இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் பிடி.உஷா..!

0
143

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார்.

1927ம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆரம்பிக்கபட்டது. 1928ம் ஆண்டு முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 10 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 11 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 25 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவரும், ஆசிய அளவில் பல போட்டிகளில் வெற்றிபெற்றவருமான 58 வயதான தடகள வீராங்கனை பிடி. உஷா போட்டியிட்டார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், சக வீரர்கள், தேசிய விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிடுவதாக தெரிவித்தார். இந்த தேர்தலில் பிடி.உஷாவை எதிர்த்து யாரும் விண்ணபிக்கவில்லை. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி பிடி. உஷா இன்று தேர்வானார். இதன்மூலம், ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.