இந்த வருட ஐபிஎல் தொடரில் கோலியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

Photo of author

By Parthipan K

இந்த வருடம் ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.  போட்டி அங்கு நடந்தாலும் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி  ரசிகர்களின் சத்தம் அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் இந்த முறை ஒரு கைதட்டல் கூட கிடைக்க பெற முடியாத நிலையில் வீரர்கள் உள்ளனர்.
இதுகுறித்து நியூசிலாந்து அணி யின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் வெளிநாட்டு வீரர்கள் ரசிகர்கள்  இல்லாமலும் மற்றும் குறைவான ரசிகர்களோடும் விளையாடி உள்ளார்கள். ஆனால் விராட் கோலியை போன்ற வீரர்கள் 10 வருடத்திற்கு மேல் விளையாடியுள்ளனர். அவர்கள் தடுமாறமாட்டார்கள். ஆனால், ரசிகர்களை எங்கே என வீரர்கள் வியப்படைவார்கள். அவர்கள் எனர்ஜிக்காக அடுத்த வழியை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று கூறினார்.