காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தறுத்த இளைஞர்..ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்..!

0
187

காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் தனது செல்போனில் இருந்து தவறுதலாக பண்ருட்டியை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞருக்கு சென்றுள்ளது.இதன் பின்னர், இருவரும் தொடர்ந்து பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றிலும் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், ஐயப்பன் அந்த மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தான் காதலிக்கவில்லை என கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஐயப்பன் மாணவியை பழிவாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி,சென்னையில் உள்ள லோக்கல் ரயில் நிலையத்தில் சிறுமியை சந்தித்த ஐயப்பன் தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அந்த சிறுமி மறுக்கவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து மாணவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அங்கிருந்தவர்கள் ஐயப்பனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்க மறுத்த 16 வயது மாணவியை ரயில் நிலையத்தில் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleBreaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!
Next articleஇந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் பிடி.உஷா..!