ரத்த அழுத்தமா? கொலஸ்ட்ராலா?  இவற்றை குறைத்து மாரடைப்பை தடுக்கும் அற்புத பானம்!

Photo of author

By Amutha

ரத்த அழுத்தமா? கொலஸ்ட்ராலா?  இவற்றை குறைத்து மாரடைப்பை தடுக்கும் அற்புத பானம்! 

இந்த பானம் நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றி ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும். இதனால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும். உடல் எடையை குறைக்க கூடியது. வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய பானத்தைப் பற்றி  பார்ப்போம்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் விடவும். ஒரு சிறிய அளவு லவங்கப்பட்டை எடுத்து உடைத்து அதில் போடவும். லவங்க பட்டை நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இது உடம்பில் தேங்கியுள்ள அதிக கொழுப்புகளை வெளியேற்றி, அதிகமாக உள்ள ட்ரை கிளிசரைடு அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

அடுத்து ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். இது உடலில் உள்ள அதிகபட்ச கொலஸ்ட்ராலை குறைக்கும். இதைத் துருவி ஒரு அரை ஸ்பூன் அளவு பட்டையுடன் சேர்க்கவும்.

அடுத்து ஒரு சிறிய துண்டு அளவு மஞ்சளை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் தூளாக இருந்தால் கால் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து அதில் அரை கப் அளவு புதினாவை அலசி சுத்தம் செய்து இதில் சேர்க்கவும். இது நன்றாக கொதிக்க வைத்து பின்னர் ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும்.

அடுத்து இதில் இரண்டு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். அடுத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். தேன் நமது ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

உடம்பில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இந்த பானத்தை ஒரு வாரம் தொடர்ந்து குடிக்கவும். அதன் பின்னர் வாரத்தில் இரண்டு நாட்கள் குடிக்கவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை குறைக்கும்.