அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!!

Photo of author

By CineDesk

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!!

CineDesk

Updated on:

Case against Minister Ponmudi!! Sensational verdict of Chennai Special Court!!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!!

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பொன்முடி. இவர் ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இவர் பணியாற்றும்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் இருந்த அரசாங்க நிலத்தை அபகரிக்க நினைத்ததாக இவர் மீது புகார் வந்தது.

இவர் அந்த நிலத்தில் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியே அனுப்பிவிட்டு அந்த நிலத்திற்காக போலி ஆவணங்களை தயார் செய்து தனது மாமியார் சரஸ்வதியின் பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த இடத்தில் ரூபாய் 35 லட்சம் செலவில் கட்டிடம் கட்டியுள்ளார் என்று 2003 ஆம் ஆண்டு குற்றம் எழுந்தது. இவர் தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளார்.

இதை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மாமியார் உள்ளிட்ட பத்து பேரின் மீது கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் பொன்முடி தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி அதே சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எனவே இந்த வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பிற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம் கூறிய உத்தரவை உடனடியாக ரத்து செய்தது.

இதனையடுத்து பொன்முடி மீதான இந்த நிலவழக்கு தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் உள்ளபோதே பொன்முடியின் மாமியார், சார் பதிவாளர் புருபாபு, கிட்டு மற்றும் சைதை ஆகியோர் இயற்கை எய்தினர். எனவே மீதமுள்ள ஏழு பேருக்கு வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்கிற்காக 90 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிபதி ஜெயவேல் இதற்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கூறி நீதிபதி தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.