கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!

Photo of author

By CineDesk

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவு உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில அலைச்சல்கள் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியுடன் செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறியகிறதே என்ற கவலையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் மேற்கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.