சுரேஷ் ரெய்னா விலகியதன் பின்னணி என்ன? டோனிதான் காரணமா?

0
170

ஐ.பி.எல் அணியில் கலந்துகொள்ளும் மற்ற அணிகள் அனைத்தும் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் சென்னையில் ஒருவாரம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிற்சி முடிந்த பின்னரே சென்னை அணி கடந்த 21-ஆம் தேதி துபாய் சென்றது. அங்கு வீரர்கள் ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பிறகு 28-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்த போது, சென்னை அணியில் இருந்து 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதைக் கேட்டு அதிருப்தியடைந்த ரெய்னா, சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டது தான் கொரோனா பிரச்சினைக்குக் காரணம்.

சென்னையில் ஏன் கேம்ப் அமைத்தீர்கள் என்று அணிநிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு காசி விஸ்வநாதன், இது டோனியின் முடிவு என்று பதில் கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் வீரர்கள் தனிமைப்படுத்துதலைச் சரியாக மேற்கொள்ளவில்லை என்ற கோபமும் ரெய்னாவுக்கு இருந்துள்ளது. இதனால் டோனியிடம் சென்ற சுரேஷ் ரெய்னா வீரர்களின் செயல்பாடு குறித்தும், சென்னை கேம்ப் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட, இந்த வாக்குவதத்தின் முடிவில் தான் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகில் இந்தியாவுக்கு திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleசீனாவில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்
Next articleரெய்னாவை கடுமையாக விமர்சித்த சென்னை உரிமையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here