இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் நான்கு பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இயக்கப்பட்டு வருகின்றது.இந்த பேருந்து இயக்கப்பட்டத்தில் இருந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பேருந்தானது நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல் கிணறு பகுதியில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.இடையில் வேறு எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும் நிற்காது.
இந்த பேருந்தானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டது. வடசேரி பேருந்து நிலையத்தில் நான்கு கண்டக்டர்களும் ,திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நான்கு கண்டக்டர்களும் பணியில் இருப்பார்கள்.பயணிகள் அனைவரும் ஏறி இருக்கைகள் நிரம்பிய பிறகு கண்டக்டர்கள் ஏறி டிக்கெட் கொடுத்து விட்டு இறங்கி விடுவார்கள்.அதன் பின்பு பேருந்து இயக்கப்படும்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளும் கொரோனா பரவல் காரணமாக இந்த பேருந்துகள் கண்டக்டருடன் இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இந்த பேருந்துகள் மீண்டும் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றது. பேருந்து நிலையத்தில் வைத்தே டிக்கெட் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனைதொடர்ந்து கண்டக்டர் இல்லாமல் பேருந்தை இயக்கினால் வசூல் குறையும்.மேலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.