பிரியாணி சாப்பிட்டு கூட உடல் எடையை குறைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அனுபவ உண்மை!
உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற கொள்ளு பருப்பை சாப்பிட்டு வரலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு கொள்ளு பருப்பு பிடிக்காது. அப்படி இருக்கையில் அதில் பிரியாணி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். அதே சமயம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளும் கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)கொள்ளு பருப்பு – 250 கிராம்
2)கேரட்(நறுக்கியது) – 1/2 கப்
3)தக்காளி – 5(நறுக்கியது)
4)பச்சைப் பட்டாணி – 1 பாக்கெட்
5)பெரிய வெங்காயம் – 3(நறுக்கியது)
6)இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
7)மட்டன் அல்லது சிக்கன் மசால் – 3 தேக்கரண்டி
8)கர மசால் – 2 தேக்கரண்டி
9)நெய்- 100 கிராம்
10)உப்பு – தேவைக்கேற்ப
11)பிரியாணி இலை – 2
12)பட்டை – 1 துண்டு
13)இலவங்கம் – 4
14)பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
15)சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ
கொள்ளு பிரியாணி செய்முறை:-
முதலில் கொள்ளு பருப்பை சுத்தம் செய்து குக்கரில் போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவிட்டு 5 விசில் விட்டு எடுக்கவும்.
அதன் பின்னர் பிரியாணிக்கு வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை நறுக்கி வைக்கவும். பிறகு இஞ்சி பூண்டை தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கர் வைத்து 100 மில்லி நெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு பிரியாணி இலை, பெருஞ்சீரகம், இலவங்கம், பட்டை சேர்க்கவும்.
அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பட்டாணியை சேர்த்து கிளறவும்.
காய்கறிகள் பாதியாக வெந்து வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின்னர் கரம் மசால், மட்டன் மசால் சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
5 நிமிடங்களுக்கு பின்னர் ஊறவைத்துள்ள அரிசி, வேக வைத்த கொள்ளு சேர்க்கவும். வாசனைக்காக சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து 2 விசில் விட்டு எடுத்தால் சுவையான பிரியாணி தயார். இந்த பிரியாணி உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.