Home Blog Page 72

விஜய்யை எதிர்க்கவில்லை சில கேள்விகள் மட்டும் தான்.. சீமான் விளக்கம்!!

0

NTK TVK: சென்னை எம்ஜிஆர் நகரில், முத்துராமலிங்க தேவரின் புகழை போற்றும் நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தினர். இதில் உரையாற்றிய அவர், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.  வரலாற்றில் பல துப்பாக்கிச் சூட்டுகள் மறைக்கப்பட்டன. இன்று கரூர் சம்பவம் பற்றி பேசுகிறவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை மறந்து விட்டனர்.

ஜாலியன் வாலாபாக் பற்றி பேசுபவர்கள் பெருங்காவல் நல்லூர் போராட்டத்தை நினைவில் கொள்ளவில்லை எனக் கூறினார். மேலும், மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் என தெரிந்தும், 60 ஆண்டுகளாக சரி செய்யாமல் இருக்கும் அரசியல் தலைவர்களே உண்மையான பிரச்சினை. அதிகாரத்தில் இல்லாத போது இந்திக்கு எதிராக பேசுபவர்கள், அதிகாரத்தில் வந்ததும் இந்தியில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பாஜகவை விமர்சித்தால் ஒரு மதத்தின் கைக்கூலி என்கிறார்கள்.

திமுகவை விமர்சித்தால் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்கிறார்கள். நாங்கள் எவருக்கும் கூலி அல்ல எனவும் அவர் கூறினார். விஜய்யை பற்றிய கேள்விகள் குறித்து விளக்கமாக கூறிய அவர், நாங்கள் விஜய்யை எதிர்க்கவில்லை. சில கேள்விகளை மட்டும் முன் வைக்கிறோம், அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு எங்களை எதிர்க்கிறார்கள் என்று கூற கூடாது என்று தெரிவித்தார்.  இறுதியில், நேரம் சிறிது மீறி விட்டது. இதற்காக வழக்கு போட்டு தேர்தல் காலத்தில் எங்களை அலைக்கழிக்க வேண்டாம் என போலீசாரிடம் சீமான் கேட்டு கொண்டு தனது உரையை முடித்தார்.

ஜெய்பீம் முதல் பைசன் வரை திரைப்பட விமர்சகராக மாறிய ஸ்டாலின்.. பொம்மை முதல்வர் எனவும் விமர்சனம்!!

0

ADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.  அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நாற்று நட்ட கைகளில் மழையில் நனைந்த நெல்லைப் பிடித்தபோது, விவசாயிகளின் துயரத்தை நேரில் உணர்ந்தேன். ஆனால் அந்த நெல்லைப் பிடிக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், மக்களின் வேதனைகளை பாராமல், படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

மேலும் திரைப்படங்களை பார்ப்பதில் தவறு இல்லை என்றாலும், மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல், சினிமா உலகில் மூழ்கி, முழுநேர திரைப்பட விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என அவர் கடுமையாக சாடினார். ஜெய்பீம், கூலி, பைசன் போன்ற திரைப்படங்களை பார்த்து கருத்து தெரிவிப்பதில் முதல்வருக்கு நேரம் இருக்கிறது, ஆனால், விவசாயிகள், ஏழை மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைப் புரிந்து கொள்ள நேரம் இல்லை எனக் கூறினார்.

தென் தமிழகம் கடும் மழையில் மூழ்கிய போது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி பறந்தவர் நீங்கள் தான். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடந்தபோது கூலி படத்தைப் பார்த்தது நீங்கள் தான். இப்போது, நெல் முளைத்து விவசாயிகள் வேதனைப்படும் நேரத்தில் பைசன் திரைப்படம் பார்த்து மணிக்கணக்கில் நேரம் செலவழிப்பது எவ்வளவு பொருத்தம்? என கேள்வி எழுப்பினார்.

மழை மற்றும் புயல் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்த நிலையிலும், மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் கண்ணீர், ஏழை மக்களின் வேதனைகளை உணராத இந்த குடும்ப ஆட்சியாளர்களுக்கு விரைவில் மக்களாட்சியின் சக்தி உணர்த்தப்படும் நாள் தூரத்தில் இல்லை என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உட்கட்சி பிரச்சினையை தீர்க்காத கட்சிகள் இனி ஜெயிக்காது.. அதிமுக தலைவருக்கு எச்சரிக்கை!!

0

ADMK: தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பெங்களூரு புகழேந்தி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். அதிமுகவிலிருந்து புகழேந்தி பிரிந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருவதோடு, அவரது தலைமையிலான கூட்டணி தோல்வியடையும் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் அல்லது மோசமான வழக்குகள் உள்ளவர்களுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார்.

விஜய் யாரிடமும் பேசவில்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அவர் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களை விஜய் நேரில் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எந்த ஒரு கட்சியும் உட்கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து, ஒற்றுமையுடன் செயல்படாவிட்டால் வெற்றி பெற முடியாது. எல்லோரையும் சேர்த்து செல்லும் மனப்பக்குவம் இல்லாத எடப்பாடி பழனிசாமி, உதயகுமார் போன்றோர் அரசியலில் பெரிய தோல்வியைச் சந்திக்க போகிறார்கள்.

2026 தேர்தலில் எடப்பாடி வேட்பாளர்களை தேடி அலைவார் என நான் உறுதியாகச் சொல்கிறேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், விஜய், எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டதாக கூறவில்லை. விஜய் எடப்பாடியுடன் சேர்ந்தால் அவர் அரசியல் அரங்கில் காணாமல் போய்விடுவார். விஜய் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பார் என கனவில் கூட நினைக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் பெங்களூரு புகழேந்தியின் இந்தப் பேச்சு, அதிமுக-விஜய் கூட்டணி குறித்து நிலவி வரும் ஊகங்களுக்கு வலுவான பதிலாக இருக்கிறது.

திமுகவிலிருந்து விலகும் இரண்டு முக்கிய கட்சிகள்.. பிரிவின் தொடக்கத்தில் திமுக!!

0

DMK: தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் அதிமுகவில் நிகழும் உட்கட்சி பிரச்சனைகளை போல திமுகவிலும் நிகழ கூடாது என்பதில் திமுக தலைமை கவனமாக இருக்கிறது.

ஆனால் கூட்டணி கட்சிகளோ அதற்கு எதிர் மாறாக நடந்து வருகின்றன. 1 வாரத்திற்கு முன்பு நடந்த சட்டசபை கூட்டத்தில் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், இதை திரும்ப பெற வேண்டுமென்று கூறியிருந்தார். இதற்கு முன் ஒரு முறை விசிகவிற்கு, திமுக கூட்டணியில் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

இவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எஸ். அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த போன்றோரும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என கூறி ஸ்டாலினை வலியுறுத்தி வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த இரண்டு கட்சியும் திமுகவை விட்டு விலகி தனித்தோ அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி வைத்தோ சட்டமன்ற  தேர்தலை சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. இவர்களின் இந்த தொடர் வலியுறுத்தல், திமுக தலைமைக்கு எதிரான கோஷம் போன்றவை நடைபெற இருக்கும் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

விஜய்யை காங்கிரஸ் உடன் இணைய வலியுறுத்தும் நபர் இவர் தானா.. வெளியே வந்த சீக்ரெட்!!

0

TVK: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே தவெக பற்றிய செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அவருக்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. கரூர் சம்பவத்திற்கு பிறகும் இந்த நிலை மாறவில்லை. விஜக்கான ஆதரவு ஒரு பக்கம் கூட, தமிழகத்திலுள்ள கட்சிகளும், தேசிய கட்சிகளும், அவருடன் கூட்டணி அமைக்க போராடி வருகின்றனர். அதிமுகவும், பாஜகவும், விஜய்யின் குரலாகவே செயல்படுவதை பார்க்க முடிகிறது.காங்கிரஸும்  மறைமுகமாக உதவி வருகிறது.

இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தைகள்  நடைபெற்று வர, பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் தவெகவின் எதிர்காலம் பாதிக்கப்படும், அதனால் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்று தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி விஜய்யிடம் கூறியதாக தகவல் வந்துள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணி  அமைப்பதன் மூலம் திமுக வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றும், நம் தலைமையில் கூட்டணி அமையுமென்றும், தமிழகத்தில் முக்கிய கட்சியாக வலம் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் விஜய்யிடம் கூறியுள்ளாராம்.

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதிலிருந்தே கட்சியின் பணிகளை ஜான் ஆரோக்கிய சாமி மேற்கொள்வதால் இவரின் இந்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்வார் என்று தவெகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஜனவரியில் தான் தனது கூட்டணி முடிவை அறிவிப்பேன் என்று விஜய் உறுதியனாக உள்ளதால் நல்ல முடிவை தெரிவிப்பார் என்று தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை தேடி அலைகிற சூழல் வரும்.. காரணம் இது தானா.. நச்சுன்னு பேசிய புகழேந்தி!!

0

ADMK TVK:  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் விஜய் மீது தவறு இருந்தாலும், திமுக அரசின் மீது தான் அனைத்து தவறும் உள்ளது, முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், காவல்துறையினர் பரப்புரைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இது போன்ற கருத்தையே முன்வைத்து வருகிறார். இவர்களின்  இந்த ஆதரவு விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதற்கான முயற்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவதை அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர் சிலர் விரும்பவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. ஏனென்றால் விஜய் கூட்டணிக்கு வந்தால், இரண்டாம் கட்ட  தலைவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து விடும்.

ஏற்கனவே விஜய் முதல்வர் பதவியையும், கூட்டணி எங்கள் தலைமையில் தான் அமைய வேண்டும் என்பதையும், திடமாக கூறி வருகிறார். இந்நிலையில் அவர் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அவருடைய ஆதரவாளர்களுக்கு உயரிய பதவிகளையும், அதிக தொகுதிகளையும் கேட்க வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவிலிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும், தொகுதிகளில் நாங்கள் வேட்பாளராக நிற்க மாட்டோம் என்றும் அதிமுக தலைமையிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

இது ஒரு வேலை நிகழ்ந்தால், கொங்கு மண்டலத்திலேயே அதிமுகவின் வாக்கு வங்கி சரிய வாய்ப்புள்ளது. இதனால் தான் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி இபிஎஸ் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேடி அலைய வேண்டிய சூழல் ஏற்படும் என்று சூசகமாக கூறியுள்ளார் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். 

செந்தில் பாலாஜிக்கு எதிராக கிளம்பும் கழக குரல்.. திமுகவில் வெடிக்க போகும் பூகம்பம்!!

0

DMK: திமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்டு வருபவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பண மோசடி செய்துள்ளார். இதற்கான விசாரணை தற்போது நடந்து வரும் சூழலில், செந்தில் பாலாஜி மீதான எதிர்ப்புகள் திமுகவின் உள்வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. சமீபத்தில் செந்தில் பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது திமுகவை சேர்ந்த சிவபாலன் என்பவர், செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்த போது அந்த வாழ்த்து மடலில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படங்கள் சிறியதாக இருந்தது. இதனை கண்டு ஆத்திரமடைந்த, என்.கே.கே.பி ராஜா திமுக காரனா இருக்கணும்னு யோசிங்க, திமுகவின் கம்பீரத்தை சிதைத்து விடாதீர்கள் என்று கடுமையாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கு முன் திருச்சி சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செந்தில் பாலாஜி தாமதமாக வந்ததற்கு திருச்சி சிவா மிகவும் கோபப்பட்டார். இவர்களின் இந்த செயல்பாடுகளை பார்த்தால், திமுக உள் வட்டாரத்திலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக கழக குரல்  எழுந்துள்ளது என்பது நிரூபணமாகிறது. செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கை அவருக்கு எதிராக உள்ளவர்கள் சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது. 

ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன்.. இதனை ஏற்க முடியாது என்றும் பிடிவாதம்!!

0

DMK VSK: 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 14 ஆம் தேதி கூடிய சட்டசபையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பல்வேறு கட்சியை சேர்ந்த முன்னணி கட்சி தலைவர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அப்போது முதல்வர் ஸ்டாலினால் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அவர்கள் விரும்பினால் அவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றி கொள்ளலாம். மேலும், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயல்படலாம் என்ற அனுமதியும் இதில் வழங்கப்படுகிறது.  புதிதாக உருவாகும் பல்கலைகழகங்கள் மாணவர்களின் படிப்பு திட்டம், பாடத்திட்டங்ககள், ஆசிரியர் ஊதியம் போன்றவற்றை அவர்களே நியமித்து கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

மேலும், உயர் கல்வி பறிபோவதால், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும், கல்வி கட்டணம் அதிகரிக்கும், அரசு உதவி பெரும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேர பாதிக்கப்படுவார்கள், இதனால் இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டிய திருமாவளவன்,  இந்த திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டுமென்றும் கூறியுள்ளார்.நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து வரும் விசிகவின் இந்த நிலை பாடு  திமுக தலைமைக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

டெல்லி மெட்ரோவில் ஆச்சரியம்: பயணியொருவர் கண்டெடுத்த ‘கண்டோம் பெட்டிகள்’ – “என்ன ஸ்டேஷன் இது?” என அதிர்ச்சி

0

சமூக ஊடகங்களில் வைரலாகிய புகைப்படம் ஒன்று தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதில், டெல்லி மெட்ரோவில் பயணித்த ஒருவர் பெரிய பெட்டியில் நிறைய காண்டோம் பாக்கெட்டுகளை கண்டதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் படம் Reddit தளத்தில் பகிரப்பட்டதும், நெட்டிசன்கள் “இது எந்த ஸ்டேஷனில் நடந்தது?” என ஆச்சரியமும் நகைச்சுவையும் கலந்த கருத்துகளை பகிர்ந்தனர்.

பெங்களூருவில் ராபிடோ டிரைவரின் மனதை நெகிழ்த்தும் செயல்

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவமும் பரவி வருகிறது.
பெங்களூருவில் ராபிடோ (Rapido) ஆட்டோ டிரைவர் ஒருவர்,
ஒரு பெண் பயணியிடமிருந்து தவறவிட்ட ஏர் போன் (earphones) திருப்பி வழங்கி, பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சம்பவி ஶ்ரீவாஸ்தவா (Sambhavi Shrivastava) என்ற பெண் தனது அனுபவத்தை LinkedIn-ல் பகிர்ந்துள்ளார்.

“வெள்ளிக்கிழமை மாலை, இந்திராநகரில் சிறிய ராபிடோ ஆட்டோ ஒன்றில் பயணித்தேன்.
இரண்டு கிலோமீட்டர் தூரம் தான். இரவு உணவிற்கு சகோதரனைச் சந்திக்கச் சென்றேன்.
ஆட்டோவில் ஏர் போனை மறந்து விட்டேன்,” என்று அவர் பதிவிட்டார்.

அவரது ரைடு முடிந்த சில நிமிடங்களுக்குள்,
டிரைவர் Google Pay வழியாக இது குறித்து மெசேஜ் அனுப்பி உள்ளார்.

அதில் “நீங்கள் ஏர் போனை மறந்துவிட்டீர்கள். நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன், எப்போது வருவீர்கள்?”
என்று கேட்டதாக கூறினார்.

அவர் கூறியபடி, திங்களன்று அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் டிரைவர் அழைத்து,
“இப்போவே வந்து வாங்கிக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

“இது ஒரு சிறிய விஷயமாக தோன்றினாலும், மனிதநேயத்தின் நல்ல பக்கம் இன்னும் உயிருடன் இருப்பதை இது நினைவூட்டியது,”
என்று சம்பவி கூறினார்.

ராபிடோ நிறுவனத்தின் பதில்

ராபிடோ நிறுவனம் உடனடியாக அந்த பதிவுக்கு பதில் அளித்து,
அந்த டிரைவரை பாராட்ட விரும்புவதாக தெரிவித்தது.

“சம்பவி, இந்த அருமையான அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.
உங்கள் டிரைவர் ஜஹ்ருல் போன்றவர்கள் தான் எங்கள் தளத்தையும்,
உலகையும் சிறிதளவு நல்லதாக்குகின்றனர்,” என்று நிறுவனம் குறிப்பிட்டது.

பின்னர் மற்றொரு கருத்தில்,

“டிரைவர் ஜஹ்ருல் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, சிறப்பு பரிசு வழங்கியுள்ளோம்,”
எனவும் தெரிவித்தது.

மற்ற பயணிகளின் அனுபவமும்

பலரும் இதைப் பாராட்டி கருத்துகளை பகிர்ந்தனர்.
“இன்னும் இப்படிப் பட்ட நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி!” என ஒருவர் எழுத,
மற்றொருவர், “இது நம்ப முடியாத அளவுக்கு அருமை” என கூறினார்.

இது போல மேலும் ஒருவர் பகிர்ந்த தகவல்:

“நான் ஒருமுறை காப் டாக்ஸியில் பணப்பையை மறந்துவிட்டேன்.
டிரைவர் இரவு 9 மணிக்கு அழைத்து, அதை அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

ஷாதி.காம் நிறுவனத்தின் நகைச்சுவையான பிரச்சாரம்

இதற்கிடையில், லக்‌னோவில், ஆன்லைன் திருமண தளம் Shaadi.com, ஒரு வேடிக்கையான “Kadhai Prank” என்ற பிரச்சாரத்தால் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில்,
வீதியின் நடுவில் ஒரு பெரிய இரும்பு கடாய் வைக்கப்பட்டிருந்தது.
அதில் திருமண விழாவில் வழக்கமாக வழங்கப்படும் இனிப்புகள், ஸ்நாக்ஸ் போன்றவை நிரம்பியிருந்தன.

அதன் உள் பகுதியில் cheeky message ஒன்று எழுதப்பட்டிருந்தது:

“‘கடாயிலிருந்து சாப்பிட்டீங்களா? அப்படியானால் உங்கள் திருமணத்தில் மழை உறுதி!’”

இந்த நகைச்சுவையான வாசகம் பாரம்பரிய “திருமணத்தில் கடாயில் சாப்பிட்டால் மழை பெய்யும்” என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

பலர் ஆர்வமாகக் கடாயில் இருந்து உணவை எடுத்துக் கொண்டனர்,
அதில் நகைச்சுவை twist இருப்பதை பிறகு தான் புரிந்து கொண்டனர்.

அந்த நம்பிக்கைக்கு சாட்சியாக மழை

இந்த ஆண்டு மே மாதத்திலும்,
திருமணத்திற்கு வருகை தரும் மணமகன் மீது பலத்த மழை பொழிந்த வீடியோ ஒன்று வைரலானது —
அது இந்த நம்பிக்கையை “உண்மையாக நிரூபித்தது” என நகைச்சுவையாகப் பகிரப்பட்டது.

டெல்லி மெட்ரோவில் நடந்த அதிர்ச்சியான கண்டுபிடிப்பு,
பெங்களூரு ராபிடோ டிரைவரின் மனிதநேயம்,
Shaadi.com-ன் நகைச்சுவை பிரச்சாரம்
எல்லாம் சமூக ஊடகங்களில் ஒரே நாளில் வைரலாகி,
இந்தியர்களின் நகைச்சுவை உணர்வையும் மனிதத்தன்மையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

டிடிவி தினகரனுடன் இணையும் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி.. ஒரே கருத்தை முன் வைப்பதாகவும் விமர்சனம்!!

0

AMMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. தேமுதிக, பாமக, தவெக போன்ற கட்சிகள் தங்களது கூட்டணி முடிவுகளை ஜனவரியில் தான் அறிவிப்போம் என்று முடிவாக உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தைகளில் திராவிட கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னணி கட்சியான அதிமுக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர துடித்து வருகிறது.

பாஜக உடனான கூட்டணியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த அதிமுக விஜய்யை கூட்டணியில் சேர்க்க பார்க்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் இது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதிமுக-தவெக கூட்டணியை விரும்பாத டிடிவி தினகரன், விஜய் இபிஎஸ்யுடன் கூட்டணி வைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்று கூறியுள்ளார். தற்போது அந்த கருத்தையே அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி அவர்களும் தெரிவித்துள்ளார்.

விஜய், எடப்பாடி பழனிசாமியை ஏற்று கொண்டேன் என்று இன்னுமும் கூறவில்லை. ஒரு வேலை எடப்பாடியுடன் விஜய் சேர்ந்தால்  காணாமல் போய் விடுவார் என்றும் அவர் எச்சரித்தார். அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் நின்ற பெங்களூர் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து தனித்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தினகரனின் கருத்தை புகழேந்தியும் முன்வைப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக புகழேந்தி  அமமுக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.