சொத்தை பற்களால் வாயில் கூச்சம் ஏற்படுகின்றதா!!? சொத்தை பல் கூச்சத்தை போக்க எளிமையான டிப்ஸ் இதோ!!!

0
37
#image_title

சொத்தை பற்களால் வாயில் கூச்சம் ஏற்படுகின்றதா!!? சொத்தை பல் கூச்சத்தை போக்க எளிமையான டிப்ஸ் இதோ!!!

வாயில் இருக்கும் சொத்தை பற்கள் மூலமாக ஏற்படும் கூச்சத்தை சரி செய்வதற்கு சில இயற்கை முறையிலான எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் நம்முடைய வாயினை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் வாயில் உள்ள கெட்ட கிருமிகள் பற்களை பாதிக்கும். மேலும் அதிக இனிப்பு உணவுகளை சாப்பிடும் பொழுதும் மிட்டாய்களை சாப்பிடும் பொழுதும் ஒழுங்காக சுத்தம் செய்யாமல் விட்டால் வாயில் கிருமிகள் ஏற்பட்டு அந்த கிருமிகள் பற்களை அறிக்கத் தொடங்கும்.

இதனால் சொத்தைப் பற்கள் உருவாகின்றது. இந்த சொத்தை பற்களால் வலிகள் ஏற்படும். மேலும் கூச்சம் ஏற்படுகின்றது. இந்த கூச்சத்தை சரி செய்வதற்கு இந்த பதிவில் எளிமையான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

சொத்தை பல் கூச்சத்தை குணமாக்கும் வழிகள்…

* சொத்தை பல் மூலமாக ஏற்படும் கூச்சத்தை சரி செய்வதற்கு 2 அல்லது 3 துளிகள் கிராம்பு எண்ணெயில் கால் டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை கலந்து அந்த எண்ணெயை தொட்டு இரவில் படுக்கச் செல்லும் முன்னர் சொத்தை பல் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் பல் கூச்சம் ஏற்படுவது குணமாகும்.

* காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து கொண்டு பற்களை துலக்கும் முன்னர் அந்த நீரை வாயில் ஊற்றி 1 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமும் சொத்தை பற்களில் ஏற்படும் கூச்சத்தை குணமாக்கலாம்.

* 3 அல்லது 4 பற்கள் பூண்டினை தட்டி அதில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொண்டு சொத்தை பற்களின் மேல் அதை தடவ வேண்டும். இதன் மூலம் சொத்தை பல் கூச்சம் சரியாகும்.

* மஞ்சள் தூளை எடுத்து சொத்தை பற்களின் மேல் தடவி வெதுவெதுப்பான நீரினால் கழுவுவதன் மூலமாகவும் சொத்தை பல் கூச்சத்தை சரி செய்யலாம்.

* வேப்பிலை சாறு எடுத்து அதை சொத்தை பற்களின் மேல் தடவ வேண்டும். சிறிது நேரம் கழிந்து வெதுவெதுப்பான நீரினால் கழுவினால் சொத்தை பல் ஏற்படுத்தும் கூச்சம் சரியாகி விடும்.