வீச்சாளர்கள் வரிசையாக ஆட்டமிழக்க இந்தியா 49.1 ஓவரில் 255 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் வேகத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் இந்திய ரசிகர்களை ஏமாற்றியுள்ளது இந்திய அணியின் பவுலிங் வலுவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்தியாவால் இந்த போட்டியில் வெல்ல முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.