ரெய்னாவை கடுமையாக விமர்சித்த சென்னை உரிமையாளர்

Photo of author

By Parthipan K

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறிய ரெய்னா, உடனடியாக நாடு திரும்பினார். சுரேஷ் ரெய்னாவின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால், இந்த பிரச்சினையால் நாடு திரும்பியிருக்கலாம் எனவும் பேசப்பட்டது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் ரெய்னாவை கடுமையாக விமர்சித்துள்ளார். சீனிவாசன் கூறுகையில், “ ஐபிஎல் தொடர் இன்னும் தொடங்கவில்லை.  ரெய்னா  தனது வருமானம் 11 கோடியை இழப்பார் என்பதால் ரெய்னா தவறை உணர்வார். தலைக்கனத்தால் சில நேரம் இப்படி நிகழும். யாருக்கு பிடிக்கவில்லையே, யாருக்கு மகிழ்ச்சி இல்லையோ அவர்கள் தாராளமாக திரும்பிச்செல்லாம். யாரையும் எதையும் செய்ய வேண்டும் என நம்மால் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறினார்.