தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை

0
257

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.

மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Previous articleபயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை
Next articleதமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here