வேஸ்ட் என தூக்கிப்போடும் வெங்காயத் தோல் இப்படி எல்லாம் யூஸ் ஆகுமா..?

0
58
#image_title

வேஸ்ட் என தூக்கிப்போடும் வெங்காயத் தோல் இப்படி எல்லாம் யூஸ் ஆகுமா..?

நம் சமையலில் வெங்காயத்தின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகும். வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு தான் சமையலுக்கு பயன்படுத்தும் நாம் அதன் தோலை குப்பையில் குப்பையில் போட்டு விடுகிறோம். ஆனால் நாம் தூக்கி போடும் வெங்காயத் தோலில் தான் அதிகளவு பயன் இருக்கிறது.

வெங்காயத் தோலின் பயன்கள்:-

1)நாம் அடிக்கடி செய்யும் பிரியாணி, தக்காளி சாதம் போன்றவற்றில் சிறிதளவு வெங்காயத் தோல் சேர்த்துக் கொண்டால் அதிக ருசியுடன் இருக்கும்.

2)வெங்காயத்தை தோலை அரைத்து மாவில் சேர்த்து ரொட்டி சுட்டால் அதிக ருசியுடன் இருக்கும்.

3)வெங்காயத் தோல் ஊறவைத்த தண்ணீரை பருகினால் அலர்ஜி, அரிப்பு நீங்கும்.

4)தினமும் வெங்காயத் தோல் தேநீர் பருகி வருவதன் மூலம் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.

5)வெங்காயத் தோலை செடிகளுக்கு வைத்தால் செடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

6)வெங்காயத் தோலில் ஹேர் டை தயாரித்து தடவினால் நரை முடி அடர் கருமையாக மாறும்.