State

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!..

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!..

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் மகளிர் கான்வென்ட் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சில தினங்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலர் கான்வென்ட்டுக்குள் மறைமுகமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த நபர்கள் ஓடத் தொடங்கினர்.

பின்னர் அந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைதொடர்ந்து அவர்களிடம் போலீசார்கள் விசாரித்து வந்தனர். நடத்தப்பட்ட விசாரணையில் நெஞ்சை உலுக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதுமர்ம நபர்கள் 4 பேரும் அடிக்கடி கான்வென்ட் விடுதிக்குள் சென்று அங்கிருந்த சில சிறுமிகளுக்கு மது அருந்த கொடுத்து பிறகு அவர்களை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் கான்வென்ட்டுக்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பி பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் ரகசியமாக வாக்குமூலம் பெற்றனர்.அந்த சிறுமி கூறியதை தொடர்ந்து2 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த இரண்டு பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அச்சிறுமிகளின் ஒரு சிறுமி ஆண் நண்பர் தான் கான்வென்ட் ஹாஸ்டலில் ரகசியமாக சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.அதைத்தொடர்ந்து அவர் தனது இரண்டு நண்பர்களை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக 9 மதுவை கொண்டு வர ஆரம்பித்தனர்.அதனை குடிக்க வைத்து தனது பாலியல் கொடுமைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

கான்வென்ட்டிற்குள் நுழைய வேறு யாரிடமாவது உதவி பெற்றதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

Leave a Comment