அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

Photo of author

By Divya

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

எதிர்பாராத செலவிற்காக நம்மிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து விட்டு பின்னர் திருப்ப முடியமால் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த அடகு வைத்த நகைகள் அனைத்தையும் விரைவில் மீட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும்.

பரிகாரம்…

வெள்ளிக்கிழமை காலை 7 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி அதன் மீது ஒரு துளி குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதன் மீது ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்து அதன் மீது எலுமிச்சம் பழம் ஒன்று வைத்து பூ வைத்து பூஜை அறையில் வைத்து தூப தீபம் காட்டி வழிபடவும்.

பின்பு அதை அப்படியே கொண்டு வந்து பீரோவில் பணம், நகை வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.

வாரம் ஒருமுறை இதை மாற்றி அனைத்தையும் கால் படாத இடத்தில் போடவும். அல்லது எலுமிச்சம் பழத்தை மட்டும் போட்டு விட்டு உப்பை பாத்திரம் கழுவும் இடத்தில் கரைத்து ஊற்றி விடவும்.

தொடர்ந்து 9 வாரங்களுக்கு செய்வதற்குள் அடகு வைத்த நகைகளை மீட்க வழி பிறக்கும்.