“ரஜினி அஜித் விஜய் எல்லாம் உதவுவார்கள் என நம்புகிறேன்…” நடிகர் போண்டா மணி கோரிக்கை

“ரஜினி அஜித் விஜய் எல்லாம் உதவுவார்கள் என நம்புகிறேன்…” நடிகர் போண்டா மணி கோரிக்கை

நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக செயலிழப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது.

இது சம்மந்தமாக அவரின் சக நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவரை சந்தித்து முழு செலவையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஏற்றுக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமனெ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்தவரான போண்டா மணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மருத்துவமனையில் சந்தித்து நிதியுதவி அளித்தார்.

அப்போது பேசிய போண்டாமணி “நான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளேன்.என் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் எல்லாம் உதவி செய்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரான போண்டா மணி நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார்.