Home Blog Page 96

முழுப்பொறுப்பும் விஜய் என்று சொல்லிவிட முடியாது.. அண்ணாமலையின் பரபரப்பு பேட்டி!!

0

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நேற்று முன் தினம் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் 28,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி கட்சி தலைவர்களான ஸ்டாலின், இபிஎஸ், டிடிவி தினகரன், ஓபிஎஸ், செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போன்றோரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலையும் கரூர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எல்லோரும் ஒன்று சேர்ந்து விஜய்யை கார்னர் செய்ய வேண்டாம், அவரும் தற்போது மன வேதனையில் தான் இருப்பார். இதற்கு முழுப்பொறுப்பும் விஜய் தான் என்று சொல்லி விட முடியாது. தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒரு கூட்டத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் விஜய் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பதால் அவரை காண வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும், அப்படி உங்களுக்கு உங்கள் தலைவர் மீது அவ்வளவு பாசமும், பற்றும் இருந்தால் அதனை வீட்டிலிருந்தே ரசிக்கலாம். ஏன் இந்த கூட்ட நெரிசலில் பச்சிளங்குழந்தைகளை தூக்கி வருகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் சனிக்கிழமைகளில் பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் கூட்டம் வர தான் செய்யும் அதனால் விஜய் தனது வார இறுதி சுற்றுப்பயணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஒரு தலைவன் என்பவன் இந்த துயரத்தை எல்லாம் தாண்டி தான் வரவேண்டும், அதனால் விஜய் மனமுடையாமல் மீண்டும் களத்திற்கு வர வேண்டும் என்றும் கூறினார்.

பதிலளிக்காமல் சென்ற நிர்மல் குமார்.. விஜய் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி!!

0

TVK: 2 நாட்களாக நாட்டையே உலுக்கி வரும் மிக பெரிய துயர சம்பவம் தவெக பிரச்சாரத்தில் நடந்த 41 பேரின் உயிரிழப்பு தான். இது வரை எந்த ஒரு அரசியல் கட்சி பொது கூட்டத்திற்கும் இந்த அளவு உயிரிழப்புகள் நேர்ந்தது இல்லை. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இது குறித்து விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எந்த பதிலும் கூறாமல் சென்றார். இறந்தவர்களையும் காண வரவில்லை.

இதனால் விஜய் மீது அரசியல் களத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமும், ஆறுதலையும், ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தவெகவின் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் இது குறித்து முறையீடு செய்துள்ளளோம்.

இந்த சம்பவத்தை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டுமென்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் இது நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின்னர் இது தொடர்பான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தவெக நிர்வாகிகளும், தலைவர் விஜய்யும் ஏன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை, விஜய் கரூருக்கு வருவாரா? என்று கேள்வி கேட்ட போது எந்த பதிலும் கூறாமல் சென்றார்.

காமெடியில் தொடங்கி இன்று கதாநாயகனாக வலம் வரும் சூப்பர் ஹீரோ!!

0

COMEDY ACTOR: நகைச்சுவை நடிகர் வடிவேலு  இவர் நடிப்புக்கு  பெயர் போனவர். இவருக்கு வைகைபுயல் என்ற இன்னொரு பெயர் திரையுலகில் வைக்கப்பட்டது.இவர் நடிப்பில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.கதாநாயகனாகவும்  சிறந்த குணச்சித்திர நடிகராகவும்  நடித்து வருகிறார்.நடிப்பு மட்டுமின்றி பின்னணி பாடகர் ஆவார்.199௦-ல் இருந்து நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து இவரின் திரைப்பயணம் தற்போது வரை சினிமாவை கலைக்கிக் கொண்டு வருகிறார்.

வடிவேலு நடித்தா படங்கள் :

வடிவேலு  இம்சை அரசன் 23 புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் 6 பாடலங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் அவர் நடிப்பில் வேறு கோணத்தில் தெரிந்தது.வடிவேலுவின் இயற்கையான நடிப்பு அதிக வரவேற்பைப்  பெற்றது.

ரஜினிகாந்த் உடன் நடித்த சந்திரமுகி படத்தில் குணச்சித்திரமாக நடித்தார். காமெடி மற்றும் சீரியஸான கதாபாத்திரத்திலும் நடித்து இருப்பார்.இம்சை அரசன், தெனாலிராமன் படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் இப்படங்ளில் சிரிப்பும் மற்றும் அரசியல் கொண்டதாகும். இதில் கதாபாத்திரத்திக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருப்பார்.

அடுத்து மாமன்னன் படத்தில் வித்தியாசமான நடிப்பில் தந்தை கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களின் கண்களில் கண்ணிர் வரவைத்திருப்பார் கடைசியாக வந்த மாரிசன் பாடத்தில் வயதான தோற்றத்தில் ஆக்ஷன் ட்ராமாவுடன் மிகவும் எமோஷனல் லேயர் கலந்த படமாகும். காமெடி நடிகர் என்பதை விட பல குணச்சித்திர நடிப்பிலும் அசத்தி வருகிறார். இப்படங்கள் அணைத்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த படங்களாகும்.

கரூர் சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம்.. பழி சுமத்திய இபிஎஸ்!!

0

TVK ADMK: தவெக சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 28,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 60 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய் தனது இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பல அரசியல் கட்சி தலைவர்களும் பார்வையிட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலளாரான எடப்பாடி பழனிசாமியும் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பொது கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மின்சார விளக்குகள் அணைந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதற்கு முன் தவெக நடத்திய 4 பிரச்சாரத்திலும் கூட்டம் அலைமோதியது. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஏற்கனவே தவெக சார்பில் நடத்தப்பட்ட கூட்டங்களிலும் முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

இது மட்டுமல்லாமல் அதிமுக சார்பில் நான் மேற்கொள்ளும் பயணங்களில் கூட காவல் துறையினர் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்கவில்லை. ஆளுங்கட்சி நடத்தும் கூட்டங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் மற்ற கட்சிகளுக்கு அந்த பாதுகாப்பு தரப்படுவதில்லை என்றும், தமிழக அரசும், காவல்துறையும் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

கரூர் விபத்து.. 41 பேர் உயிரிழப்பு.. மத்திய மாநில அரசுகள் அறிவித்த நிவாரண தொகை!!

0

TVK: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், முதல் முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அதே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய் மதியம் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரம் முடிந்த நிலையில் 41க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று இரவே முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் இறந்தவர்களின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த மரணம் தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காத விஜய் நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து இதயம் கானத்து போயிருக்கிறது நான் சந்தித்த எல்லா முகங்களும் என் மனதில் வந்து போகின்றன என்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் நிவாரணமாக தரப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.. ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி மிகுந்த பதிவு!!

0

TVK: நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கரூரில் தவெகவின் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது முடிவடைந்த உடன் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. தற்போது அது 41 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நீண்ட நேரமாக விஜய் எந்த பதிலும் அளிக்காமலும், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு செவி சாய்க்காமலும் இருந்தார். பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்களையும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இவரை தவிர தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் இதை பற்றி பேசாமல் இருந்தனர். இந்நிலையில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, என்னுடைய வாழ்க்கையில் மிக பெரிய துக்கத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறேன். ஒருவருடைய மரணத்தின் வழி எப்படி இருக்கும் என்பதை 5 வயதிலேயே அறிந்தவன் நான், அந்த வழியை தற்போது மீண்டும் அனுபவித்து வருகிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக என்னுடைய இந்த பயணம் இருக்கும் என்றும் மேலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

41 மரணங்களுக்கு தமிழக அரசு தான் காரணம்.. வாதத்தை முன் வைத்திருக்கும் விஜய்!!

0

TVK: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய் 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், தொடர்ந்து நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருந்தார். 27ஆம் தேதி இந்த இடங்களில் பிரச்சாரமும் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் விஜய் மீதும் அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பினர் அவர்களது வாதத்தை முன் வைத்து வருகின்றனர். கரூரில் நாங்கள் கேட்ட இடமான லைட் ஹவுஸ், மற்றும் உழவர் சந்தையை காவல் துறையினர் தரவில்லை என்றும், மாறாக அவர்கள் தந்த இடமான வேலுசாமிபுரத்தில் தான் பிரச்சாரம் செய்தோம் என்றும் கூறுகின்றனர்.

இந்த குறுகலான இடத்தை அவர்கள் பரிசிலீத்ததன் விளைவே இந்த 41 மரணங்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காவல் துறை இதனை மறுத்திருக்கிறது. விஜய் போன்ற பிரபலங்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடும் என்பதையறிந்தும் காவல் துறை இந்த இடத்தை ஒதுக்கியது தமிழக அரசு மேல் உள்ள தவறு தான் என்றும், விஜய் தரப்பின் மேல் எந்த தவறும் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. தவெக தரப்பு அவர்கள் வாதத்தை தொடர்ந்து முன் வைத்து வரும் சூழலில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசால் தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

செல்வபெருந்தகைக்கு எதிராக சதி.. பின்னணியில் கே.எஸ்.அழகிரி!!

0

DMK CONGRESS: திமுக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கூட்டணி குறித்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் விசிக எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து திமுகவில் உட்கட்சி பூசலை அதிகரிக்கும் விதமாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியை கடைப்பிடிப்பவராக இருந்தால் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்க்காவது திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கூறி கூட்டணி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினர்.

இதன் சூடு கூட தணியாத சமயத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆட்சியிலும் பங்கெடுப்போம், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்று கூறியிருந்தார். இதனால் திமுகவில் விவாதம் தீவிரமடைந்தது. ஆனால் தற்போதைய காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களின் விருப்பத்தை அறிந்தும் காங்கிரஸ் நிர்வாகியாக இல்லாமல் திமுக பக்கமே நிற்கிறார் என்றும் சிலர் விமர்சித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து செல்வபெருந்தகையை பதவியிலிருந்து நீக்க கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் டெல்லி சென்றனர் என்ற தகவலும் வந்தது. இதன் பின்னணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தான் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக பிரச்சாரத்தில் எப்போதுமில்லாமல் செல்வபெருந்தகையை இபிஎஸ் குறி வைத்து பேசி வருவது காங்கிரஸ் தலைவர்கள் அவரின் பின்னால் இருப்பதை உறுதி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கூட்டணிக்கு அடித்தளமிட்ட வைகோ.. விஜய்க்கு வரவேற்பு!!

0

TVK MDMK: தவெக தலைவர் விஜய் 2026 தேர்தலை எதிர் நோக்கி தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். விஜய்யுடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரச்சாரத்தில் திமுகவிற்கு எதிராக பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வரும் விஜய் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தாயை போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இந்நிலையில் மதிமுக தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை போராளி திலீபன் நினைவு நாளையொட்டி, மதிமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கேள்வி எழுப்பபட்டது. ஈழத்தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை மனதார வரவேற்பதாக அவர் கூறினார்.

இவ்வளவு நாளாக விஜய்யை பற்றி எந்த கருத்தும் கூறாமலிருந்த வைகோ தற்போது அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாததால் வைகோவின் இந்த கருத்து அவர் விஜய் உடன் கூட்டணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மதிமுக, அமமுக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் விஜய் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

2026-யில் பெரிய தோல்வியை எதிர்நோக்கியிருக்கும் அதிமுக.. டிடிவி தினகரனின் அதிரடி பேட்டி!!

0

ADMK AMMK: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இபிஎஸ் தலைமையிலான அதிமுக NDA கூட்டணியில் இணையும் போது சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இணைந்தது.

ஆனால் அப்பொழுது அது கண்டுகொள்ளப்படாத பட்சத்தில், தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட்டணியிலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன் நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறினார். மேலும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். அரசியலில் நண்பன் எதிரியாகலாம், எதிரி நண்பனாகலாம் ஆனால் துரோகிக்கு இடமில்லை என்றும் கூறினார்.

இதற்கு ஓபிஎஸ்யும் வரவேற்பு தெரிவித்திருந்தார். டிடிவி தினகரனை கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியும் டிடிவி தினகரன் நிலை மாறாமலிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுக 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று கூறியதோடு, ஆட்சிக்கு வர வேண்டுமென்ற எண்ணமெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை, தன் கையில் ஆட்சியிருந்தால் மட்டும் போதுமென நினைக்கிறார் என்றும் கூறினார். டிடிவி தினகரனுக்கும், இபிஎஸ்க்கும் பிரச்சனை பெருகி கொண்டே போவதால் இது எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.