தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க !!

0
154
#image_title

தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க…

இன்றைய காலத்தில் உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறையற்ற உணவு பழக்கத்தால் சிலருக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. உடல் ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் நம் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். நாம் எந்த வகையான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது அதை விட முக்கியம். அதை வைத்துதான் நம் ஆரோக்கியம் இருக்கும்.

உடல் பருமன் அதிகரிகத்து விட்டால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். கவலை வேண்டாம். தொப்பையை குறைக்க சில உணவுகளை நாம் பார்ப்போம் –

காளிப்ளவர் மற்றும் முட்டைகோஸ்

காளிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவி செய்யும். இதனால், உங்கள் தொப்பை குறைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

பூண்டு

பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் வயிற்றில் உள்ள அனைத்து கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். உங்கள் சருமம் பட்டுப்போல் மின்னும்.

பட்டை

பட்டையை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும்.

முட்டை

தினமும் முட்டையை நீங்கள் சாப்பிட்டு வந்தால், முட்டை தொப்பையைக் குறைத்து, உடல் எடையை குறைக்கச் செய்யும். கண்டிப்பாக முட்டையில் உள்ள மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.

பேரிக்காய்

தினமும் பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையையும் குறைக்கும்.

ஸ்ட்ரா பெர்ரி

ஸ்ட்ரா பெர்ரி பழத்தில் அதிகளவில் நார்ச்சத்து உள்ளன. தினமும் ஸ்ட்ரா பெர்ரியை சாப்பிட்டு வந்தால், உங்கள் தொப்பை எளிதாக குறையும். உடல் மேனி மிளிரும்.

தயிர்

தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்கும். ஆதலால், தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பீன்ஸ்

பீன்ஸில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், மிக எளிதாக உங்கள் உடல் எடை குறைக்கச் செய்யும்.

இஞ்சி

தினமும் இஞ்சியை சாப்பிட்டு வந்தால், உங்க உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நிறைய நீர்ச்சத்து இருப்பதால், உங்கள் வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

கிரீன் டீ

காலையில் காபி , டீக்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக் கொண்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் வயிற்று கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைத்துவிடும்.

 

Previous articleசொத்தை பற்களால் வாயில் கூச்சம் ஏற்படுகின்றதா!!? சொத்தை பல் கூச்சத்தை போக்க எளிமையான டிப்ஸ் இதோ!!!
Next articleமுடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!?