முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

Photo of author

By Jeevitha

முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

Jeevitha

Centenary Celebration of Former Chief Minister!! Minister's action announcement for free medical camp across Tamil Nadu !!

முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய  முதல்வர்  மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையொட்டி ஜூன் 24 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் 100 மருத்துவ சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அந்த முகாம் நாமகிரிப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும்  பரமத்தி வேலூர், பொத்தனூர் ஆகிய இடங்களிலும் இலவச பன்நோக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தற்போது வந்த அறிவிப்பில்  முன்னாள் முதல்வர் கலைஞர் நுற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தனது அறிவிப்பில் சென்னையில் 10 இடங்களிலும், தமிழகத்தில்  100 இடங்களிலும் நடத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த மெகா மருத்துவ முகாமில் கலந்தது கொள்ளுமாறு  அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.