Home Blog Page 5914

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு

0

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி சட்டமண்ட தொகுதி அதிமுகவின் இடைத்தேர்தல் வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இன்னும் 5 நாட்களில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஒத்திகை போல கருதுவதால் இதற்கான முக்கியத்துவம் கூடியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பாக புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டியில் பாமக சார்பில் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ், “1995ஆம் ஆண்டு பாமக மாநாடு நடந்த போது கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தேன். அதன் பிறகு கடைசி வரை அவர் மஞ்சள் துண்டு அணிந்திருந்தார். ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தலில் எங்களை கழட்டிவிட்டு விட்டு ஜி.கே.மூப்பனாருடன் கூட்டணி வைத்துக்கொண்டார். அது அவருக்கு கைவந்த கலை. இதற்காகத் தான் கலைஞர் என்றால் கலைப்பவர் என்று நான் வேடிக்கையாகக் கூறுவேன்” என்று விமர்சித்தார்.

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி தொகுதியில் ஸ்டாலினின் பொய் மூட்டையும், புளுகும் எடுபடாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், “இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 வன்னியர்கள் சாவுக்கு காரணமாக இருந்தது திமுக தான். ஏனெனில் அன்றைக்குத் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. நான் 6 மாதங்களுக்கு முன்பே இடஒதுக்கீடு போராட்டம் குறித்து கலைஞருக்கு கடிதம் எழுதினேன். 7 நாள் சாலை மறியல் போராட்டத்தின் போது எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் திரும்பி வந்த பிறகு போராட்டம் குறித்து கேள்விப்பட்டு என்னை அழைத்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களிடமும் இதுதொடர்பாக கோபப்பட்டார். 13 சதவிகித இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவணத்தில் எழுதிவைத்தார். ஆனால், ஒரு மாதத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த ஆவணம் ஒரு மூத்த அமைச்சரால் மறைக்கப்பட்டுவிட்டது” என்றும் தெரிவித்தார்.

மேலும் 108 ஆம்புலன்ஸை கொண்டு வந்தது அன்புமணி ராமதாஸ் தான், ஆனால் தாங்கள் தான் கொண்டு வந்தோம் என திமுக பொய் கூறுவதாகவும் விமர்சித்தார்.

முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்-மு.க.ஸ்டாலின்

0

முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்-மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு முடியும் வரை அவர் தமிழக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அந்த தொகுதிக்குட்பட்ட அம்பலம் என்ற கிராமத்தில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் வழக்கம் போல பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதனையடுத்து அவர் பருத்திப்பாடு எந்த கிராமத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்- மு.க.ஸ்டாலின்

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் குடிநீர் வசதி, சாலை வசதி வேண்டும் என கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தான். தி.மு.க. ஆட்சி வந்தததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ஏராளமான கடன்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது கடன் கேட்டு மகளிர் வங்கிக்கு சென்றால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள் எந்த பகுதிக்கும் சென்று மக்களின் குறைகளை தீர்ப்பதில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என அறிஞர் அண்ணா கூறியது போல தி.மு.க. மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறது. 

திண்ணை பிரசாரத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

மக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்கிறோம். அப்படியும் இந்த அரசு மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டால் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவோம். அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 1½ ஆண்டுகளே உள்ளது. அதற்குள் அனைத்து துறைகளிலும் அவர்கள் அடிப்பதை அடிப்போம் என ஊழல் செய்து வருகிறார்கள். நெடுஞ்சாலைதுறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டே உத்தவிட்டுள்ளது.

இதற்கு முதல்-அமைச்சர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் நியாயமானவராக இருந்தால் இந்த பிரச்சனை தீரும் வரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். எனவே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் அவர் கூறினார்.

அப்போது வேட்பாளர் ரூபி மனோகரன், தி.மு.க. துணைபொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் வி.பி.துரை உள்ளிட்ட பலர் அவருடன் இருந்தனர்.

5 ஜி யில் ஹவாய் நிறுவனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் – ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்

0

ஹவாய் தனது வணிகத்திற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது, ஆனால் உலகின் மிகப்பெரிய மொபைல் சந்தையான இந்தியாவில் இருந்து ஒரு ஆதரவுக்கரம் நீண்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பாரதி மிட்டல் வியாழக்கிழமை ஹவாய் நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார், இது நாட்டின் 5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்க உதவ அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உலக பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை சுனில் பாரதி மிட்டல் கூறுகையில், “அவர்கள் ஆட்டத்தில் இருக்க வேண்டும், நாமும் அங்கு ஆட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”. மிட்டலின் நிறுவனமான பாரதி ஏர்டெல் இந்தியாவில் மூன்றாவது பெரிய மொபைல் நெட்வொர்க் வழங்குநராகும்.

அடுத்த தலைமுறை 5 ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹவாய் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது, ஆனால் அதன் சமீபத்திய சிக்கல்கள், போட்டியாளர்களான நோக்கியா (NOKIA) மற்றும் எரிக்சன் (ERIC) போன்ற நிறுவனங்கள் இடைவெளியைக் குறைக்க அனுமதித்தன. சீன நிறுவனத்தின் உபகரணங்கள் இன்னும் மேம்பட்டவை என்று மிட்டல் கூறுகிறார்.
“கடந்த 10 அல்லது 12 ஆண்டுகளில் ஹவாய் தயாரிப்புகள் மிகவும் சிறப்பானதாகிவிட்டது, இன்று அவர்களின் தயாரிப்பு பற்றி நான் பாதுகாப்பாக சொல்ல முடியும் … எரிக்சன் மற்றும் நோக்கியாவை விட தரமானதென்று” என்று அவர் கூறினார்.

அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ்,
“5 ஜி முக்கியமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கையில், பாதுகாப்பு ஆபத்து இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். நாள் முடிவில், வெளிப்படையாக, இந்தியா தனது சொந்த முடிவை எடுக்க வேண்டும், ஆனால் எங்கள் கவலைகள் பாதுகாப்பு குறித்து மட்டுமே”.

மேற்கத்திய நிறுவனங்களை அதிகம் நம்புவதைத் தவிர்ப்பதற்கு இந்தியா ஹவாய் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்று மிட்டல் வாதிட்டார்.
சீனாவுடனான தனது உறவை இந்தியா “முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மிட்டல் கூறினார், மேற்கத்திய நிறுவனங்களைப் பொறுத்து மட்டுமே இந்திய அரசாங்கத்திற்கு “மிகக் குறைந்த செல்வாக்கு” தரும் என்று வாதிட்டார்.

இந்தியா தனது 5 ஜி நெட்வொர்க்குகளை இன்னும் திட்டமிட்டு கொண்டுதான் உள்ளது. நாட்டின் 5 ஜி சோதனைகளில் பங்கேற்க முன்மொழிவுகளை சமர்ப்பித்த ஆறு நிறுவனங்களில் ஹவாய் ஒன்றும் இருப்பதாக தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜூன் மாதம் சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை ஆராய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

0

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை நாளை மாலை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும்” என்று அரசியல் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.
பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து ஆளுந்தரப்பை விமர்சித்துப் பேசினார், இதனால் ஆளும்தரப்பின் கடும் கோபத்திற்கு உள்ளானார்.

குறிப்பாக அவர் எடப்பாடி பழனிச்சாமி தான் பேசுகிறார் என்று அமைச்சர்கள் கொந்தளித்தனர், திரைப்பட விளம்பரத்தை மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், என்று இதுபோல் பேசி வருவதாகவும்‌ கடுமையாக கண்டனம் தெரிவித்தனர் ஆளுந்தரப்பு.

இதனைத்தொடர்ந்து ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி தந்த சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு,

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார்,
போன தீபாவளிக்கு நடிகர் விஜய்யை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது. பரபரப்புக்காக படத்தினை ஓட்ட வேண்டும் என்பதற்காக தன்னையும் அறியமால் எதாவது பேசியிருப்பார் என்று, நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை படவிவகாரத்துக்காக சந்தித்ததை குறித்து அம்பலப்படுத்தினார்.

பின்பு என்ன நடக்கும், தமிழக அரசை பகைத்துக் கொண்டால் நடப்பது எல்லாம் நடந்து அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களை ரத்த அழுத்தம் எகிறும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன,

தணிக்கை அதிகாரிகள் பிகில் திரைப்படத்தை தணிக்கை செய்ய காலம் தாழ்த்தினார்கள், பிறகு கல்பாத்தி அகோரத்தின் செல்வாக்கு மூலமாக படம் தணிக்கை செய்ய அனுமதிக்கப்பட்டது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.

பின்பு,வழக்கம்போல் திருட்டு கதை சர்ச்சையில் சிக்கியது, பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி எனது கதையை திருடி படம் எடுத்துள்ளார் என்று உயர்நீதிமன்றத்தில் கே.பி.செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார், என்ன நடந்தது என்று தெரியவில்லை, திடிரென வழக்கை வாபஸ் பெற்றார், வழக்கு முடிவுக்கு கொண்டு வந்து நிம்மதி அடைந்துள்ளார் தயாரிப்பாளர்.

இன்னும் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் என்பதால் ஆளும் தரப்பை சமாதானப்படுத்த தயாரிப்பு நிறுவனம் என்ன செய்வது நிற்கிறது,

முதல் அமைச்சரிடம் நேரடியாக நடிகர் விஜய் சந்திக்க வைத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க தீவிரமாக முக்கிய புள்ளிகளை நாடி வருகிறது. நாளை மாலைக்குள் இந்த சந்திப்பு நிகழ்வு நடக்க வைக்க வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

திரைப்படத்தில் தாங்கள் பெரிய மாஸ் ஹீரோ என்று காட்டிக்கொள்ளும் நடிகர்கள் பார்வையில், நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதிகள் தான் ஹீரோவாக ஜொலிக்கிறார்கள் என்று இந்த சம்பவம் வெளிப்படுத்தும் என்பது தெரியும்.

சீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்!டிடிவி தினகரன் வலியுறுத்தல்

0

மதுரை: ராஜீவ் காந்தி விவகாரத்தில் பேசியதை சீமான் வாபஸ் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

என்ன நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை. சீமானின் சர்ச்சை பேச்சு தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில், அவ்வாறு பேசியதை சீமான் திரும்பபெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். மதுரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய மாட்டோம்.

சிறையில் சசிகலா இருப்பதால், வெளியே இருப்பவர்கள் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துக்களை பேசக்கூடாது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தவர். அவரது படுகொலை பற்றி பேசுவது சரியல்ல. இப்படி பேசி, தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டிய அவசியம் இல்லை.

சீமான் பேசியதை திரும்ப பெற வேண்டும். அப்படி நடந்தால் அவருக்கும் நல்லது, என்னை போன்ற அரசியல்வாதிக்கும் நல்லது.எங்கள் கட்சிக்கு சின்னம் பெறும் விவகாரத்தில் விசாரணை நாளை டெல்லியில் நடக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி, வேலூர் இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு சின்னத்திலும் போட்டியிட முடியாது. அப்படி செய்தால், மக்கள் குழம்பிவிடுவர். எனவே இடைத் தேர்தல்களில் பங்கேற்கவில்லை என்றார்.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தமிழக அமைச்சர்கள் திருடர்கள்! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்!

0

தூத்துக்குடி: தமிழக அமைச்சர்களை திருடர்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது, அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற்ற பிரச்சாரத்தில், கலந்து கொண்ட சீமான், ராஜீவ் காந்தி கொலையை பற்றி பேசிய பேச்சு கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அவரது கொலை நியாயமான ஒன்று தான் என்று பேசியிருந்தார்.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அவரது கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந் நிலையில் சீமான் மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை பேசியிருக்கிறார். தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற திரைப்படம் போல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். என்ன, இப்போது அம்மா இல்லை, திருடர்கள்தான் உள்ளனர் என்றார்.

இதனிடையே, பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, விக்கிர வாண்டியில் சீமான் பேசியது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டரான, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

0

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக காதல் தோல்வி பாடல்களையும், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களின் மனநிலையை பற்றிய பாடல்களையும் இசைத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா.

இதனால் குழப்பமடைந்த அவரது ரசிகர்கள், ஏன் சோகப் பாடல்கள் பாடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று என கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக பல திடுக்கிடும் உண்மைகளை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டார். நான் சமீபத்தில் திருமணமானவரும் அதே சமயத்தில் இளமையான அரசியல்வாதியுமான ஒருவருடன் சில காலங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்பில் இருந்தேன்.ஆனால் அவர் என்னை தேவையான அளவிற்கு அனுபவித்து விட்டு தற்போது என்னை ஏமாற்றி விட்டார்.

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

இந்த பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து நான் மீண்டுவர சில காலம் ஆகலாம். அதற்காக நான் ஆயுர்வேத சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த அரசியல்வாதி யார் என்று கேட்டதற்கு தான் எழுதிய ப்ரோக்கன் விங்ஸ் என்ற புத்தகத்தில் அந்த நபரைப் பற்றிய விவரங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் என்றும் நடிகை ஆண்ட்ரியா கூறினார்.

தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக்

இதனையடுத்து வருகிற 17-ஆம் தேதி அந்த புத்தகத்தை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளி ஒருவரின் பெயர் பயங்கரமாக அடிபடும் என பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.அவர் இளமையான அரசியல்வாதியா அல்லது புதியதாக தமிழக அரசியலில் உதயமான அரசியல்வாதியா என்பதை ஆண்ட்ரியா வெளியிடும் புத்தகத்தை பார்த்தல் தெரிந்து விடும்.

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்

0

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது என்றும், பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலகி வரும் நிலையில், தமிழகம் உள்பட சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) தொடங்க இருக்கிறது. தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் அதிகம் மழையை பெறுவது இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி, பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக விலக தொடங்கியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் (17-ந் தேதிக்குள்) முற்றிலும் விலகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் (17-ந் தேதிக்குள்) தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, உள் கர்நாடகா, ராயல்சீமா மற்றும் கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. பெரும்பாலும் தமிழகத்தில் 17-ந் தேதி (நாளை) பருவமழை தொடங்கிவிடும்.

மழை

இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் (இன்றும், நாளையும்) தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய தென் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வருகிற 17, 18-ந்தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரையில் சூறைக்காற்று வீசக்கூடும். இதன் காரணமாக மேற்கூறிய பகுதிகளுக்கு, 17, 18-ந் தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

ஸ்ரீவைகுண்டம் 8 செ.மீ., தூத்துக்குடி, தொண்டியில் தலா 7 செ.மீ., கோத்தகிரி 6 செ.மீ., கெட்டி 5 செ.மீ., செம்பரம்பாக்கம், அம்பாசமுத்திரம், பூந்தமல்லி, குன்னூர், கன்னியாகுமரியில் தலா 4 செ.மீ., அரவக்குறிச்சி, மயிலாடுதுறை, ஊத்தங்கரை, பொள்ளாச்சி, சிவகிரி, சோழவரம், தென்காசி, மணிமுத்தாறு, ஆர்.எஸ்.மங்களம், நாகர்கோவில், தாம்பரம், மணியாச்சி, ராயக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பெருந்துறை, ராதாபுரத்தில் தலா 3 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகரை வழிபடும் முறை

0

ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகரை வழிபடும் போது செய்ய வேண்டிய அலங்காரங்கள்

அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.

ரோகிணி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.
மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.
ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.

உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.
அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.

பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்வித்தால் போதும்.

சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.
பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.

சென்னை பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை! 6 பேர் கைது

0

சென்னை பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை! 6 பேர் கைது

சென்னை: மேடவாக்கம் அருகிலுள்ள பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேடவாக்கம் அடுத்துவுள்ள பெரும் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தான் ஆனந்தராஜ். இவரது மகன் ஸ்டீபன் (28). ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த இந்திராநகர் ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் தேவன். இவரது மகன் ஆனந்த் (29). தனியார் நிறுவன துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ஆட்டோவும், பைக்கும் மோதிக் கொண்டது. இருத்தரப்பினரும் சண்டை மூண்டது. இதை அங்கிருந்த ஸ்டீபனும், ஆனந்தும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக இருவரும் செயல்பட்டதால், பைக்கில் வந்தவர்கள் ஆத்திரமடைந் துள்ளனர்.

இதையடுத்து, பைக்கில் சென்றவர்கள் 6 பேருடன் மீண்டும் அங்கு வந்தனர். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டீபன், ஆனந்தை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பள்ளிக் கரணை போலீஸார், பெரும் பாக்கம் பகுதியைச் சேர்ந்த தீபக், மார்டின், கணேசன், முத்து, அகஸ்டின் மற்றும் காரப்பாக் கத்தைச் சேர்ந்த மணி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்