“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

Photo of author

By CineDesk

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

தமிழகம் முழுவதும் நாளை “தமிழ்நாடு நாள்” வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சென்ற ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு நாள் விழா, தமிழகம், மாபெரும் பேரணி, தமிழக அரசு, மாணவர்கள்,கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த “தமிழ்நாடு நாள்” விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியின் மூலமாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ்நாடு நாள் விழாவானது நாளை கொண்டாப்பட இருக்கிறது.

இதற்காக ஒரு பேரணி அமைத்து அதில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விதமாக அமைக்கப்பட உள்ளது.

இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழகத்தை போற்றும் வகையில், பதாகைகளை ஏந்திச் செல்வார்கள். இதேப்போல், அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் இதற்காக சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்த புகைப்படக் கண்காட்சியானது நாளை முதல் ஜூலை 23 வரை நடைபெற இருக்கிறது.இதில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த விழாவின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள் மாலை அணிவிப்பார்கள்.

இதனைத்தொடர்ந்து விழாவிற்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.அதில் “வளர்க தமிழ்நாடு” என்னும் தலைப்பில் முனைவர் ராஜேந்திரன் பேச உள்ளார்.

அதேப்போல, “எழுக தமிழ்நாடு” என்னும் தலைப்பில் ஆழி செந்தில்நாதன் பேச உள்ளார். எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த “தமிழ்நாடு நாள்” விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்யுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.