டோனியால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியுமா?

Photo of author

By Parthipan K

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்.எஸ். டோனி கடந்த ஒரு வருடமாக விளையாடாமல்த காரணத்தால் அவரால் ஐபிஎல் போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க இயலுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அனில் கும்ப்ளே டோனியால் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் கூட, நான் 2-வது சீசனில் விளையாடிய போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தேன். ஐபிஎல் அணியில் என்னைத் தவிர மற்ற ஏழு அணிகளிலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்தான் தலைமை பயிற்சியாளராக உள்ளனர். ஐபிஎல் போட்டியில் மேலும் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் என்று கூறினார்.