வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியலையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Photo of author

By Divya

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியலையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

நம்மில் பலர் வீடுகளில் பெரும் தொல்லையாக இருப்பது கரப்பான் பூச்சி தான். இந்த கரப்பான் பூச்சிகளை அழிக்க அதிக செலவு செய்து மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி கரப்பான் பூச்சி நடமாட்டத்தை எளிதில் குறைத்து விடலாம்.

தீர்வு 01:

பலா இலையை உலர்த்தி பொடி செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விடுவதன் மூலம் அதன் தொல்லை நீங்கும். பலா இலை வாசனை கரப்பான் பூசிகளுக்கு அறவே பிடிக்காது.

தீர்வு 02:

1 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சரக்கரை சேர்த்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிப்பதினால் அதன் நடமாட்டம் குறையும்.

தீர்வு 03:

பெப்பர்மின்ட் ஆயிலை 1 கிளாஸ் தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்தால் அதன் தொல்லை முழுமையாக நீங்கும்.

தீர்வு 04:

5 தேக்கரண்டி வெங்காயச் சாறை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலம் அதன் தொல்லையில் இருந்து விடப்பட முடியும்.