வேலூருக்கு வந்தார்! மணியம்மையை பார்த்தார்! கூட்டிகிட்டு போய்ட்டார் – பெரியாரை கலாய்த்த துரைமுருகன்!!
தமிழகத்தின் வட மாவட்டமான வேலூரில் கடந்த ஞாயிற்று கிழமை திமுகவின் முப்பெரு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் பெரியார் மற்றும் மணியம்மை திருமணம் குறித்து கலாய்த்து பேசினார்.மணியம்மை மட்டும் பெரியாருடன் செல்லவில்லை என்றால் “திமுக” உருவாகி இருக்காது என்று நக்கலாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் திராவிடர் முன்னேற்ற கழகம் உருவாக காரணமே வேலூர் தான்.இந்த வேலூர் மாவட்டம் இல்லாவிட்டால் கழகம் பிறந்திருக்காது.திமுக உருவாகி இருக்காது என்று கூறிய அவர் திராவிட கழகமாக பெரியாருடன் இணைந்து பணியாற்றி வந்தோம்.இந்நிலையில் ஒருமுறை பெரியார் வேலூர் மாவட்டத்திற்கு வந்தபோது மணியம்மையை பார்த்தார்.என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அவரை “கூட்டிட்டு” போய்ட்டார்.மணியம்மை தனக்கு தொண்டு செய்வதற்காக வைத்திருந்த பெரியார் நாளடைவில் அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு கடந்த 1949 ஆம் ஆண்டு அவரை மணந்தார்.அப்பொழுது பெரியாருக்கு வயது 70.மணியம்மைக்கு வயது 27.மணியம்மையை விட கிட்டத்தட்ட 40 வயது அதிகம் கொண்ட பெரியார் திருமணம் செய்த விவகாரம் திராவிடர் கழக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக “அறிஞர் அண்ணா” அவர்கள் ‘இந்த திருமணம் எங்களை இழிவு படுத்திக்கிறது.இயக்கத்திற்கு துடைக்க முடியாத பழியை தருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.இதனால்திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திமுக என்ற கட்சி உருவாக்கினார்.
ஆகவே வேலூரில் மணியம்மை என்ற பெண்மணி பிறக்காவிட்டால்,பெரியார் அவரை திருமணம் செய்யாவிட்டால் திமுக என்ற கட்சி உருவாகி இருக்காது என்று அவர் பேசியது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவியது.துரைமுருகன் பெரியாரை புகழ்ந்தாரா? இல்லை புகழ்வது போல் கலாய்த்தாரா? என்று கருத்து பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் எப்படியோ உண்மையை அந்த கழகமே ஒத்துக்கொண்டுள்ளது என்று நக்கல் அடித்து வருகின்றனர்.
மேலும் பெரியார் – மணியம்மையின் சர்ச்சை திருமணம் மீண்டும் பேசுபொருளாக மாறும் நிலையை அமைச்சர் துரைமுருகன் உருவாக்கி விட்டார்.இந்நிலையில் இந்த விஷயம் பூதாகரமாவதற்குள் திமுகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாக பெரியார்- மணியம்மை குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக துரைமுருகன் செய்தி வெளியிட்டு இருக்கிறார்.