PF தொகையை இவ்வாறு கூட பயன்படுத்தலாமா? உடனடியாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளுங்கள்!!

0
89

PF தொகையை இவ்வாறு கூட பயன்படுத்தலாமா? உடனடியாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளுங்கள்!!

நாம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது நமக்கு திடீரென பண தேவைகள் இருந்தால் நம்முடைய pf பணத்தை எடுத்து உபயோகப்படுத்தலாம் அது எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம். உதாரணத்திற்கு நாம் இப்போது மேல்படிப்பு படிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு பங்களிப்பில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு வருடமாவது பணி புரிந்திருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ஆனது 15 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த பிஎஃப் பணமானது தனிப்பட்ட நபருக்கு மட்டும் அல்லாமல் அந்த நபரின் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போகும்போதும் கூட இந்த பிஎஃப் பணத்தை அவர்கள் படிப்பு செலவிற்காக நாம் எடுத்து பயன்படுத்த முடியும்.

இதே போல் நாம் ஒரு வீடு கட்டுவதற்கோ அல்லது நிலம் வாங்குவதற்கு கூட இந்த பி எஃப் தொகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 5 வருடங்கள் ஆவது அங்கு பணி புரிந்திருக்க வேண்டும். இந்த பிஎஃப் தொகையை 24 இல் இருந்து 36 முறை மாத வாரியாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏற்கனவே சொந்த வீடு இருந்து அதற்கு ஏதாவது செலவு செய்ய நினைத்தாலும் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கும் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு பிஎப் தொகையை எடுத்து இதற்கு பயன்படுத்தலாம் என்று தெரியாமல் வங்கியில் லோன் வாங்கி இந்த வேலைகளை செய்திருந்தால் கூட இந்த பி எஃப் தொகையை எடுத்து லோனை கட்ட முடியும். இதற்கு அந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டு மட்டும் பணிபுரிந்தாலே போதும். மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பிலிருந்து 90% பெற்றுக் கொள்ளலாம்.

பிஎஃப் தொகைக்கு உரிய நபரின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் அந்த நபரின் தங்கை தம்பி குழந்தைகள் என அனைவரும் தேவைகளுக்காகவும் கூட இந்த pf தொகையை தாராளமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் நாம் பணிபுரிந்து இருக்க வேண்டும் மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பில் 50% பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பிஎஃப் தொகையை எவ்வாறு அப்ளை செய்து பெறுவது என்பதை பார்ப்போம். இதற்கு EPFO என்ற இணையதளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். login செய்ய UAN மற்றும் பாஸ்வேர்டை தர வேண்டும் ஏற்கனவே இது இரண்டையும் தந்திருந்தால் அதை வைத்து login செய்து கொள்ளலாம். இல்லையென்றால் புதிதாக ஒரு UAN மற்றும் பாஸ்வேர்ட் போட்டு login லாகின் செய்ய வேண்டும்.

பிறகு இது ஆன்லைன் சர்வீசஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் கிளைம் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நம் முகவரிகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பிறகு கிளைமை கிளிக் செய்ய வேண்டும். இதை கிளிக் செய்த அடுத்த ஒரு புதிய பேஜ் ஓபன் ஆகும். அதில் பிஎப் அட்வான்ஸ் என்று நிறைய forms காட்டும். அதில் form no.31 ஐ தான் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களுக்கும் பயன்படுத்த முடியும்.

இதன் பிறகு கெட் ஆதார் OTP என்று கேட்கும் அதை கொடுத்த பிறகு, ஆதாரில் எந்த தொலைபேசி எண் கொடுத்திருக்கிறோமோ அதற்கு இந்த OTP வரும். இதை நாம் அதில் போட்டு சப்மிட் கொடுத்து விட்டால் நம்முடைய இந்த ஃபார்ம் ஆனது EPFO நிறுவனத்திற்கு சென்று விடும். அவர்கள் இவை அனைத்தையும் சரி பார்த்துவிட்டு நமக்கான பிஎஃப் தொகையை நம்முடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள்.

மேலும் இந்த தொகையானது நமக்கு எப்போது கிடைக்கும் என்கிற விவரத்தையும் இந்த EPFO இணையதளத்தின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.