Home Blog Page 5882

புதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன?

0

புதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன?

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றினார் திரு.விபல்குமார். இவர் இன்று மதியம் ஒரு மணி அளவில் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அங்கு மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விபல்கமாரின் சொந்த ஊர் தமிழக எல்லை பகுதியாக விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள புதுச்சேரியின் தொண்டமாநத்தம் கிராமம் ஆகும். தற்போது அவர் வில்லியனூரில் இடம் பெயர்ந்து சொந்த வீட்டில் குடும்பத்துடன் இருந்து வந்தார்.

புதுச்சேரியில் சப்இன்ஸ்பெக்டர் தற்கொலை! காவல்துறையை அதிரவைக்கும் அதிர்ச்சி சம்பவம் பின்னணி எனன?

தற்கொலைக்கான காரணம் அரசியல் அல்லது உயர் அதிகாரிகளின் குறுக்கீடுகளால் அதிக மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அதிர்ச்சி காரணம்

0

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அதிர்ச்சி காரணம்

கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக பிறந்த நாள் மற்றும் அதுசம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், பின்னர் ஒடிஷாவில் டாக்டர் பெறுதல் போன்றவைகளில் பிசியாக இருந்ததால் அவர் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்தியன் 2’ படப்பிடிப்பில் இந்த வாரம் முதல் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2016ம்‌ ஆண்டு எதிர்பாராமல்‌ நடந்த ஒரு விபத்தின்‌ காரணமாக நம்மவர்‌ அவர்களின்‌ வலது காலில்‌ முறிவு ஏற்பட்டது. அம்முறிவினை சரி செய்வதற்காக அறுவை. சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில்‌ டைட்டேனியம்‌ கம்பி ஒன்று பொறுத்தப்பட்டது. அரசியல்‌ மற்றும்‌ சினிமாவில்‌ தலைவர்‌ அவர்களுக்கு இருந்த. தொடர்‌ வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல்‌ அமையாமல்‌ தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.

மருத்துவர்களின்‌ ஆலோசனையின்படி நம்மவர்‌ கமல்ஹாசன்‌ அவர்களுக்கு வரும்‌ 22/11/2019 அன்று அக்கம்பியை அகற்றும்‌ சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கின்றது. சிகிச்சை மற்றும்‌ அதன்‌ தொடர்ச்சியாக சில நாட்கள்‌ ஓய்விற்குப்பின்‌ நம்மவர்‌ நம்மை சந்திப்பார்‌ என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை காரணமாக ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆனவுடன் படப்ப்பிடிப்பு தொடரும் என்றும் கூறப்படுகிறது.

வேட்புமனு பணத்தைத் திருப்பிக் பெற்றுக் கொள்ளுங்கள்! கட்சியினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆணை

0

வேட்புமனு பணத்தைத் திருப்பிக் பெற்றுக் கொள்ளுங்கள்! கட்சியினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆணை

தமிழக உள்ளாட்சி தேர்தலில் நேரடி தேர்தல் இல்லாத பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டண பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. இந்நிலையில், மேயர், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டண பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக பொதுக் குழு முடிந்த பிறகு நவ.,25 முதல் 29 வரை, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து தாங்கள் செலுத்திய கட்டண ரசிதை காட்டி, கட்டண பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 22.11.2019 ஆம் தேதி காலை 10மணி முதல் மாலை 5மணி வரை விருப்பமனுவை மாவட்ட தலைநகர அலுவலகங்களில் அளிக்கலாம் என்றும் தெவித்துள்ளது.

மேயர், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பை ஆளுங்கட்சியான அதிமுக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

0

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபாயவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை வரும் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கையில் சிங்கள இனவெறித் தீயை மூட்டி, அதன் உதவியுடன் வெற்றி பெற்று அதிபர் நாற்காலியில் அமர்ந்துள்ள கோத்தபாய ராஜபக்சே, ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாத கோத்தபாய, தமது அரசு நிர்வாகத்தில் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அனைத்தும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கை இறுதிப் போரின் போது அந்நாட்டு ராணுவத்தின் 53 ஆவது படையணியின் தலைவராக இருந்த கமல் குணரத்ன என்ற தளபதி, ஈழத்தமிழர்களை கொடூரமான முறையில் கும்பல், கும்பலாக படுகொலை செய்தார். இறுதிப் போரில் சரணடைந்த தமிழர்களைக் கூட கொடூரமாக கொலை செய்த குணரத்ன, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அத்தகைய போர்க்குற்றவாளியைத் தான், ஏற்கனவே தாம் அனுபவித்து வந்த இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் பதவியில் கோத்தபாய அமர்த்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விலக வைத்த கோத்தபாய, அந்தப் பதவியில் தமது சகோதரரும், இலங்கை இறுதிப்போரின் போது அதிபராக இருந்தவருமான மகிந்த ராஜபக்சேவை அமர்த்தியிருக்கிறார்.

இலங்கை அரசு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற நான்கு பதவிகள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர், போர்ப்படை தளபதி ஆகியவை தான். இவற்றில் முதல் 3 பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள் தான் அமர்த்தப்பட்டுள்ளனர். போர்ப்படை தளபதியாக இலங்கைப் போரில் முக்கியப் பங்காற்றிய தளபதி ஒருவரை அமர்த்த கோத்தபாய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இலங்கையின் 4 முக்கியப் பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள் அமர்த்தப்படும் சூழலில், 2009 போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றமாகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, ஐ.நா போர்க்குற்ற விசாரணை முடக்கப்படும் என்று கோத்தபாய ராஜபக்சே கூறி வந்தார். அவரது ஆட்சியில் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமின்றி, இனி இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதுடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு. தெற்காசியாவின் வல்லரசு என்பது மட்டுமின்றி, ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையிலும் இதை இந்தியா செய்ய வேண்டும் என்பது தான் உலகத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இத்தகைய சூழலில் தான் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு தான் வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்று அவர் இம்மாதம் 29&ஆம் தேதி இந்தியா வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபாயவை அவசரம், அவசரமாக தில்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்துவதன் நோக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ராஜபக்சே சகோதரர்கள் சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அவர்கள் சீனாவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது; இந்தியாவை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற செய்தியை தெரிவிப்பது தான் அவரை அழைத்ததன் நோக்கம் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த கோணத்தில் இதன் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

அதே நேரத்தில் இலங்கையை சீனாவிடமிருந்து ஈர்ப்பதற்கான விலையாக ஈழத்தமிழர்கள் நலனைக் காவு கொடுத்து விடக்கூடாது. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும், போர்ப்படை தளபதிகளும் தண்டனையின்றி தப்பிப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களுடன் கோத்தபாய பேச்சு நடத்தும் போது, போர்க்குற்ற விசாரணை குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு அளித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும்; போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர்களுக்கு 18&ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு கூடுதலாகவும் வழங்கப்பட வேண்டிய அரசியல் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் வெளியேற்றப்பட வேண்டும்; தமிழர்களிடமிருந்து வரவழைக்கப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படியும் கோத்தபாய ராஜபக்சேவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்த வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் செல்லும் இலங்கையின் அண்ணன் – தம்பி

0

இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முதல் வேலையாக தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமனம் செய்தார். இன்று மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இலங்கை அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தன்னுடைய நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று கோத்தபயா ராஜபக்சே விரைவில் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபயவுக்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து இந்தியாவுக்கு அரசு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று நவம்பர் 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இந்தியா வர உள்ளதாகவும், இந்திய பயணத்தை முடித்த பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் பிரதமராக பதவியேற்கவுள்ள மஹிந்தாவும் உடன் செல்வார் என கூறப்படுகிறது.

இலங்கை ஏற்கனவே சீனாவுக்கு நட்பு நாடாக இருந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானையும் நட்பு பட்டியலை வைக்கவிருப்பதாகவும் இலங்கை, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக திரும்புமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

#

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

0

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் தேசிய அங்கீகாரத்திற்கு பெற வேண்டிய ஓட்டுக்களை பெறாமல் மிக குறைவான ஓட்டுக்களை வாங்கியதால், அக்கட்சிகளின் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து அக்கட்சிகளுக்கு அறிவிக்கையை ஆணையம் சார்பாக அனுப்பப்பட்டது.

இந்த சூழ்நிலையில் வரவிருக்கும் பல்வேறு சட்டமன்ற தேர்தல்களில், தங்கள் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சட்ட நிபுணர்களை வைத்து கோரிக்கை விடுத்தது, கோரிக்கையை பரிசீலனை செய்த பிறகு இந்திய தேர்தல் ஆணையம் இது குறித்த தனது முடிவை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா?

0

ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் ஒரே ஷெட்யூலில் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஒரு சில பேட்ச் வொர்க் பணிகள் மட்டும் இன்னும் ஒரு வாரம் நடைபெற இருக்கும் நிலையில் அதனை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் முதல் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனை அடுத்து ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா?

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலையும் ஒரே நாளில் வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலின்படி தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு ’சுருளி’ என்று டைட்டிலும், தனுஷ்-மாரி செல்வராஜ் படத்திற்கு ‘கர்ணன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தனுஷ் நடித்த அசுரன் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அவர் நடித்து முடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்!

0

அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்!

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே அபார வெற்றி பெற்று புதிய அதிபராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்றார் என்பது தெரிந்ததே.

இதனையடுத்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று மாலை அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அவர்களுக்கு அனுப்பி உள்ளார்

இந்த நிலையில் புதிய பிரதமராக இலங்கை முன்னாள் அதிபரும், அதிபர் கோத்தபாய ராஜபக்ஷவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இலங்கையில் அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருக்கும் போது, கோத்தபாய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்துதான் இலங்கையில் உள்ள தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது மீண்டும் அண்ணன் தம்பி இருவரும் முக்கிய பதவியை ஏற்று உள்ளதால் அங்குள்ள தமிழர்களுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!

0

திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!

பெரும்பாலான மக்களான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராகவும், மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்து கோயில்கள் குறித்து பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 15 ஆம் தேதி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனாதன கல்வியை வேரறுப்போம் என்ற தலைப்பில் சில முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த அரசியல் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியிருந்தார்.

அதில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, “பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். மற்ற இரண்டு மதங்களை குறித்து பேசும் போது நேர்மறையாகவும்,இந்து கோவிலை பற்றி குறிப்பிடும் போது எதிர்மறையாகவும் பேசியது பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருமாவளவனுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத திருமாவளவன் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்தார் அதில், “நான் பேசியவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு. எனினும், அதற்காக நான் வருந்துகிறேன். பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் அதில் பாஜகவினர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனாலும் அவருக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், திருமாவளவனை கண்டால் செருப்பால் அடிக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விசிக சமூக ஊடக மையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு அளித்த புகாரின் பேரில் காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

இந்நிலையில் தான் இந்து கோயில்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில், இந்து முன்னணியின் நகர செயலாளர் கண்ணன் புகார் அளித்துள்ளார். அவர் அளித்திருந்த அந்த புகாரின் பேரில் திருமாவளவன் மீது பெரம்பலூர் காவல் துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153 பி, 295 ஏ, 298, 504 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் புகார் அளித்த கண்ணன் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த தகவலின் படி, “முதலில் எங்களுடைய அமைப்பு யாருக்கும் எதிரானது கிடையாது. இந்து கோயில்கள் குறித்து அநாவசியமாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். குழந்தை பிறப்பதற்கு மூலமான உடலுறவு என்ற விஷயத்தை பொது வெளியில் பேச முடியாது. அதனால் தான் அது போன்ற சிலைகளை வடித்து கோயில்களில் பாரம்பரியமாக வைத்துள்ளனர். இதனை அசிங்கமான பொம்மை என்று திருமாவளவன் சொல்வதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். அப்படியென்றால் கோயில்களை கட்டியவர்கள், சிலைகளை வடித்தவர்கள் எல்லாம் முட்டாள்களா?

மற்ற மதத்தினர் என்றால் எதுவும் பேசக்கூடாது. இந்து மதம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அப்படித்தானே. தனிநபர்களிடமோ அல்லது ஒரு அறையிலோ நீங்கள் பேசவது சரி. அதனை பொதுவெளியில் பேசலாமா? அப்படியென்றால் இந்துக்கள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்று நினைத்துக் கொண்டு தானே பேசுகிறார்கள். இதனால் எங்களுடைய வருத்தத்தை பதிவு செய்யும் வகையில் திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே திருப்பூரில் இந்து மக்கள் கட்சியினர் ஏற்கனவே திருமாவளவன் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இவர் பெரம்பலூரில் வழக்கு தொடர்ந்துள்ளது திருமாவளவனுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களிடையே மதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் தொடர்ந்து பேசியதால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள 9176431857 என்ற எண்னை News4 Tamil என உங்கள் மொபைலில் பதிவு செய்து விட்டு இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

0

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களின் உடல் நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார், அவருடன் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்வு நடந்தது.

மேலும் இதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் எம்.பி பாரதி மோகனையும் நேரில் பார்த்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி.