Home Blog Page 5800

தமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..? அமைச்சர் கேள்வி!

0

தமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..? அமைச்சர் கேள்வி!

மத்தியில் பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எத்தனை நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் என தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாகிவிட்டது என்று கூறிய பாஜகவின் முன்னாள் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தனது கட்சியில் எந்த பதவியும் கிடைக்காத காரணத்தாலும், வெறுப்பினாலும் தமிழக அரசை குற்றம் சாட்டுகிறார் என்று கூறினார்.

தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதால் மத்திய அரசு விருதுகள் அளித்துள்ளது என்றும், தேவையற்ற குற்றச்சாட்டை எங்கள் மீது கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

நடுவண் அரசால் தமிழ்நாடு பாராட்டப்படும் சூழலில் பொய்யான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் நடுவண் அரசை எதிர்க்கிறாரா..? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

0

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

தற்போது ஈரான் அமெரிக்கா என இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வரும் இந்த போர்ப் பதற்றம் அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இவ்வாறு இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் மோதல் போக்கால், சில நாட்களுக்கு முன்பு ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் பயணித்த பயணிகள் அனைவரும் சம்பந்தமே இல்லாமல் இறக்க நேரிட்டது.

இதனைக்கண்ட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தன. இந்நிலையில் இந்த சம்பவத்தால் உச்சகட்ட கோபத்தில் உள்ள கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், “ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தான் தற்போது நிலவும் இந்த நிலைக்குக் காரணமாகும்,” என பகிரங்கமாக அந்த நாடுகளை குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னதாக சமீபத்தில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதியான காசெம் சுலைமானியை யாருமே எதிர்பார்க்காத நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கட்டளையின் பேரில் அந்நாட்டு ராணுவம் கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் நடந்த அதே நாளில் தான், ஈரானிலிருந்து உக்ரைனுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைனின் பயணிகள் விமானமும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்திருந்த 176 பேரும் மரணமடைந்தார்கள். இறந்தவர்களில் 57 பயணிகள் கனட நாட்டுக் குடிமக்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகள் அனைத்தையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இந்த விபத்திற்கு ஈரான் தான் காரணமாக இருக்கக் கூடும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.மேலும் அவர் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார்.

இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் தரப்பு விளக்கமளித்தது. இதனால் இந்த பிரச்சனை மேலும் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூப், “இரு நாட்டுக்கும் இடையில் பதற்றநிலை இருக்கவில்லை என்றால், இன்று விபத்தில் இறந்த அந்த கனட குடிமக்கள் அவர்களது குடும்பங்களோடு வீட்டில் இருந்திருப்பர். 

அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக ஈரான் இருக்க வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் அனைத்தும் தெளிவாக இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் அங்கிருக்கும் தற்போதைய பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளும் முக்கிய காரணமாகத் தான் இருக்கின்றன என்று அமெரிக்காவை விமர்சித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!

0

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!

தமிழர்கள் கொண்டாடும் நிகழ்வுகள் எல்லாமே பல்வேறு நல் கருத்துகளை அடங்கிய வரலாற்று பெட்டகம்தான். அந்த வகையில் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும், தனக்கும் சேர்த்து கொண்டாடப்படும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும்.

பொங்கலின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த போகிப் பண்டிகையின் போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற வாசகத்துக்கு ஏற்பதமிழர்கள் அனைவரும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் வெளியேற்றும் வகையில் அதை எரித்து பொங்கலைக் கொண்டாடுவார்கள். 

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!
போகிப் பண்டிகை

அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று, வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை எரிப்பது மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற தீய எண்ணங்களையும் நெருப்பில் போட்டு போக்குவதையே போகிப் பண்டிகை என்கிறோம். இதைத் தான் இருவரியில் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்று நம் முன்னோர்கள் சுருக்கமாக கூறினர்.

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!

இந்த போகிப் பண்டிகையில் வீட்டையும், மனதையும் புதுப்பித்து வருங்காலத்தில் வேளாண்மை, கைத்தொழில், முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப் படுகிறது. இதன் கருத்தாகவே “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிற வரலாற்று சொல்லாடலை அடிக்கடி பயன்படுத்துகிறோம். மார்கழியின் கடைசி நாளாகவும், மாற்றத்தின் தொடக்க நாளாகவும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வீட்டின் முகப்பில் அரிசி கோலமிட்டு பல்லுயிர் ஓம்புதலையும், கொத்து சாணியில் உருவம் செய்து கடவுளை வழிபடும் கலாச்சாரத்தையும் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே இந்த போகிப் பண்டிகை.

ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்த நெல்லை அறுவடை செய்து இந்திர கடவுளுக்கு வணங்குவதும், புதிய நெல்லின் பச்சரிசியை கொண்டு பொங்கலிட்டு வழிபடுவதும் காலம்காலமாக நடந்துவரும் தமிழர் கலாச்சாரமே. உலகின் பண்பட்ட நாகரிகம் என்றால் அது தமிழர்களின் நாகரிமே, இதற்கு பொங்கல் பண்டிகை போன்ற மரபுவழி கலாச்சாரங்களே சாட்சியாகும்.

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!

வறுமை ஒழிந்து வளமுடன் வாழ அனைவருக்கும் நியூஸ்4 தமிழ் சார்பாக இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கன்னியாகுமரி எஸ் ஐ கொலை வழக்கு! துப்பாக்கி சப்ளை செய்தவர் பெங்களூருவில் கைது!

0

கன்னியாகுமரி எஸ் ஐ கொலை வழக்கு! துப்பாக்கி சப்ளை செய்தவர் பெங்களூருவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பீதியைக் கிளப்பிய எஸ்.ஐ. யின் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்ததாக சந்தேகப்படும் நபரைப் போலிஸாரைக் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்  ஐ வில்சன் என்பவர் கடந்த வாரம் இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த இருவரும் அங்கிருந்த தப்பி தலைமறைவாகினர்.  குற்றவாளிகளை தமிழக மற்றும் கேரள போலிஸார் தேடி வருகின்றனர்.

கொலை குற்றவாளிகளென சந்தேகிக்கப்படும் இருவரான அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேரின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இது திட்டமிட்ட கொலைதான் என கேரளப் போலீஸார் அறிவித்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க உதவுபவர்களுக்கு 7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அதற்கான அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி எஸ் ஐ கொலை வழக்கு! துப்பாக்கி சப்ளை செய்தவர் பெங்களூருவில் கைது!

இதையடுத்து கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி எப்படி அவர்களிடம் வந்தது என்ற விசாரணையில் மும்பையைச் சேர்ந்த இஜாஸ் பாஷா என்பவரை போலிஸார் சந்தேகித்து அவரைக் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து நான்கு துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளனர். அதில் மூன்று துப்பாக்கிகள்  ஏற்கெனவே பெங்களூருவில் கைதான ஐ எஸ் தீவிரவாதிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்காவது துப்பாக்கிதான் எஸ்.ஐ வில்சன் கொலையில் பயன்படுத்த பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

இதையடுத்து க்யூ பிரிவு போலீஸார் இஜாஸ் பாஷாவை பெங்களூவில் கைது செய்து சென்னை அழைத்து வந்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையொல் அடைத்துள்ளனர்.

அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி !

0

அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி !

திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து அஜித் திரௌபதி படத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா எனும் சர்ச்சை எழுந்துள்ளது.

திரௌபதி எனும் படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி 3ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியது. அதன் டிரைலர் எதிர்பார்த்தை விட அதிக பார்வையாளர்களை சென்று சேர்ந்தது. வட தமிழக மாவட்டங்களில் நடக்கும் இரு வேறு சாதிகளுக்கு இடையில் நடக்கும் காதல்களால் உருவாகும் பிரச்சனைகளை (நாடக காதல் என படத்தில் சொல்லப்பட்டுள்ளது) மையப்படுத்தி உருவாக்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

இதனால் இந்த படத்தை ஒரு சாதியினருக்கு எதிரானப் படம் என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் உண்மையை எடுத்து சொல்லும் படம் எனவும் இருவேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த படத்தில் அஜீத்தின் மைத்துனர் மற்றும் ஷீலா ராஜகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி !

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் மைத்துனர் நடித்திருப்பதால் அவரிடம் படத்தை காட்டி ஆதரவு பெற்றதாக ஒரு கருத்து நேற்றுமுதல் பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்துவது போல அஜித்துடன் இயக்குனர் மோகன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் ட்விட்டரில் வெளியாகி பரபரப்பானது.

அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி !

ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என  திரௌபதி படத்தின் இயக்குனரே விளக்கியுள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ’வதந்திகளைப் பரப்பாதீர்கள்… தல திரௌபதி திரைப்படத்திற்கு எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் உலாவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ரசிகராக நான் அவருடன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் மட்டுமே’ என விளக்கம் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை – சென்னையைத் தெறிக்கவிட்ட சம்பவம் !

0

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை – சென்னையைத் தெறிக்கவிட்ட சம்பவம் !

சென்னையில் உள்ள பல பெண்கள் விடுதிகளில் நுழைந்து நூதனமான மொபைல் போன்களைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் பல இடங்களில் உள்ள பெண்கள் விடுதிகளில் நுழைந்த இளைஞர் ஒருவர் நூதனமாக மொபைல் போன்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் சரியாக காலை 7 மணிக்கு வரும் அந்த இளைஞர் வைஃபை இந்த பிரச்சினை இருப்பதாக கூறி அதை சரிசெய்ய வந்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை நம்பிய பெண்கள் அனைவரையும் ஒரே இடத்தில் மொபைல் போன்களை சார்ஜ் போட சொல்லியுள்ளார்.

அதை நம்பி  பெண்கள் ஒரு இடத்தில் சார்ஜ் போட அசரும் நேரம் பார்த்து அங்கிருந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.  இதனையடுத்து பெண்கள் போலிஸில் புகார் கொடுக்க போலிஸார் விசாரணையில் இறங்க இதுபோல பலவிடுதிகளில் இதுவரை 34 பெண்களின் செல்போன்களை திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலிஸார் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ய அவர் ஹெல்மெட்டை கழட்டாமல் இருந்ததால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து அருகில் உள்ள பகுதியில் சிசிடிவி கேமரா கேமராக்களை சோதனை செய்தபோது சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர். தண்டையார்பேட்டை வ உ சி நகரை சேர்ந்த பாலாஜி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவரை கைது செய்த போலீசார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ?

0

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ?

டெல்லி ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த நடிகை தீபிகா படுகோனேவின் விளம்பரங்களைப் புறக்கணிப்போம் என சமுக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திருத்த போராட்டத்தில் மாணவர்களை போலிஸாரும் மர்மக் கும்பல்களும் தாக்கினர். இதனால் மாணவர்களின் போராட்டத்துக்கு நாடு தழுவிய ஆதரவு கிடைத்தது. இதனால் மாணவர்களின் போராட்டத்துக்கு போராட்டத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அதில் கலந்து கொண்டவர்களில் இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் ஒருவர். மாணவர்களை சென்று  சந்தித்த அவர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்.

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ?

அன்று முதல் அவர் மேல் பாஜக ஆதரவாளர்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர் நடித்து வெளியான சப்பாக் எனும் திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்தது. அதற்காக தனியாக ஹேஷ்டேக்குகள் உருவாகி ட்ரண்ட் ஆகின. இதனால் பாஜக ஆதரவு மாநிலங்களில் கடந்த வாரம் வெளியான சப்பாக் படம் குறைவான வசூலையே பெற்றது. அத்துடன் இல்லாமல் இப்போது தீபிகா படுகோனே நடித்துள்ள விளம்பரங்களை புறக்கணிக்க வேண்டுமென அடுத்ததாக  குரல்கள் எழுந்துள்ளன.

இதனால் பயந்த தீபிகாவின் விளம்பர நிறுவனங்கள் சில நாட்களுக்கு அவரது விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என தொலைக்காட்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 20  நிறுவனங்களுக்கு அம்பாசிடராக இருக்கும் தீபிகா படுகோன் இதனால் பலகோடி ரூபாய் வருவாயை இழக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் அவர் நடித்த விளம்பரங்கள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் சேர்த்து 11 மணிநேரம் ஒளிப்பரப்பாகி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையில் இந்தியா செய்த மோசமான தவறு இதுதான் – பவுலருக்கு கம்பீர் முழு ஆதரவு !

0

உலகக்கோப்பையில் இந்தியா செய்த மோசமான தவறு இதுதான் – பவுலருக்கு கம்பீர் முழு ஆதரவு !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலானப் போட்டித் தொடர் குறித்து பேசியுள்ள கம்பீர் முகமது ஷமியின் தற்போதைய செயல்பாடு குறித்து பெருமையாகப் பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் அவ்வப்போது கிரிக்கெட் பற்றிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு கிரிக்கெட் ரசிகராகவே இப்போதும் காட்டிக் கொள்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று தொடங்குவதை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.

உலகக்கோப்பையில் இந்தியா செய்த மோசமான தவறு இதுதான் – பவுலருக்கு கம்பீர் முழு ஆதரவு !

அதில் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் உள்ள வேகம் மற்றும் துல்லியம் ஆகியவற்றைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பேச்சில் ’ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர்ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த வீரர்களான வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோருக்கு எப்படி வீசுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது நல்ல விஷயமாகும்.

ஷமியிடம்  நல்ல வேகம் மற்றும் துல்லியம் உள்ளது. அவரை உலக கோப்பை அரை இறுதியில் நியுசிலாந்துக்கு எதிராக விளையாட விடாமல் செய்ததே மிகப்பெரிய தவறாகும். நல்ல பார்மில் இருந்த அவரை உட்கார வைத்து தான் மிகப்பெரிய சிக்கல். இந்திய மைதானங்களில் ஷமி நன்றாக வீசக்குடியவர் அவர் இப்போது இருக்கும் செயல்திறனால் இந்திய அணிக்கு கவலை இல்லை என்றே நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் கோலி, ஸ்மித் ஒப்பீடு குறித்துப் பேசிய அவர் ‘வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஸ்மித்தை கோலியுடன் ஒப்பிடவே முடியாது. கோலி 11,000 ரன்களை சேர்த்துள்ளார். ஆனால் ஸ்மித்தோ இன்னும் 4000 ரன்களை கூட சேர்க்கவில்லை.’ என கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன் ? பரபரப்பில் கமலாலயம் !

0

பாஜக தலைவராகிறாரா  நயினார் நாகேந்திரன் ? பரபரப்பில் கமலாலயம் !

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ளார் இன்று மாலையில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் பாஜக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தமிழக தலைவர் பதவி வரை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சில மாதங்களாக தமிழக பாஜக தலைமை இல்லாமல் இயங்கி வருகிறது.  தலைவர் இல்லாமலேயே உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொண்டது.

இதையடுத்து எந்நேரமும் தலைவர் நியமிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இந்த பதவிக்கு வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் மற்றும் குப்பு ராமு ஆகியவர்களிடம் பெயரோடு நயினார் நாகேந்திரன் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை தமிழக பாஜக மாநிலத் தலைவராக யாரை நியமிக்கலாம் என அக்கட்சிக்குள் ஆலோசனை கடந்த சில மாதங்களாக  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை முதல் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என ஒரு செய்தி உலாவிக் கொண்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஆளும் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் ஒரு தலைவரை நியமிக்க இத்தனை மாத காலம் எடுத்துக்கொள்வது அக்கட்சி தமிழகத்தில் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

மத்திய அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச் ராஜா போன்றோரை பின்னுக்குத் தள்ளி நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவதற்கு மற்றவர்களை தமிழகத்தில் நெகட்டிவ் இமேஜ் இல்லாத தலைவராக அவர் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.

அசுரன் வெற்றி விழாவில் விஜய் படத்தைக் கலாய்த்த நடிகர் – பதறிய தனுஷ் !

0

அசுரன் வெற்றி விழாவில் விஜய் படத்தைக் கலாய்த்த நடிகர் – பதறிய தனுஷ் !

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் 100 ஆவது விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்களுள் அசுரனும் ஒன்று. கிட்டதட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படும் இந்த படம் வெளியான போது தனுஷ் லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அதனால் படத்தின் விளம்பரங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

அசுரன் வெற்றி விழாவில் விஜய் படத்தைக் கலாய்த்த நடிகர் – பதறிய தனுஷ் !

இதையடுத்து இப்போது சென்னையில் 100 ஆவது விழா நடைபெற்றது. இதில் தனுஷ், வெற்றிமாறன், தாணு மற்றும் பவன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் படத்தின் அருமை பெருமைகளைப் பேச நடிகர் பவன் மற்றும் ஆர்வ மிகுதியில் விஜய்யின் குருவி படத்தைக் கலாய்த்து விட்டார்.

பவன் பேச்சில் ‘ நான் இதற்கு முன்னதாக விஜய் நடித்த குருவி திரைப்படத்தின் 150 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்டேன். ஆனால் அந்த படத்தின் வெற்றியின் உண்மைத்தன்மை எனக்குத் தெரியாது. ஆனால் அசுரன் உண்மையான வெற்றியைப் பெற்றுள்ளது. விழா நடத்துவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.’ எனத் தெரிவித்தார். இதனால் விழா மேடையில் அசௌகர்யமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து பேசிய தனுஷ் ’இந்த விழாவில் நாம் பேசுவதில் எது நல்லதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். சரியில்லாததை விட்டு விடுங்கள்’ எனப் பேசி நிலைமையை சமாளித்தார்.

குருவி திரைப்படம் விஜய் நடிப்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக அறிமுகமான படம். அந்த தோல்வி அடைந்தாலும் அப்போது 150 நாட்கள் ஓடியதாக கலைஞர் தலைமையில் விழா எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.