Home Blog Page 5938

ஸ்டார் ஹீரோ இந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா? அப்போ சூப்பர் டூப்பர் ஹிட் தான்!

0

ஏம்ப்பா ரீமேக் பண்றதுக்கு உங்களுக்கு இந்தியாவுல எதுவும் தேறலையா..? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..?

சினிமாத்துறையில எல்லாமே ஒரு சீசன் மாதிரிதானே நடக்கும். பேய்ப்படம்னா பேய்ப்படமா வரும். காமெடிப் படம்னா காமெடிப் படம்னா தொடர்ந்து காமெடிப் படமா வரும். அந்த வரிசையில இப்போ சீஸன், வெப் சீரிஸ்தான். சமீபத்துல ‘தி இன்விசிபிள் கெஸ்ட்’ வெப் சீரிஸை ஹிந்தியில ‘பத்லா’ என்ற பேரில் ரீமேக் செய்தனர். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் வெப் சீரிஸ்களை ரீமேக் செய்யும் சீஸன் தொடங்கியிருக்கிறது. அந்த வரிசையில், ஸ்பானிஷ் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘மனி ஹைஸ்ட்’ என்கிற பிரபல வெப் சீரிஸை பாலிவுட் திரைப்படமாக்குகிறார் நடிகர் ஷாரூக் கான்.

தி ஃப்ரொஃபஸர்’ என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடக்கும் கதை ‘மனி ஹைஸ்ட்’. இதுவரை வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிடுகிறார் ‘தி ஃப்ரொஃபஸர்’. அவருக்கு உதவி செய்ய 8 நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார். ஸ்பெய்ன் நாட்டில் பணம் அச்சடிக்கும் இடத்தையே இவர்கள் குறி வைக்கிறார்கள். இவர்கள் திட்டம் என்ன ஆனது என்பதே கதை.

இந்தத் தொடரின் முதல் மூன்று சீஸன் மாபெரும் வரவேற்பைப் பெற்று தற்போது நான்காவது சீஸன் தயாரிப்பில் உள்ளது.
‘ஜீரோ’ படத்தின் தோல்விக்குப் பிறகு ஷாரூக் கான் சரியான கதையைத் தேடி வந்தார்.

அப்போதுதான் ‘மனி ஹைஸ்ட்’ பற்றி தெரியவந்துள்ளது. இந்தத் தொடரின் உரிமையை ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிப்பதோடு, ‘தி ஃப்ரொஃபஸர்’ கதாபாத்திரத்தில் ஷாரூக் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப் சீரிஸை எப்படி திரைப்படமாக மாற்றவுள்ளார்கள் என்று இப்போதிலிருந்து சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்
ஹூம்..இந்த சீஸன் எத்தனை நாளைக்கோ..?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

0

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ததற்கு அ.தி.மு.க தரப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய ரவீந்திரநாத் குமார் கூறியதாவது.

1984-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவையில் பேசியபோது, “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கபட வேண்டும். ஏன் அது இன்னமும் தாமதம் ஆகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜெயலலிதாவின் அந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளனர். அதற்காக எங்களின் முழுமையான நன்றியை அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த மசோதா மூலமாக ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும். சுதந்திர கதவை திறந்து விட்டீர்கள். அவர்கள் இந்திய மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

சில அரசியல் ஆதாயத்திற்காக 1974-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தமிழகத்தில் இருந்து பிரித்து இலங்கைக்கு கொடுத்துவிட்டது. அவர்கள் அரசியல் லாபத்திற்காக அங்கே ஜம்மு-காஷ்மீரின் உரிமையை இந்தியாவில் இருந்து பிரித்தது போல, இங்கு தமிழ்நாட்டிலிருந்து பிரித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டின் உரிமையான கட்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு பெற்றுத்தர வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். நமது பிரதமரின் புதிய இந்தியாவில், இந்த ஜம்மு-காஷ்மீரின் மசோதா ஒரு மைல் கல்லாக அமையும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களுக்கு ரவீந்தரநாத்தின் இந்த பேச்சு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் தமிழக நலனுக்கு எதிராக செயல்பட்டதை தகுந்த நேரத்தில் சுட்டி காட்டி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அதிமுகவின் ரவீந்தரநாத் குமார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

0

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?
ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ‘கோமாளி’ ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கமல், அதன் தயாரிப்பாளருக்குத் தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்தார்.

இதனால் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் ப்ரதீப் தெரிவித்தனர். ஜெயம் ரவியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ஆதரவாளரான நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு. இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு. நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது. விடு தலைவா.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினியைக் கிண்டல் செய்ததற்கு, மறைமுகமாகச் சாடியே இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது. தற்போது ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வரும் லாரன்ஸ். அதை முடித்துவிட்டு, தமிழில் சூப்பர் ஹீரோ கதையொன்றை இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார்.
புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம்.. ஆனா…???

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திமுக அதிமுக கட்சி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது? கட்சி தலைவர்கள் அறிவிப்பு? இதுதான் புதிய பெயர்கள்!

0

பிஜேபி ஆட்சி பொறுப்பில் இருந்து பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானங்களை அதிமுக என்றுமே ஆதரிக்கும் என கூறினர். இதனால் அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அவர் ஜம்மு காஷ்மீர் மக்களுடைய எண்ணங்களை மதிக்காமல் அவர்களின் கருத்தை பெறாமல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஒரு ஜனநாயகப் படுகொலையை இன்றைக்கு அரங்கேற்றி இருக்கிறார்கள். மாநில அந்தஸ்தில் இருந்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை பிஜேபி இக்கு ஆதரவாக அதிமுகவும் துணை போயிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் அது பொருத்தமாக இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தாலும் தமிழகத்தில் உண்மையில் பாஜக தான் இந்த ஆட்சியை நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளார். கச்சத்தீவைக் காங்கிரஸ் தாரைவார்த்த பொழுது, திமுகதான் ஆட்சியில் இருந்தது, திமுகதான் அதற்கு ஆதரவு கோரியது, அப்பொழுது திமுக கலைஞர் நேருவின் மகளே வருக எனவும், இலங்கைப் படுகொலையின் பின் இந்திராவின் மருமகளே வருக என்றும் ஆரத்தி எடுத்த திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றார். இதற்கு பதிலாக திமுகவின் பெயரை, அகில இந்தியத் திராவிட முன்னேற்ற காங்கிரஸ் என்று மாற்றியதும் சொல்லுங்கள், பரிந்துரைப்போம் என்று விமர்சித்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இந்தியாவை எச்சரிக்கும் சீனா! ஏற்றுக்கொள்ள மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

0

தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தற்போது இருக்கும் 4g இக்கு பதிலாக 5g யை மேம்படுத்த நாட்டில் உள்ள மொபைல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஹூவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடவில்லை. இதனால் சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஹூவேய் நிறுவனத்தை அழைக்கவில்லை எனில், ஹூவேய் நிறுவனத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை சீனா எச்சரித்துள்ளது.

தொழில்நுட்பத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் பங்கேற்குமாறு சீனாவின் தொலைத் தொடர்பு ஹூவேய் மொபைல் நிறுவனத்துக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதற்கு காரணமாகக் கூறப்படுவது, சீனாவின் ஹூவேய் மீதான அமெரிக்காவின் தடையே ஆகும்.

ஹூவேயின் தொழில்நுட்பத்தை சீனா தனது உளவு வேலைக்கு பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நிறுவனத்தை தடை செய்யும் பட்டியலில் வைத்தார். சீனாவின் ஹூவேய் தொழில்நுட்ப தயாரிப்பு மொபைல்களை பயன்படுத்த வேண்டாம் என்று நட்பு நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டை இந்தியா ஏற்று ஹூவேய் நிறுவனத்தின் பொருட்களை இந்தியா புறக்கணிக்கிறது என்று சீனா, அந்நாட்டில் உள்ள இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியை அழைத்து எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ஹூவேயின் தொழில்நுட்ப வணிகத்தை இந்தியாவில் தடுக்கும் எனில், பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று சீனா கண்டித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் இந்திய நிறுவனங்கள் அதிகமாக இல்லை என்ற போதிலும், இன்போசிஸ், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள், மகிந்திரா அண்ட் மகிந்திரா போன்ற முக்கிய நிறுவனங்கள் அங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்நிறுவனங்கள் சீனா தடை செய்ய கூடும் என கருதுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

0

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கான தடையை நீக்கக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

சென்னை டூ சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதை எதிர்த்து விவசாயிகள்,அரசியல் தலைவர்கள் குறிப்பாக தருமபுரி எம்.பி யாக இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் தொண்டு நிறுவனம், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் போன்றோர் தொடர்ந்த வழக்கில் 8 வழிச்சாலைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்துத் திட்டச் செயல் இயக்குநர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது. தமிழக மக்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த திட்டத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் வேறு மாநிலத்துக்கு மாற்றலாமே என்று யோசனை வழங்கியதுடன் வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனையடுத்து ஜூலை 31ஆம் தேதி அன்று 8 வழிச் சாலையின் பயன்கள் தொடர்பாக மத்திய அரசு தங்களுடைய நிலைப்பாட்டை அறிக்கையாகத் தயாரித்து தாக்கல் செய்தது.

இந்நிலையில் இம்மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. மத்திய அரசுத் தரப்பில் சுற்றுச்சூழல் அனுமதி வரும் வரை 8 வழிச் சாலை அமைப்பதற்கான பணியைத் தொடங்கமாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி இவ்வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

A.R. ரகுமான் இப்படி பேசிருக்ககூடாது! அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ஏ.ஆர்.ரஹ்மான்.

0

அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ஏ.ஆர்.ரஹ்மான்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பிகில்’ படத்தில் விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடல் பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய “விஜய் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு அவரது குரல் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்துள்ளது. ’பிகில்’ இசையைப் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.

இன்னமும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அது சஸ்பென்ஸ்” என்று தெரிவித்துள்ளார்.இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்ணே’ பற்றி பேசுகையில், “எனது அம்மா, எனது மனைவி, மகள்கள், சகோதரிகள் என அனைவரும் சிங்கப்பெண்கள்தான். இவர்கள் அனைவரும் உணர்ச்சிரீதியாக, ஆன்மிகரீதியாக என்னை ஆதரிப்பவர்கள். அவர்களுடன் இருப்பதும் அவர்களால் உந்தப்படுவதும் அற்புதமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் ‘சிங்கப்பெண்ணே’ பாடலை மேடையில் முதல் முறையாகப் பாடவுள்ளார் ரஹ்மான்.

அஜித்- போனி கபூர் இணையும் அடுத்த படத்துக்கான இசையமைக்கும் வாய்ப்பை ஏற்பீர்களா என்று கேட்டபோது, “இல்லை, என்னால் முடியாது. கைவசம் நிறைய படங்கள் உள்ளன” என்று ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.

முன்பெல்லாம் அஜீத் படங்களில்தான் இயக்குநர்களும் டெக்னிசியன்களும் முன்னணி வரிசையில் இருப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி அஜீத் ஒரு வட்டத்துக்குள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவரது அடுத்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போகிறார் என செய்திகள் கசிந்தது அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாக நிலைக்குத் தள்ளியது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த அதிரடி பதில் அஜீத் ரசிகர்களின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அஜீத் – சிறுத்தை சிவா சேர்ற அடுத்த படத்துல ஏ.ஆர்.ரஹ்மானை ஃபிக்ஸ் பண்ணுங்க.. ஹி..ஹி..!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இவர்களா வெற்றியை தீர்மானிக்கிறார்கள்! வேலூர் தேர்தல் வெற்றி யாருக்கு? சற்று முன் கிடைத்த தகவல்!

0

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 நடைபெற்றது. மொத்தம் 28 உறுப்பினர்கள் தேர்தலின் போட்டியிட்டனர். இத்தேர்தல் தமிழகத்தின் பெரும் இரு அரசியல் கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டி ஏற்பட்டது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பிறகு அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்தனர். பதிலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களும் அதிமுகவை விமர்சனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து தொகுதியில் ஆகஸ்ட் 5 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 71.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7,01,351, வாக்காளர்களும், பெண்கள் 7,31,099, வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் என உள்ளன.

இத்தேர்தலில் மொத்தம் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக பெண்கள் 5,21,452 வாக்காளர்களும், ஆண்கள் 5,02,861 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேரும் வாக்களித்துள்ளனர்.

பெண் வாக்காளர்கள் 18,591 ஆண் வாக்காளர்களை விட பெண் ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் என முழுமையாக நம்பப்படுகிறது.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 2,45,055 வாக்காளர்களில் 1,63,337 பேரும் (66.65 சதவீதம்), வாக்களித்தனர்.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் 2,39,045 வாக்காளர்களில் 1,78,723 பேரும் (74.77 சதவீதம்), வாக்களித்தனர்.

கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 2,14,826 வாக்காளர்களில் 1,62,413 பேரும் (75.60 சதவீதம்),வாக்களித்தனர்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் 2,71,855 வாக்காளர்களில் 1,87,743 பேரும் (69.06 சதவீதம்), வாக்களித்தனர்.

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2,36,911 வாக்காளர்களில் 1,73,545 பேரும் (73.25 சதவீதம்), வாக்களித்தனர்.

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,24,863 வாக்காளர்களில் 1,58,591 பேரும் (70.53 சதவீதம்) வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வாக்குகள் வருகின்ற வெள்ளிக்கிழமை எண்ணப்படும் வெள்ளி கிழமை மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது பெண் வாக்காளர்களே உறுப்பினர்களின் வெற்றியை தீர்மானிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வீங்கிப் போனது காஜலின் கன்னம்! நடந்தது என்ன..?

0

வீங்கிப் போனது காஜலின் கன்னம்! நடந்தது என்ன..?
இந்தியில் கங்கணா ரணாவத் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘குயின்’. இதன் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் மனுகுமரன். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவும் தொடங்கினார்.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ , கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ ‘குயின்’ ரீமேக் உருவாகியுள்ளது.
இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இதில் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய படங்களுக்குத் தணிக்கை கிடைத்துவிட்டது. ஆனால் தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவுக்கும் சென்சார் போர்டுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

மண்ணின் வாழ்வியலையும் கலாசாரக் கூறுகளையும், விழுமியங்களையும் பெரும்பாலும் தணிக்கைக் குழு புரிந்துகொள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டு இங்கே பல இயக்குநர்களால் முன்வைக்கப்படுகிறது. அந்த வரிசையில் ‘பாரிஸ் பாரிஸ்’ படமும் சேர்ந்திருக்கிறது.

சில நாள்களுக்கு முன்னால் இந்தப் படத்தைக் கண்ட தணிக்கைக் குழு, படத்திலிருக்கும் பல காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறியதாகத் தெரிகிறது. அப்படிச் செய்தால், படத்திலிருந்து கிட்டத்தட்ட 25 காட்சிகள் வரை முழுமையாகவோ, பகுதியாகவோ நீக்கப்பட வேண்டி வரும் என்று சொல்லப்படுகிறது.

பல ஆடியோக்கள் ம்யூட், பல வீடியோக்கள் நீக்கம் மற்றும் காட்சி இருட்டடிப்புகள் செய்ய வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் கூறியதால் படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து மறுதணிக்கைக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தணிக்கைப் பணிகள் முடிவடைந்தவுடன், படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

ஏனென்றால், இந்தப் படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியை அறிந்து வருத்தப்பட்டதால் காஜல் அகர்வாலின் கன்னம் அரை இஞ்ச் வீங்கிவிட்டதாம்.பார்த்து மக்களே ரொம்ப வீங்க வைச்சிடாதீங்க..!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு மற்றும் சிலை திறப்பு விழா!

0

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் மறைந்தார்.

இதனையடுத்து அவர் மறைந்த தினமான இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காலை 8 மணிக்கு திமுகவின் சார்பாக மவுன ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த அமைதி ஊர்வலம் அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்கிறது.

இந்த அமைதி ஊர்வலத்ததிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இதனையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு மற்றும் சிலை திறப்பு விழா!

மேலும் இன்று மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். மேலும் இந்த சிலையை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுகவின் சார்பாக பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.