டிசம்பர் 27 வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் நல்ல மழையை கொடுத்து இருக்கிறது. 2 வாரங்களுக்கு முன் உருவான மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தது.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பேய் பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கி போட்டது. மழை என்ற வார்த்தையை சொன்னாலே நடுங்கும் அளவிற்க்கு இந்த டிசம்பர் மாதத்தில் பருவ மழை, புயல் மழை, பெய் மழை மக்களை ஒரு பதம் பார்த்து விட்டது.
கன மழையின் ஆட்டம் சற்று அடங்கி இருக்கும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தற்பொழுது அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் வருகின்ற டிசம்பர் 27 ஆம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.