ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

0
58
Only 50% of people are allowed in the temples! State Government Action!
Only 50% of people are allowed in the temples! State Government Action!

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

கொரோனா தொற்றானது மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இத்தொற்று ஆரம்பகட்ட காலத்திலிருந்து இன்று வரை உலக நாடுகள் அனைத்தும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. மேலும் இவற்றிலிருந்து மக்கள் மீண்டுவந்து நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் போதெல்லாம் இத்தொற்றானது புதிதாக உருமாறி மீண்டும் அதிக பாதிப்பை உருவாக்குகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை  தற்போதுதான் முடிவடைந்துள்ளது. தற்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்காவில் கரோனா தொற்றானது ஓமக்ரானாக உருமாறி பல நாடுகளில் பரவி வருகிறது.

முதலில் இந்தியாவில் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே இத்தொற்று குறைந்தபட்ச எண்ணிக்கையில் காணப்பட்டது. தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கமும் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது மகாராஷ்டிராவில் அதிக அளவில் ஒமைக்ரான் பரவல் காணப்படுகிறது. அதனால் அம்மாநில முதல்வர் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை  தற்பொழுது அமல்படுத்தி உள்ளார்.

இது பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு ,பொங்கல் என அடுத்தடுத்து வர உள்ளது. இந்த பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவர். இதனால் தொற்றானது அதிக அளவு பரவக்கூடும். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களில் வழிபாட்டு தலங்களில் மக்கள் 50% மட்டுமே கூடுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆலயங்களில் வண்ண வானவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த தடை விதித்துள்ளனர். மேலும் மக்கள் ஆலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மிகவும் எளிமையான முறையில் மட்டுமே கொண்டாட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு  நாளில் மட்டும் 23 பேர்  ஒமைக்ரான் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

தற்பொழுது அதன் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்றிலிருந்து 42 பேர் மட்டுமே தற்போது வரை குணமடைந்துள்ளனர். தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மகாராஷ்டிரா  மாநில அரசு இவ்வாறான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.