இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா?

Photo of author

By Divya

இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா?

வீட்டை சுத்தம் செய்வது பற்றி நினைத்தலே பலருக்கும் தலை சுற்றும். இதனாலேயே பலரும் வீட்டை சுத்தம் செய்ய சலித்து கொண்டு பண்டிகை காலங்களில் மட்டும் சுத்தம் செய்கின்றனர்.

ஆனால் சில சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்தினால் வீடு சுத்தம் செய்வது கூட சுலபமான வேலை ஆகிவிடும்.

ட்ரிக் 01:-

1 வாலி தண்ணீரில் எலுமிச்சம் பழ சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலக்கி வீட்டை துடைத்தால் படிந்து கிடந்த அழுக்கு முழுவதும் அடியோடு வந்துவிடும்.

ட்ரிக் 02:-

வீடு முழுவதும் சோடா உப்பை தூவி விட்டு தண்ணீர் தெளித்து 10 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு அடித்து விட்டால் அவை உடனடியாக பளிச்சிடும்.

ட்ரிக் 03:-

ஒரு கிண்ணத்தில் சோப் தூள் சிறிதளவு, கல் உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கலந்து வீடு முழுவதும் தெளித்து ஊறவிட்டு பின்னர் தண்ணீர் கொண்டு துடைத்தால் வீட்டு தரை பளிச்சிடும்.

ட்ரிக் 04:-

வெந்நீரில் கல் உப்பு போட்டு கரைத்து தரையில் அழுக்கு உள்ள இடத்தில் தெளித்து துடைத்தால் தரை பளிச்சிடும்.

ட்ரிக் 05:-

சோப் தூள், சோடா உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து வீட்டை துடைத்தால் தரையில் படிந்து கிடந்த அழுக்கு முழுவதும் நீங்கிவிடும்.