கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்ந்து அதிகமாக விற்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவை அளக்க உதவும் ஆக்ஸி மீட்டரின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு 95க்கும் கீழே இருந்தால் ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை ஏற்பட்டு சுவாச பாதிப்புகள் ஏற்படும்.
ஆக்சி மீட்டர் இருந்தால் ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக கணக்கிட்டு தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள முடியும். அதற்கு ஆண்ட்ராய்ட் மட்டும் iOs செயலிகள் பயன்படுகின்றன. கேமரா மற்றும் செல்போன் லைட் மூலம் துல்லியமாக ஆக்சிஜன் அளவை கணக்கிடுகின்றன. ஆக்சி மீட்டர் செயலிகள் யாவை என்பதை பற்றி பார்க்கலாம்.
1. கேர்பிளிக்ஸ் விட்டல்ஸ் (CarePlix Vitals)
கொல்கத்தாவைச் சேர்ந்த கேர் நவ் ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டாரில் கிடைக்கிறது. ஈமெயில் ஐடி மூலம் இதில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயலி தொலைபேசியில் உள்ள லைட் இன் மூலம் ஆக்சிஜன் அளவை கணக்கிடுகிறது. இரண்டு வெவ்வேறு பதிவுகள் உடன் ஒப்பிடும் பொழுது இது துல்லியமாக ஆக்சிஜன் அளவை கணக்கிட்டது.
2. எம்.பைன் (MFine)
உங்கள் செயலி ஆன்டிராய்டு போனில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த செயலி மருத்துவர்களுடன் நோயாளிகளை இணைக்கிறது. கேமரா மற்றும் லைட் மூலம் ஆக்சிஜன் அளவை கணக்கிடுகிறது. இவற்றின் முடிவுகள் ஏறத்தாழ ஒத்து இருக்கிறது.
3. பிளட் ஆக்சிஜன் (Blood Oxygen)
இந்த செயலி ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் லேவெல் மற்றும் இதயத்துடிப்பு கணிக்கிறது. சுவாச முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது மூலம் இது ஆக்சிஜன் அளவை கணக்கிடுகிறது.
4. பல்ஸ் ஆக்சிமீட்டர் டிராக்கர் (Pulse Oximeter Tracker)
ஆன்டிராய்டு போன்களில் மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய பல்ஸ் ஆக்சி மீட்டர் செயலி ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்வதற்காக பயன்படுகிறது. ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது கண்காணிக்க முடியாது. ஆனால் அனைத்து பதிவையும் சேமித்து வைக்கும்.
5. இ.இசட் விட்டல்ஸ் (Ezvitals)
பல்ஸ் ஆக்சிமீட்டர் போலவே இந்த செயலியும் ஆக்சிஜன் அளவை பதிவு செய்யாது என்றாலும், ஆக்சி மீட்டரில் பதிவாகியிருக்கும் தகவல்களை சேகரித்து வைக்கப் பயன்படும். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் என இரண்டிலும் கிடைக்கிறது. உடல் தொடர்பான தகவல்களை, தெரிந்து கொண்டு மருத்துவரிடம் பகிர உதவுகிறது.
மேற்கூறிய அனைத்து செயல்களும் அதன் நிறுவனம் வெளியிட்ட தகவல்களை வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதை அப்படியே நம்பாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.இதை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.