இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!
கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும் இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில் இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உருமாறி பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
இந்த தொற்றானது கொரோனா தொற்றை விட 50 % அதிகளவு பாதிப்பை கொண்டதாக இருக்கும் என கூறியுள்ளனர்.நமது இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து வந்த மகராஷ்டிராவை சேர்ந்தவருக்கு முதன் முதலில் இத்தொற்றானது உறுதிசெய்யப்பட்டது.அதனையடுத்து தற்பொழுது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது.தற்பொழுது மட்டும் மகராஷ்டிராவில் 80 க்கும் மேற்பட்டோருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவற்றில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில்ஒமைக்ரான் சற்று அதிகரித்து வருகிறது.அதுமட்டுமின்றி மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மாநிலங்களின் தொற்று எண்ணிக்கைக்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்தவும் மாநில அரசுக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ,மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோருடன் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
தற்பொழுது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு பாதிப்பு அளிக்காமல் இருக்க சுழற்சி முறையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.தற்பொழுது அந்த சுழற்சி முறையை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.