சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டார்!! ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் விடுவிக்கப்பட்டார்!!
சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று மாற்றப்பட்டார். ஏற்கனவே பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் இன்று மாற்றப்பட்டுஅந்த பணிக்கு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் நியமிக்கப்பட்டார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே7 ஆம் தேதி பொறுப்பேற்றார் அன்று முதல் பல அதிரடி மாற்றங்களையும் தீர்மானகளையும் செய்து வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனி செயலாளர்களாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் மற்றும் ஏற்க்கனவே தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தோற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது இதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முதல்வர் ஸ்டாலினிடம் வைக்கப்பட்டன.
இது போன்ற கடினமான சூழ்நிலையில் அனுபவம் நிறைந்த ஒருவரை சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதனால் ஏற்க்கனவே சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் அப்பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ககன் தீப் சிங் பேடி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். இப்பொது தமிழகத்தின் வேளாண் துறை முதன்மை செயலாளராக உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.