இந்த பொருளை பயன்படுத்தினால்.. இழந்த முடியை 30 நாளில் வளர வைக்க முடியும்..!!

Photo of author

By Divya

இந்த பொருளை பயன்படுத்தினால்.. இழந்த முடியை 30 நாளில் வளர வைக்க முடியும்..!!

உங்களில் பலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். இந்த முடி உதிர்வு ஜீன் அமைப்பு, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இதை இயற்கை வழியில் சரி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம்

*முட்டை

*முருங்கை கீரை பவுடர்

செய்முறை…

முதலில் 3 பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்தி நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் ஒரு கிண்ணத்திற்கு இந்த வெங்காயத் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி அளவு முருங்கை கீரை பவுடர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 2 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயார் செய்து வைத்துள்ள வெங்காயத் தண்ணீரை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊற விடவும். பின்னர் மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வருவதன் மூலம் முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளரத் தொடங்கும்.