Home Blog Page 5867

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

0

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

சக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த பதினொறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், சக மாணவர் ராகுல் என்பவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு, ராகுலின் நண்பரான மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவர் ராகுலை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மேலும் குற்றவாளி மணிகண்டனுக்கு உடந்தையாகஇருந்த பிரகாஷ்கார்த்திகேயன் மற்றும் நாராயணமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள குற்றவாளி மணிகண்டனையும், அவரது மற்றொரு நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் பெண்ககளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகிவருவது பெண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முற்று புள்ளி வைக்க கடுமையான சட்டத்தினை ஆளும் அரசுகள் கொண்டுவரவேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர்.

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

0

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

திமுகவும் அதன் கூட்டணி கட்சி என்று‌ சொல்லிக்கொண்டு இருக்கும் கூடாரங்கள் செய்யும் இந்து எதிர்ப்பு கொள்கைகளையும் அவர்களின் பித்தலாட்டங்களையும் தனது இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தோலுரித்து காட்டி வருகிறார் சமூக வலைத்தள போராளி மாரிதாஸ்‌.

நான்கு நாட்களுக்கு முன்பு திருமாவளவனை பற்றி பதிவிட்டு வீடியோ காணொளியை சன் டிவி நிறுவனம் முடக்கியது, இதனையடுத்து நேற்று திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வின் முகத்திரையை அம்பலப்படுத்தும் வீடியோவை வெளியிட்டார். இதனால் கடும் கோபமடைந்த திமுகவினர் மாரிதாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

மாரிதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து திமுக ஏவி விட்ட வெறி நாய் கூட்டம் என்னைத் தொந்தரவு செய்கிறது போன் செய்து. கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணி இல்லாத திமுக தலைமை மிரட்டி உருட்டி அமைதியாக்கத் துடிக்கிறது.

என்னை 7நாளும் 24மணி நேரமும் தொந்தரவு செய்ய ஒரு கூட்டத்தை ஏவி விட்டுள்ளது இந்த வெக்கம் கெட்ட கூட்டம்.

“செஞ்சுருவோம், உன்ன அத பண்ணிருவோம்” என்று மிரட்டும் கூட்டத்திற்கு அறிவே கிடையாது. கொஞ்சம் யோசிங்க சார்.

இந்துக்களை அவமானம் செய்து கொண்டிருப்பீர் அதற்குப் பதிலடி கொடுக்காமல் வேடிக்கை பார்க்க நான் ஒன்றுன் உணர்வற்ற பிணம் அல்ல.

நீங்கள் அனைத்து மதத்தினரைப் போல் இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையை மதிப்பளித்து விலகி நில்லுங்கள் என்கிறேன் அவ்வளவு.

ஆக எதையும் நிறுத்த முடியாது. மொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராக பேசும் சீக்கிரம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

உதயநிதி ஆதரவாளர்கள் தூக்கி போடும் பணத்திற்கு நாக்கை தொங்க போடும் இந்துகள் இருக்கலாம் உணர்வில்லாமல். ஆனால் என் போன்ற பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள் எதிர்வினை காட்ட.

என்று தெரிவித்துள்ளார். கூடவே மிரட்டல் விடுத்த நபர்களின் தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளார்.

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை

0

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை

4 சிறுமிகள் மாயமான விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து குஜராத் போலீசார் கடந்த இரு தினங்களாக பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை

அதன்பேரில் நேற்று முன்தினம் குஜராத் போலீசார் கர்நாடகாவின் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை நேற்றுடன் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இந்த சோதனைக்கு பிறகு குஜராத் போலீசார் அகமதாபாத் திரும்பினர் ஆனால் நித்தியானந்தா ஆசிரமத்தில் மேற்கொண்ட சோதனை குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர் இதனால் சிறுமிகள் ஆசிரமத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின

0

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் 81 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடத்தப்படுகிறது.

இதில் 13 தொகுதிக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது நக்சலைட் பாதிப்புள்ள மாநிலம் என்பதாலும் பல பகுதிகளில் பின்தங்கிய என்பதாலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. மொத்தம் 37 லட்சத்து 83 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின


மொத்தம் 4 ஆயிரத்து 862 வாக்குச்சாவடிகளில் 467 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். நிறைய இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு வன்முறை சம்பவங்கள் நடந்தன என போலீசார் தெரிவித்தனர்.

மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு நிறைந்தவுடன் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க பட்டது.

13 தொகுதிக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 63.12 சதவீத வாக்குகள் பதிவானது. அடுத்த கட்ட தேர்தல் வரும் டிசம்பர்7, 12,16 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன

மின்சார மீட்டரை தனியாரிடமிருந்து வாங்கலாம்! மின்வாரியம் அறிவிப்பால் தனியார் நிறுவனங்கள் மகிழ்ச்சி

0

மின்சார மீட்டரை தனியாரிடமிருந்து வாங்கலாம்! மின்வாரியம் அறிவிப்பால் தனியார் நிறுவனங்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் வீடு உள்பட அனைத்து கட்டுமானங்களுக்கும் புதிய மின் இணைப்பு வழங்கும் போது மின்சார வாரியத்தின் சார்பில் மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்க மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரை வழங்குவதற்கு மின்சார வாரியம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றது. இதற்கான கட்டணத்தை மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

இதற்கு மாற்றாக, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து மீட்டர் வழங்க தாமதம் ஏற்பட்டால் மின்சார நுகர்வோர் தங்களுக்கு தேவைப்படும் மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்கி கொள்ளலாம். எந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு விலையில் வாங்கலாம் என்ற விபரங்கள் மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி,
ஒரு முனை மின் இணைப்பிற்கான மின் மீட்டரை 670 ரூபாய்க்கு வாங்கலாம்.
இதேபோல் மும்முனை உள்ளிட்ட ஒவ்வொரு வகை மின் மீட்டரின் விலையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

வெளியில் இருந்து மின் மீட்டர் வாங்கிய பின், அந்த விபரத்தை மின் நுகர்வோர் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதை பரிசோதித்து பின் மின் வாரிய ஊழியர்கள் பயன்பாட்டுக்கு பொருத்துவார்கள். இதற்கான கட்டணதொகையை மின்சார பயன்பாட்டு கட்டணத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!

0

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்
தமிழகம் முழுவதும் பலத்த மழை பொழிந்தது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


டெல்டா மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்தது இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது சென்னை சுற்றியுள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!

இந்நிலையில் முதல் தென் கிழக்கு வங்கக் கடல் வரை நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது அதை ஒட்டியுள்ள வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.


குறிப்பாக திருப்பூர் ஈரோடு கோவை நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களும் மிதமானது முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் அக்டோபர் 1 முதல் இன்று வரை சென்னையில் 39 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் அது இயல்பை விட மூன்று சென்டிமீட்டர் அதிகம் எனவும் தெரிவித்தார்.

குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை கொண்டுள்ளதால் லட்சத் தீவு பகுதிக்கு மீனவர்கள் மேலும் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்தார்.

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!


நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் அமைந்துள்ள பாபநாசம் சேர்வலாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.

டேவிட் வார்னர் முச்சதம் ஆனந்தக்கண்ணீர் விட்டது யார் தெரியுமா?

0

டேவிட் வார்னர் முச்சதம் ஆனந்தக்கண்ணீர் விட்டது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் முச்சதம் அடித்தார். இவர் 39 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 335 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் டேவிட் வார்னர் 300 ரன்கள் அடித்த போது பார்வையாளர்கள் பகுதியில் உட்கார்ந்து இருந்த அவரது மனைவி கிரிக் கேஸ்டில் உணர்ச்சிவசப்பட்டு அவரது கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்ததை பார்க்க முடிந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

மேலும் அவர் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்று கை தட்டினார். டேவிட் வார்னர் 300 ரன்கள் அடிக்கும் 7வது ஆஸ்திரேலிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டமிழக்காமல் அவர் அடித்த 335 ரன்களால் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதலாவது இன்னிங்ஸை விளையாடி வரும் பாகிஸ்தான் அணி சற்றுமுன் வரை 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 116 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

0

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூபாய் 20 ஆக இருந்த ஒரு கிலோ வெங்காயம் இன்று ஏதோ ஒரு கிலோ ரூபாய் 100க்கு மேல் தாண்டி விட்டது. வெங்காயத்தின் விலை இன்னும் உயரும் என்று வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்

இதனால் வெங்காயத்தின் பயன்பாடு இந்தியா முழுவதும் குறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. ஓட்டலில் வெங்காய தோசை இல்லை என்றும், பிரியாணிக்கு தயிர் வெங்காயம் இல்லை என்றும் பல கடைகளில் கூறிவருவதை காண முடிகிறது

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

இந்த நிலையில் இந்தியாவில் வெங்காய விலை ஏறி வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டது போல் சீனாவில் பன்றிக்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பறவைக்காய்ச்சல் நோய் அந்நாட்டில் பரவி வருவதை அடுத்து ஏராளமான பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்தது. இதன் விளைவாக தற்போது பன்றிக்கறி விலை பலமடங்கு ஏறி விட்டதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேபோல் துருக்கி மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடுகளிலும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பொருளாதாரம் சரிந்து வருவதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

0

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் கொலை கொள்ளைகள் உட்பட பல சட்ட விரோத செயல்களை செய்து வந்த ரவுடி ஒருவரை பெண் எஸ்ஐ ஒருவர் காதலிப்பது போல் நடித்து பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாலகிஷன் என்ற ரவுடியின் அம்மாநிலத்தில் மட்டுமின்றி அருகிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பல கொலை கொள்ளைகளை செய்துள்ளார். அவர் மேல் இரு மாநிலக் காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்திருந்த நிலையில் காவலர்களின் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு வந்துள்ளார் பாலகிஷன்

இந்த நிலையில் பாலகிஷன் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதைக் கண்டுபிடித்த போலீசார் அவரை ஒரு பெண் மூலமாகவே பிடிக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து மாதவி என்ற எஸ்.ஐ., பாலகிஷனின் பேஸ்புக்கை தொடர்பு கொண்டு அவருடன் நட்புடன் பழகினார்

ஓரிரு நாட்கள் பழகிய பின்னர் பாலகிருஷ்ணன் மாதவியை திருமணம் செய்து கொள்வதாக கூறியவுடன் இதுதான் சமயம் என்று, அருகிலுள்ள ஒரு கிராமத்து கோவிலுக்கு வாருங்கள் அங்கு நானும் வருகிறேன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மாதவி கூறியுள்ளார்
இதனை உண்மை என நம்பிய பாலகிஷன் அந்த கோவிலுக்கு வரும்போதும் மறைந்திருந்த காவல்துறையினர் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். இரு மாநில போலீசார்களை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த ஒரு ரவுடியை ஒரு பெண் போலீஸ் காதலிப்பது போல் நடித்து பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி

0

’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி

நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்து கொண்டிருந்த எம்பி ஒருவர் திடீரென பார்வையாளர் பக்கம் திரும்பி ஒரு பெண்ணைப் பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு சம்பவம் இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது

இத்தாலி நாட்டில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, நிலநடுக்கத்திற்கு பின்னர் புனரமைப்பு பணி குறித்த விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது ஃப்ளாவியோ டி மியூரோ என்ற எம்பி தன்னுடைய தரப்பு கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பார்வையாளர் கேலரியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டது அவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது

இது குறித்து அவர் மேலும் கூறியபோது, ‘“நாட்டுக்கான நலன்களை செய்வதிலும் , அக்கறைக் கொள்வதிலேயே எப்போதும் கவனம் செலுத்துகிறோம். இதனால் தினமும் நமக்காக வாழ்வோரை, நம் மீது அன்பு செலுத்துவோரை , உண்மையான உறவுகளை கண்டுகொள்ளாமல் உதாசினம் செய்கிறோம். இன்று எனக்கு சிறப்பான நாள். எலிசா என்னை திருமணம் செய்து கொள்வாயா..?” என்று கையில் இருந்த காதல் மோதிரத்தை நீட்டி காதலியிடம் கேட்கிறார்.

அப்போதுதான் எம்பியும், அந்த பெண்ணும் ஏற்கனவே காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. இதனை அடுத்து அருகில் உட்கார்ந்திருந்த மற்ற எம்பிக்கள் அவரை தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினர். இருப்பினும் இதனை சபாநாயகர் கண்டித்துள்ளார். உங்களது உணர்வு எனக்கு புரிகிறது என்றாலும் நாடாளுமன்றத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அவர் மென்மையாக கண்டித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது