Home Blog Page 95

விஜய்யை தன் பக்கம் இழுத்த பாஜக.. உருவெடுக்கும் மெகா கூட்டணி.. உறுதிப்படுத்திய விஜய்!!

0

BJP TVK: தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக மற்றும் திமுகவிற்கு சவால் விடும் வகையில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தனது அரசியல் எதிரி என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது முதல் இப்போது வரை திமுகவிற்கும், தவெகவிற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது விஜய்யிக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஆனாலும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் போட்டி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதை பலரும் எதிர்த்து வரும் நிலையில் பாஜகவும் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே விஜய்யை பாஜக இயக்குகிறது என்று பலரும் கூறி வரும் நிலையில் இது விஜய் பின்னால் பாஜக இருப்பதை உறுதிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. தவெகவிலிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பாஜக உடன் தொடர்பில் இருப்பவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

கரூர் சம்பவம் தொடர்பாக பாஜக, விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக விஜய்யை வஞ்சித்து வந்த பாஜக தற்போது விஜய் பக்கம் நிற்பது, கூடிய விரைவில் விஜய் பாஜகவில் இணைவார் என்பதற்கு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து விஜய் எந்த கருத்தும் கூறாமலிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புஸ்ஸி ஆனந்த்க்கு வலைவீச்சு.. தனிப்படை அமைத்த போலீசார்.. கூடிய விரைவில் சிக்கும் தலைவர்கள்!!

0

TVK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விஜய் மீதும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல்குமார் மீதும் கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் தரப்பு வழக்கறிஞரை வைத்து தீர்வுகாண முயற்சித்து வருகிறது.

இதனை தொடர்ந்து  தலைமறைவாகியிருந்த மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரை அடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர் தற்போது சேலத்தில் தலைமைறைவாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனை தொடர்ந்து நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்த்தும் முன் ஜாமீன் கோரியுள்ளனர். இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லையென்றும், காவல் துறையினர் கூட்டத்தை சரியாக வழி நடத்தவில்லை. அதனால் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என்றும், தனி நபர் ஆணையம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை எங்களை கைது செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் முன் ஜாமீன் கோரியுள்ள நிலையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனி படை அமைப்பு கூடிய விரைவில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

அன்புமணிக்கு ஒதுக்கப்பட்ட சந்தை திடல்.. விஜய்க்கு மறுக்கப்பட்டிருப்பது குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி!!

0

TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டம் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீதும், தவெக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் காவல் துறையினர் வழக்கு தொடுத்துள்ளனர்.

தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 41பேர் இழப்பிற்கு திமுக தான் காரணம் என்று சிலர் கூற, விஜய்யின் அலட்சியம் தான் காரணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். லைட் ஹவுஸ் மற்றும் சந்தை திடலை பிரச்சாரம் நடத்த தவெகவினர் கேட்டிருந்த நிலையில், அதற்கு பதிலாக வேலுசாமிபுரத்தை காவல் துறையினர் பரிந்துரை செய்திருந்தனர்.

இது தற்போது பெரிய விவாதமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் முப்பெரும் விழாவிற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் இந்த இடத்தில் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து அதிகம் இருப்பதால் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் கூட்டம் உழவர் சந்தை பகுதிலேயே நடைபெறும் என்றும், கரூரில் நடக்கவிருந்த பாமக தலைவர் அன்புமணியின் பிரசாரத்திற்கு சந்தை திடல் பகுதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாங்கள் கேட்ட உழவர் சந்தை அல்லது லைட் ஹவுஸ் பகுதிகளில் அனுமதி அளித்திருந்தால், இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்று தவெக தரப்பினர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதே போல் நயினார் நாகேந்திரன் முதல்வர், துணை முதல்வர் வந்தால் மட்டும், லைட் ஹவுஸ், சந்தை திடல் பகுதியில் கூட்டம் நடக்கிறது ஆனால், விஜய்க்கு மட்டும் ஏன் இந்த இடம் மறுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்டத்தை தொடங்கிய பாஜக.. பதற்றத்தில் இபிஎஸ்.. விலகும் அதிமுக தலைவர்கள்!!

0

ADMK BJP: தமிழக அரசியல் களத்தில் தற்போது புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக கரூரில் நடந்த மரணத்தை பற்றிய செய்தி தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. தற்போது அதன் புதிய திருப்பமாக அதிமுகவில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. தேர்தல் நெருங்குவதற்கு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டது.

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட போது கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாமலிருந்தால் பாஜகவிற்கு அதிக சீட்டுகள் ஒதுக்கப்படும் என்று இபிஎஸ் அமித்ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பாஜகவும் அதிமுக தலைமையிடம் கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இப்போது அவர்கள் கேட்ட தொகுதியை ஒதுக்காவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப்படும் என்று அவர்கள் கூறியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவிலிருக்கும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் விஜய்யை மையமாக வைத்து காய் நகர்த்துவது போல பாஜகவும் அதன் ஆட்டத்தை ஆட தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அதிமுக உடன் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியின் கூட்டணியும் உறுதி செய்யப்படாததால் இபிஎஸ் இந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த கோரிக்கையால் அதிமுகவின் உள் வட்டாரத்தில் சலசலப்பு நிலவுவதாகவும், பலர் கட்சியை விட்டு விலகுவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக தற்போதுள்ள நிலைமையில் பாஜகவின் கூட்டணியையும் இழந்து விட்டால் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

அடுத்தடுத்து நடக்கும் அதிரடி நடவடிக்கை.. கைது செய்யப்பட்ட தவெக இரண்டாம் கட்ட தலைவர்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கரூர் பிரச்சாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் தவெக தலைவர் விஜய் மீதும், கட்சியின் மீதும் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாமலிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு திண்டுக்கல்லில் மதியழகன் கைது செய்யப்பட்டார். நேற்று இரவே அவர் நீதிபதியிடம் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்பட்டது. தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்-யும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தற்போது இவர் சேலத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரும் தேடப்பட்டு வருகிறார். இவர்கள் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத படி வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த மரணத்திற்கு தவெக தலைவர் எந்த அளவிற்கு காரணமோ அந்த அளவிற்கு இரண்டாம் கட்ட தலைவர்களும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் கூட்டத்தை சரியாக வழி நடத்தவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவெக தொண்டர்கள் தாக்கத்திற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி.. சீமான் குற்றச்சாட்டு.. திமுக கண்டனம்!!

0

ADMK TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெகவின் தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு விட முடியாமல் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்துள்ளனர். சுமார் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கும் இது போன்று நடந்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும் சென்றார். அப்போது பேசிய அவர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்தார். அதிமுக பிரச்சாரத்தின் போதும் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்ததை போல விஜய்யின் பரப்புரைக்கும் வந்தது என்று கூறினார்.

வேண்டுமென்றே பரப்புரை பகுதிகளில் ஆம்புலன்ஸ்யை அனுப்பி மக்கள் மத்தியில் மற்ற கட்சிகளின் தரத்தை குறைக்க பார்க்கிறது திமுக என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் எங்களுடைய பொது கூட்டத்திற்கும் குறுகிய இடத்தை தான் பரிசீலிப்பார்கள் என்றும் இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இவர்களின் இந்த கருத்துக்கு திமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது தவெக தொண்டர்கள் அதன் மீது தாக்குதல் நடத்தினர், இதனையே தான் அதிமுக தொண்டர்களும் செய்தனர். தவெக தொண்டர்களையும் இந்த மனநிலைக்கு மாற்றியது எடப்பாடி பழனிசாமி தான் என்று தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

கரூர் மரணத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி.. வெளியானது திமுக சதி!!

0

DMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்த அவர் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர், நாமக்கல் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூரில் பிரச்சாரம் முடிந்த நிலையில் அங்கு 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் விஜய் மீதும், அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பு வழக்​கறிஞர்களை வைத்து தான் பக்கம் உள்ள நியாயத்தை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசும் ஓய்வு பெற்ற நீதிபதியான அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் விஜய் தரப்பு இந்த விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த அசம்பாவிதத்திற்கு பின்னால் திமுகவின் கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக தவெக கூறியுள்ளது. செந்தில் பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ள சமயத்தில் தன்னுடைய செல்வாக்கை கரூரில் நிலை நிறுத்தி விடலாம் என தவெக திட்டம் திட்டியதாகவும், அதனால் செந்தில் பாலாஜி இவ்வாறான சதி திட்டத்தை திட்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

செந்​தில்​ பாலாஜி சதி​யால் 41 பேர் உயி​ரிழந்​தனர். அதற்​கான ஆதா​ரங்​களை நீதிமன்றத்​தில் தாக்​கல் செய்​வோம் என்று தவெக தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் கரூர் பிரச்சாரத்தில் விஜய் செந்தில் பாலாஜியை பற்றி பேசியவுடன் கூட்டத்திலிருந்து செருப்பு வீசப்பட்டது இதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் பெருந்துயரத்தில் ஆதாயம் தேடும் திமுக.. பேரிடரிலும் அரசியல்!!

0

DMK TVK: ஆளுங்கட்சியான திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன்வசப்படுத்தி விட வேண்டுமென்று தீவிரமாக உழைத்து வருகிறது. அதிமுக, நாதக, பாஜக போன்ற கட்சிகள் திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் புதிய அரசியல் கட்சியாக அறிமுகமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

விஜய் தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக தான் தனது பிரதான அரசியல் எதிரி என்று கூறி வரும் நிலையில் இது திமுகவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே தவெகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்குடன் தான் தமிழக அரசு அதன் எல்லா பிராச்சாரத்திற்கும் அனுமதி அளிக்கலாம் அலைகழித்து வந்ததாக சிலர் கூறி வந்தனர்.

தவெகவிற்கு வரும் கூட்டத்தை கண்டு திமுக பயப்படுகிறது என்று விஜய் தனது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார். அந்த கூட்டத்தை வைத்தே விஜய்யை தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்குடன் தான் விஜய் தரப்பினர் கேட்ட லைட் ஹவுஸ், சந்தை திடல் பகுதிக்கு அனுமதி அளிக்காமல் குறுகிய பகுதியான வேலுசாமிபுரத்திற்கு அனுமதி அளித்தார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

மேலும் இதற்கு முன் நடைபெற்ற கள்ளசாராய மரணம், கற்பழிப்பு, அண்ணா பல்கலைக்கழக புகார் போன்ற துயர சம்பவங்களில் எந்த ஒரு திமுக தலைவரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் கூறவில்லை. ஆனால் இதற்கு மட்டும் அனைத்து தலைவர்களும் நேரில் வந்து ஆறுதல் கூறினார்கள். இதனால் மக்கள் மனதில் தங்கள் கட்சியை நிலைப்படுத்தும் நோக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்படும் விஜய்.. அதிகரித்து வரும் விஜய்க்கு எதிரான வாதம்!!

0

TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த துயர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்களின் உயிரிழப்புக்கு காரணம் யார் என்பதில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில் மாநில அரசு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதியான அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான உண்மைகள், ஏற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகள் என்ன என்பதை இந்த குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

தவெக தலைவர் விஜய் தான் இதற்கு பொறுப்பு, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்ற கருத்தும் வலுத்து வருகிறது. நேற்று அவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலும் வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு விஜய் மீது குறை கூறி வரும் நிலையில், மற்றொரு தரப்பு இந்த அசம்பாவிதத்திற்கு ஆளுங்கட்சியான திமுக தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் தரப்பினர் அவர்கள் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரி விஜய் கைது செய்யப்படுவர் என்ற எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

மறைந்தும் நம் மனங்களில் வாழும் நடிகைகள்.. மர்மமாக இறந்த நடிகைகள்!!

0

தமிழ் திரையுலகில் மர்மமான முறையில் இறந்த நடிகைகள் ஷோபா, ஸ்ரீதேவி, மோனல், சில்க் ஸ்மிதா, வி.ஜே.சித்ரா இவர்கள் சந்தேகமான முறையில் இறந்தவர்கள். இவர்கள் பிரபலமான நடிகைகள் இன்றும் ரசிகர்கள் இடையில் பேசப்படும் நடிகைகளாகும். இதில் சில மரணங்கள் தற்கொலை என கூறினாலும் அவை இன்னும் எதனால் இந்த முடிவு என்ற சந்தேகத்தில் உள்ளது.

ஷோபா:

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை ஷோபா இவர் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும் படத்தில் நடித்தவர். இயக்குனர் பாலு மகேந்திர மனைவி அவர். முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த்க்கு சோபா தங்கையாகவும், ஜெயலட்சுமி மனைவியாகவும், நடித்துயுள்ளார். இதில் ஜெயலட்சுமி 1979-ஆம் ஆண்டும், ஷோபா 1980-ஆம் ஆண்டும் தற்கொலை செய்துக்கொண்டனார். ஷோபா தனது 17 வயதிலே இறந்திவிட்டார்.

சில்க் ஸ்மிதா:

இவரை பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை நடிப்பு மற்றும் நடனத்தில் இவரை மிஞ்ச யாரும் இல்லை. இன்றும் இவரது நடிப்பை ரசிப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் 1996 ஆம் ஆண்டு, ஒரு ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் உயிரிழந்தார். சொல்லப்படாத காரணங்களால் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

வி.ஜே.சித்ரா:

இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும்  சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் வெள்ளித்திரையிலும் கால்ஸ் திரைப்படத்தில்  நடித்தார். மிகச் சிறந்த நடிகையாக பல கஷ்டங்களைச் சந்தித்து இந்த நிலையை அடைந்தார். ஆனால் இப்படிப்பட்ட முடிவு எடுப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. அவரின் கணவர் ஹேமந்த் ரவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக ஹோட்டலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மோனல்:

நடிகை மோனல் “பார்வை ஒன்றே” போதும் படத்தின்  முலம் அறிமுகமானவர். நடிகை சிம்ரனின்  தங்கை. தனது 21வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவி:

இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாகவே திரைத்துறையில் அறிமுகமானார். இவர்  துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஹோட்டல் குளியலறையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.