உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!
உயர் இரத்த அழுத்தம் முதல் பல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏலக்காய் என்பது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு வாசனைப் பொருள் ஆகும். இந்த ஏலக்காய் அதிக விலை மதிப்பு கொண்ட மசாலா பொருள் ஆகும். இந்த ஏலக்காய் மசாலா பொருளாக மட்டும் பயன்படாமல் மருந்துப் பொருளாகவும் பயன்பட்டு வருகின்றது.
இந்தியாவில் ஏலக்காய் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஏலக்காயில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
ஏலக்காயில் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் ஆகியவை உள்ளது. இந்த ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்…
* ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் உயர் இரத்த அழுத்தத்தின் மூலம் ஏற்படுகின்ற பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
* ஏலக்காயை நாம் சாப்பிடும் பொழுது செரிமானக் கோளாறுகள் சரியாகின்றது.
* ஏலக்காயை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது. மேலும் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகின்றது. நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றது.
* ஏலக்காயை சாப்பிடும் பொழுது உடலில் ஹார்மோன்கள் சீராக சுரக்கின்றது.
* ஏலக்காயை சாப்பிட்டு வரும் பொழுது மன அழுத்தம் குறைகின்றது.
* சருமப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அனைவரும் ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.
* ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் நமது வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
* ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சருமம் பொலிவு பெறும்.