மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை! வாரி வழங்கிய வள்ளல் கைது! 

மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை! வாரி வழங்கிய வள்ளல் கைது! 

மேம்பாலத்தில் திடீரென பெய்த பணமழை!  பப்ளிசிட்டி வாரி வள்ளல் கைது! 

மேம்பாலத்தின் மேல் நின்று கோட் சூட் அணிந்த ஆசாமி ஒருவர் திடீரென பணத்தை அள்ளி வீசியதால் அதை எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கர்நாடகாவின் பெங்களூர் கே.ஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும். பணத்தைக் கண்டால் பிணம் கூட வாயை திறக்கும். என்ற பழமொழிகள் மனிதனுக்கு பணத்தின் மேல் இருக்கின்ற ஆசைகளை வெளிச்சம் போட்டு காட்டுவனவாக இருக்கின்றன. பணத்தாசை யாரையும் விட்டு வைக்காது. இத்தகைய பணத்தின் மேல் ஆசை இல்லாமல் ஒருவர் நடுரோட்டில் வீசி எறிந்த நிகழ்வும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் மையப் பகுதியில் இருக்கும கே.ஆர் மார்க்கெட் வீதி எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அங்கு நேற்று வியாபாரிகள் மக்கள் கூட்டம் என வழக்கம் போல் அலைமோதி கொண்டிருந்தது.அங்கு திடீரென மேம்பாலத்தின் மீது இருந்து 10 ரூபாய், 500 ரூபாய், நோட்டுகள் திடீரென மழையாக பொழிய தொடங்கின. கோட் சூட் அணிந்து, கழுத்தில் சுவர் கடிகாரம் ஒன்றை மாட்டிக் கொண்டு  டிப்டாப்பாக டூவீலரில் வந்து இறங்கி ஆசாமி தனது கையில் இருந்த பையில் பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.

திடீரென பணமழை பொழிந்ததும் அதிர்ச்சி அடைந்த மக்கள் திகைத்து விட்டு பின்னர் அதை பொறுக்க போட்டா போட்டி போட்டனர். முதலில் மேம்பாலத்தின் கீழே இடதுபுற சாலையில் பணத்தை வீசி ஆசாமி அடுத்து வலது புறமும் சென்று பணத்தை அள்ளி வீசினார். இதனால் பணத்தைப் பொறுக்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே கூட்டம் அலைமோதும் கே ஆர் மார்க்கெட் இந்த சம்பவத்தினால் அதிக நெரிசலுக்கு ஆளானது.

சம்பவத்தை கேள்விப்பட்ட போக்குவரத்து போலீசாரும் கே ஆர் மார்க்கெட் போலீசரும் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த ஆசாமி தன் வைத்திருந்த டூவீலரில் ஏறி தப்பிச் சென்றார். திடீரென வாலிபர் பணத்தை வீசி எறிந்ததும் அதை எடுக்க மக்கள் போட்டி போட்டதும் மக்கள் பலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரல் ஆக்கினர். தாங்கள் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட அது அதிகம் பேசும் பொருளானது. போலீசாரும் பணத்தை வீசி எறிந்த நபரைப் பற்றி விசாரணை செய்தனர்.

விசாரணையில் பணத்தை வீசி எறிந்தவர் பெயர் அருண் என்பதும் அவர் பெங்களூர் நாகரபாவியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொழிலதிபரான அருண் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் இவர் அருண் வி டாட் 9 என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இவர் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் என 4 ஆயிரத்தை வீசி எறிந்தது தெரிய வந்தது.

அவர் எதற்காக கழுத்தில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு பணத்தை வீசி இருந்தார் என்று போலீசார் விசாரணை செய்ததில் பப்ளிசிட்டிக்காக செய்ததாக அருண் கூறியுள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

For the attention of the students writing the public examination! The announcement made by the Department of Education!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது. கடந்த டிசம்பர் மாதம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் மீண்டும் … Read more

மக்களே எச்சரிக்கை பண பரிவர்த்தனை முழுமையாக பாதிக்க வாய்ப்பு! வங்கிகள் தொடர் விடுமுறை!

People beware of the chance to completely affect the money transaction! Bank holiday!

மக்களே எச்சரிக்கை பண பரிவர்த்தனை முழுமையாக பாதிக்க வாய்ப்பு! வங்கிகள் தொடர் விடுமுறை! மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தபடுவதாக அறிவித்தனர்.அந்தவகையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கபடுவது வழக்கம் தான்.அதனை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.அதனை தொடர்ந்து தான் வரும் ஜனவரி 30,31 … Read more

இந்த வங்கியில் FD கணக்கு வைத்து இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு நல்ல லாபம் தான் !

இந்த வங்கியில் FD கணக்கு வைத்து இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு நல்ல லாபம் தான் !

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி ஆனது தனது வங்கியில் ரூ. 2 கோடிக்கும் குறைவான அளவில் பிக்ஸட் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியினை வழங்கியுள்ளது. அதாவது வங்கி தற்போது ரூ. 2 கோடிக்கும் குறைவான பிக்ஸட் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 24, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்பது தெரிய வந்துள்ளது. சாதாரண மக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குக்கு 3.00% … Read more

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

Continuity in the government school! Pity what happened to the students who ate lunch!

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்! தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறை படுதப்பட்டுள்ளது.டெல்லி ஷாதாராவில் உள்ள அரசுப் பள்ளி மற்றும்  தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அனைத்து அரசு பள்ளியில் மதிய உணவு வழங்கபடுகிறது.அந்த வகையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட ஒன்பது பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக … Read more

தமிழ்நாடு வனத்துறையில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு வனத்துறையில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் (AIWC) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Senior Research Fellow Research Assistant 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் … Read more

தமிழக அரசில் மாதந்தோறும் ரூ.85,000 சம்பளத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

தமிழக அரசில் மாதந்தோறும் ரூ.85,000 சம்பளத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் Tamil Nadu Green Climate Company (TNGCC) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 08 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Finance Officer – 1 பணியிடம் Technical Officer -1 பணியிடம் Admin Officer – 1 பணியிடம் Admin Associate – 4 பணியிடங்கள் Advisor – 1 பணியிடம் 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு! 

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு! 

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு!  நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்திலும் ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான … Read more

ஆயுர்வேதத்தின்படி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் சாப்பிடவேண்டிய சூப்பர்ஃபுட்ஸ்!

ஆயுர்வேதத்தின்படி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் சாப்பிடவேண்டிய சூப்பர்ஃபுட்ஸ்!

1) திரிபலா பொடி: திரிபலா பொடியை நெய் மற்றும் தேனுடன் சம அளவு கலந்து இரவில் உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 2) நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதால் உங்கள் விழித்திரை செல்கள் பாதுகாக்கப்படுகிறது மற்றும் ஆரோக்கியமான தந்துகிகளை மேம்படுத்துவதிலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. 3) கல் உப்பு: கண்களுக்கு நல்ல உப்பு கல் உப்பு மட்டுமே. எனவே உங்கள் உணவுகளில் மற்ற உப்புகளை காட்டிலும் அதிக … Read more

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!  மெட்ரோ ரயிலில் இடம் பிடிப்பதற்காக இளம் பெண் ஒருவர் சந்திரமுகி போல் வேடம் அணிந்து அனைவரையும் பயமுறுத்தி அதில் வெற்றி பெற்று வெற்றிகரமாக இடத்தை பிடித்துள்ளார். மெட்ரோ  ட்ரெயினில் காலை மாலை என இரு வேளையும் பணி நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  இதில் நின்று கொண்டு செல்வதே பெரும்பாடு எனும் போது அதற்கு இடம் கிடைத்தாலே போதும் என்ற சூழல் காணப்படும். கல்யாண … Read more